ஐயா, இதுதான் முடிவின் 
அடையாளமா-?
IS THIS THE SIGN OF THE END, SIR-? 
62-12-30E
பிரான்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், 
இந்தியானா,   அமெரிக்கா.


 
1 உமக்கு மிக்க நன்றி, சகோதரன் நெவில். மாலை வணக்கம். என் விலையேறப் பெற்ற நண்பர்களே. நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய பணியில், இன்றிரவு மறுபடியுமாக இங்கு இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. 
2 (சகோ.நெவில் ஒலிபெருக்கியைக் குறித்து பேசுகின்றார் - “இங்கே இருக்கின்றது நேரடி ஒலிப்பதிவாகுதலான ஒன்றாகும் - ஆசி). இது ஒரு...  இது தானே.  ஓ, ஆம். அது அருமையானதாகும். 
3 இன்று காலை உங்களை நீண்ட நேரம் நிறுத்தி வைத்துவிட்டேன். இன்றிரவு கூட்டத்தை விரைவில் முடிக்கவேண்டுமென்று எண்ணி இருக்கின்றேன். காலையில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது மிகவும் சிரமமாய் இருந்திருக்கும். இன்றிரவும் கூட நீங்கள் நின்று கொண்டிருக்க வேண்டிய சிரமம் இருக்கும். சபை கட்டி முடிந்தால், உங்களுக்கு போதிய இடம் இருக்கும். அந்த நாள் அதிக தூரத்தில் இல்லை. இன்றிரவு நீண்ட நேரம் தங்கியிருக்க நாங்கள் உத்தேசிக்கவில்லை.
4 ஆனால் நாளை இரவு சற்று நேரம் அதிகம் தங்க நாங்கள் எத்தனித்துள்ளோம். உங்களில் சிலர் நாளை இரவு வரக்கூடுமானால்... அப்பொழுது கர்த்தருக்குள் மகத்தான ஓர் நேரத்தை நாங்கள் எதிர் நோக்குகிறோம். நாளை இரவு சிறந்த மனிதர்கள் இங்கு இருப்பார்கள். நம்மெல்லாருக்கும் மகத்தான நேரம் உண்டாகி இருக்கும். 
5 சகோ.பிரான்ஹாமின் சகோதரன், சகோ.எட்கர் பிரான்ஹாம், “ஓ, தேனே, பொறுங்கள்-! உம்மிடத்தில் நான் ஒன்றைக் கேட்க வேண்டும். உங்களிடத்தில் அதை நான் கூற மறந்து விட்டேன். ஆனால், இங்கு இருக்கின்ற அநேக ஜனங்கள் நீர் எப்பொழுதுமே அவசரமாக ஆராதனையை முடித்து சென்று விடுகிறீர் என்று கூறினர். ஆனால் நாளை இரவு நீர் விரும்பின எல்லா நேரத்தையும் எடுத்துக் கொள்ளலாம், 7 முதல் 12 வரை, நீர் அவ்வாறு நினைத்தால், இப்பொழுது இதை அவர்களுக்கு விளக்கலாம் என்று கூறுகிறார்-ஆசி). 
6 நாளை நள்ளிரவு நாங்கள் இராப்போஜனம் பரிமாறப் போகின்றோம். அதில் பங்கு கொள்ள விரும்புவீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். மற்றவர்கள் கூக்குரலிட்டுக் கொண்டும், குடித்து வெறித்துக் கொண்டும் இருக்கும் நேரத்தில், நாம் பயபக்தியுடன் தேவனுக்கு முன்பாக தலை வணங்கி, (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) இராப் போஜன பந்தியில் பங்கு கொண்டு, நமது உறுதி மொழியுடன் புதிய ஆண்டைத் தொடங்குவோம். நமது இருதயங்களை நாம் தேவ னுக்குப் பிரதிஷ்டை செய்வோம். 
7 நாளை இரவு சில சிறந்த பேச்சாளர்கள் இங்கு நிச்சயம் வருவார்கள். சில சிறந்த... ஜார்ஜியாவில் இருந்து சகோ.பாமர் (Bro. Palmer) இங்கு வருவார். அவர் ஒரு சிறந்த பேச்சாளர். சகோ. ஜுனியர் ஜாக்ஸனும், நம்மிடையே நாளை இரவு இருப்பார். சகோ. பீலர், சகோ.நெவில் ஓ, என்னே, என்னே-! மற்றும் பல தேவனுடைய சிறந்த மனிதர்கள் இங்கிருப்பார்கள். மேலும் சகோ.வில்பர்ட்-காலின்சும் இருப்பார். இச்சகோதரர் அனைவரும் மகத்தான செய்திகளை நமக்கு இது வரை அளித்து வந்து உள்ளனர். வேறு சிலரும் பங்கு கொள்வார்கள். எனவே நாளை இரவு ஓர் மகத்தான நேரத்தை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம். 
8 இப்பொழுது “இதை நீங்கள் கூறவேண்டாம்,'' என்று என் மனைவி என்னிடம் சொன்னாள். இருந்தாலும் இதை நான் கூறியே ஆகவேண்டும். இன்று காலை, 'அம்பயர்' (Umpire) என்பதற்குப் பதிலாக, ‘எம்பயர்' (Empire) என்று நான் கூறியதற்கு வருந்துகிறேன். (சகோ.பிரான்ஹாம், சபையாரும் சிரிக்கின்றனர் - ஆசி).
பின்னால் அமர்ந்திருந்த பில்லி, “அவர் தவறு செய்கிறார் பாருங்கள்'' என்றானாம். 
9 "அவனுக்கு ராஜ்யம் (empire) அவசியம்,'' என்று நான் சொன்னேன். உண்மையில் நான் விளையாட்டில் இருக்கும் நடுவரையே (Umpire) குறிப்பிட்டேன். 
10 ஹாலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவன், “நான் கூறுவதை எடுத்துக் கொள்ள வேண்டாம்; நான் எதை அர்த்தங்கொள்கின்றேனோ அதை மாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்றான் அல்லவா-? 
11 அவனைப் போன்று நான் இருக்கின்றேன். இவர்கள் இத்தனை வருடகாலமாக நான் கூறிவந்துள்ளதை புரிந்து கொண்டு வந்திருக்கின்றனர் என்று கருதுகிறேன் என்று கூறினேன். நீங்கள் அறிகிறீர்கள், இது அதைக்குறித்து.... 
12 இந்த மேடையின் மேல் நின்றுகொண்டு, 30 ஆண்டு காலமாக நான் பிரசங்கம் நிகழ்த்தி வந்திருக்கிறேன்- 30 ஆண்டுகளாக இந்த கூடாரத்தில்-! இந்நேரம் நீங்கள் என்னை அறிந்து கொண்டிருக்க வேண்டும். இல்லையா-? ஓ, என்னே-! என் கல்வி மிகவும் குறைவானது. என்னால் சரிவர பேச இயலாது என்பதை நான் - நான் அறிவேன், ஆனால்  கர்த்தருக்காக  நான்  ஒரு  சத்தியமுள்ள  சத்தமிடுகிறேன். 
13 லாம்சா வேதாகமத்தை மொழி பெயர்த்த டாக்டர். லாம்சா என்பவர் இவ்விதம் கூறியுள்ளார். 
14 ஒரு முறை நான் பிரசங்கம் செய்து கொண்டு இருக்கும் போது, அவர் அங்கிருந்தது எனக்குத் தெரியாது. பிரசங்கம் முடிந்தவுடன் அவர் ஊரீம், தும்மீம் என்பவைகளைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார். நான் கூறினேன்.... அவர் அந்த ஒளியைக் குறிப்பிடும் போது, “இன்றைய மக்களுக்கு என்ன நேர்ந்தது-? மொழி பெயர்ப்பாளர்கள் வேதாகமத்தை சரிவர மொழி பெயர்க்க முடியாததன் காரணம் என்னவெனில், அவர்கள் உயர்வான மொழியில் (Yiddish) மொழி பெயர்க்க முயன்றனர். ஆனால் இயேசுவோ வீதியில் செல்லும் சாதாரண ஜனங்கள் பேசும் மொழியையே பேசினார்,” என்றார். 
15 லூக்காவில், “சாதாரண ஜனங்கள் (The Common People) அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடு கேட்டார்கள்'' என்று ஒரு வசனம் இருக்கின்றது. அவர்களுடைய சாதாரண மொழியில் அவர் பேசினார். அது போன்று மறுபடியும் சம்பவிக்கின்றது என்று நான் நம்புகிறேன். 
16 நாம் கர்த்தருக்காக மகிழ்ச்சி உள்ளவர்களாய் இருக்கிறோம். இப்பொழுது, அந்த ஸ்திரீகள் அங்கு நிற்பதை நான் காண்கிறேன். ஆண்கள் நிற்பதைக் காண்பதே சற்று வருத்தமாக இருக்கும். அப்படியிருக்க வாலிப பையன்களும் பெண்களும், ஸ்திரீகளும் மற்றவர்களும் சுவற்றின் பக்கத்தில் நின்று கொண்டு இருக்கின்றனர். எல்லாரும் உட்காருவதற்கு இங்கு போதிய இடம் கிடையாது. இவ்வாரம் கழிந்த பின்பு, அடுத்த முறை நாம் கூட்டங்களை நடத்தும்போது, ..... 
17 நாம் அறிந்துள்ளபடி அடுத்ததாக பிரசங்கம் செய்யப்பட வேண்டியது ஏழு முத்திரைகளைக் குறித்ததாகும். கர்த்தருக்குச் சித்தமானால், இந்த கூடாரம் கட்டி முடிந்தவுடன், அவைகளின் பேரில் நாம் பிரசங்கம் செய்யத் தொடங்கலாம். எப்படியாயினும், இக்கூடாரத்தின் மறுபிரதிஷ்டைக்கு நாம் வரவேண்டியவர்களாய் இருக்கிறோம். 1, 2 அல்லது 3 வார கூட்டங்கள் ஏழு முத்திரைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும். அச்சமயம் கர்த்தருக்குள் மகத்தான ஓர் நேரத்தை நாங்கள் எதிர் நோக்கி இருக்கிறோம். ஆகவே நாங்கள்... பட்டணத்தின் வெளிப்புறத்திலிருந்து இங்கு வந்துள்ள உங்களுக்கு, கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்ட தேதிகளை தபால் மூலம் 1 அல்லது 2 வாரங்களுக்கு முன்பே அறிவிப்போம். 
18 இந்த கூடாரம் பெப்ரவரி 10-ம் தேதி கட்டி முடிக்கப்படும் என்று கான்ட்ராக்டர் கூறியதாக பில்லி இன்றிரவு என்னிடம் கூறினான். அப்படியானால், நாம் பெப்ரவரி 15-ம் தேதி முதல் கூட்டங்களைத் தொடங்கலாம். அவர்கள் கட்டி முடித்தவுடனே, நாம் தொடங்கிவிடலாம். 
19 வயோதிப சகோதரி கிட் (Sister Kidd) சற்று முன்பு என்னை சந்தித்தார்கள். அவர்கள் கண்கள் கலங்கியிருந்தன. அவர்கள் என்னிடம், “சகோ.பிரான்ஹாம், நாங்கள் எவ்வளவு முயன்றும் எங்கள் பழைமையான கார் ஓடவில்லை. அது ஓடவேண்டும் என்று ஜெபம் செய்யுங்கள். அப்படியானால் நாளை நான் கூட்டத்திற்கு வருவேன்,'' என்றார்கள். “நான் தங்குவதற்கு ஏதாகிலும் இடம் கிடைக்குமா-?” என்று அவர்கள் கேட்டார்கள்.
20 நான், “சகோதரி கிட், கவலைப்பட வேண்டாம். இங்கு நீங்கள் வந்தவுடன் தங்குவதற்கு ஒரு அறையை ஆயத்தமாக வைத்திருப்பேன்,'' என்றேன். 
21 அவர்கள், “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக-! ஆராதனையை நீங்கள் நள்ளிரவு வரை நடத்தினால், அந்நேரத்தில் நான் திரும்பிச் செல்ல விரும்பவில்லை,” என்றார்கள். 
22 சகோதரன் கிட்டும், சகோதரி கிட்டும், ஏறக்குறைய 85 வயது நிரம்பியவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் இன்னுமாக ஊழியம் செய்து கொண்டு வருகின்றனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா-? அவர்களிடம் ஒலிப்பதிவு கருவி (Tape Recorder) ஒன்று இருக்கின்றது. என் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ள ஒலி நாடாக்களை அவர்கள் எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக, வீடு வீடாகச் சென்று, செய்திகளை ஒலிப்பதிவு கருவியில் போட்டு அவர்கள் கேட்கும்படி செய்கின்றனர். இப்பொழுதும் அவர்கள் ஊழியத்தை விட்டுவிடவில்லை, ஓய்வு பெறவுமில்லை. அவர்கள் விசுவாசத்தில் இறுதி வரை நிலை நின்று, பட்டயத்தைக் கையில் ஏந்தினவர்களாய் மரிப்பார்கள் என்பதையே அது காட்டுகின்றது. அதுதான் செல்லவேண்டிய சரியான வழியாகும். நானும் அவ்விதமே செய்ய விரும்புகிறேன். ஹு ஹும்
23 ஆகவே பிறகு அவர்கள் “உமக்குத் தெரியுமா, நான் நெடுஞ்சாலையில், 12-மணிக்கு வெளியே செல்வேனென்றால், இரவு 12 மணிக்குப் பிறகு வீட்டிற்கு செல்ல முயற்சித்தால், அந்த குடிவெறியில் இருக்கின்ற பிசாசுகள், கார் ஓட்டிக்கொண்டு குடித்துக் கொண்டு ஒவ்வொரு வழியிலும் இருப்பார்கள், அந்த பிசாசுகள் ஓடிக் கொண்டு இருக்கும், எனக்கு மரிக்கும் அளவிற்கு பயந்து போவேன்,'' என்று கூறினார்கள். 
24 சகோ. பாட்-! அவர்கள் உண்மையாகவே... அருமையான வயோதிப ஸ்திரீ... உங்களில் எத்தனைப் பேருக்கு சகோதரி கிட் அம்மையாரைத் தெரியும்-? (சபையார் “ஆமென்” என்கின்றனர் -ஆசி) பரிசுத்தவாட்டியாகத் தோற்றமளிக்கும் சிறு உருவம். 
25 சிந்தனை செய்து பாருங்கள், நான் பிறப்பதற்கு அநேக ஆண்டுகட்கு முன்பே (நானே இப்பொழுது வயது முதிர்ந்தவனாகி விட்டேன்) அவர்களும் சகோ. கிட்டும் அந்த மலையின் மேல் தங்கி இருந்தனர். அந்த அம்மையார் நாள் முழுவதும் துணிகளைத் துவைத்து, நாளொன்றுக்கு 15 அல்லது 20 சென்டு கூலியைப் பெற்று, அதைக் கொண்டு கென்டகியிலுள்ள நிலக்கிரி சுரங்கத்தில் பிரசங்கம் செய்ய சகோ. கிட்டை அனுப்புவார்கள். நீங்கள் அங்கு பிரசங்கம் செய்வதற்காக அந்த மலையின் மேல் ஏறிச் செல்லும் போது, யாராவது ஒருவர் உங்களைத் துப்பாக்கியால் காவல் புரிய வேண்டும். ஓ, என்னே-! எனவே நான் யோசிக்கிறேன்:
நான் சுகமான பூக்களின் படுக்கையின் மேல் பரலோகத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டுமா-? மற்றவர் பரிசு பெற போர் புரிந்து இரத்தக் கடலின் ஊடே கப்பலில் சென்றனரே நான் அரசாட்சி செய்ய வேண்டுமானால் நானும் போர் புரிய வேண்டும் என் துணிவை அதிகரியும் கர்த்தாவே-!
26 அவருடைய வார்த்தையைக் கொண்டு அவருடைய ஆதரவை நான் விரும்புகிறேன். இன்றிரவு அது தான் எனக்கு அவசியம். ஒலிப்பதிவு கருவிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன்.
27 (ஒரு சகோதரன், “குழந்தை பிரதிஷ்டையை மறந்து விடாதீர் என்று கூறுகிறார் - ஆசி) ஓ, ஆம். எனக்கு... என்னை மன்னிக்கவும். ஆம்-நான் வருந்துகிறேன். 
28 ஒரு சகோதரி இன்று காலை தன் குழந்தையைப் பிரதிஷ்டை செய்ய வேண்டு மென்று விரும்பினார்கள். இன்றிரவு செய்யலாம் என்று நான் அவர்களிடம் கூறியிருந்தேன். நாளை இரவு நாம் குழந்தைகளின் பிரதிஷ்டையும், சுக மளிக்கும் ஆராதனையும் நடத்தலாம்; நம்மால் இயன்ற அத்தனையும் நாம் செய்யலாம். நமக்குப் போதிய நேரம் உண்டாயிருக்கும். ஆதலால், அந்த சிறிய ஸ்திரீ இங்கே தன்னுடைய சிறிய குழந்தையை வைத்திருக்கிறார்கள். 
29 தனிப்பட்ட பேட்டிக்காகவும் மற்றும் ஏதாவதொன்றுக்காகவும் நீண்ட தூரத்தில் இருந்து சில ஜனங்களை இந்த காலையில் நான் கொண்டிருக்க வேண்டியதாய் இருந்தது. ஆகவே இக்காலை அவர்கள் என்னை சந்திக்க வேண்டியதாயிருந்தது, இன்றிரவு வரை அவர்கள் காத்திருக்குமாறு பில்லி ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் இன்றிரவு அவர்களை அவனால் எங்குமே காண முடியாதிருக்கிறது. சகோதரியே, நீங்கள் இங்கு இருந்திருப்பீர்களானால், அவன் அந்த ஸ்திரீயைக் கண்டு பிடித்து விடுவானா என்று நான் சற்று நேரம் காத்திருந்து, பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் இருவர், தனிப்பட்ட பேட்டிக்காக தேசத்திற்கு அப்பால் இருந்து வந்து இருந்தனர் என்று நான் நினைக்கிறேன். ஆதலால், நாங்கள்- நாங்கள் நம்புகிறோம். உம்மை நான் தவற விட்டிருந்தால் ஒருக்கால் நாளை இரவு கூடுமான வரையில் உங்களைச் சந்திக்க விழைகிறேன்.
30 இப்பொழுது, நான் நம்புகிறேன், நீல நிற இடுப்பு வரை தொங்கும் தளர்த்தியான ஜம்பர் (Jumper) சட்டையுடன் இருக்கின்ற சிறிய குழந்தையுடன் வருகின்ற, இந்த ஸ்திரீதானா-?
31 “ஜம்பர்''-? மேடா, அது என்னவாயிருந்தாலும் சரி, தேனே, அவ்வாறே அதை நான் நான் - நான் கூற விழையவில்லை. அது ஏதோ ஒரு உடையைப் போன்று.... ஜம்பர் (Jumper) எத்தனைப் பேருக்கு ஜம்பர் உடையைக் குறித்து தெரியும்-? என்ன, நிச்சயமாக, என்னை பொறுத்த வரையில் அது ஒரு பழைய மேற்சட்டை ஆதலால்- ஆதலால்... 
32. என்ன, இது டல்லாஸ் (Dallas) சிறிய குழந்தையா-? என்னே, அது அருமையானது. சகோதரனே, நீர் இங்கே நடந்து வருவீரா-? சற்று பொருத்துக் கொள்ளுங்கள். (சகோ. பிரான்ஹாம் ஒலிபெருக்கியைக் கடந்து பிரசங்க பீடத்தின் ஒரு பக்கத்திற்குச் சென்று விடுகிறார்-ஆசி). 
33. நல்லது, நல்லது, நீ கொண்டிருக்கிற சிறிய நாடா எனக்கு பிடிக்கிறது. இதன் பெயர் என்ன-? (தந்தை, “ரெபெக்கா-லின்'' என்று கூறுகிறார் - ஆசி) ரெபெக்கா-லின், லி-ன். ஆகவே இதனுடைய கடைசி பெயர் என்ன-? ஸ்டேட்டன். ரெபெக்கா-லின் ஸ்டேட்டன். அது சரியா-? இவளை நான் கையில் ஏந்தலாமா-? (“நிச்சயமாக'') இவளைப் போன்ற ஒருவளை கொடுப்பது மிகக் கடினம் என்பது எனக்குத் தெரியும். அது இனிமையானது-? இதோ ஒரு அருமையான சிறிய பெண். ரெபெக்கா -லின் ஸ்டேட்டன். 
34 இந்த குடும்பமானது முன்னே வந்துள்ளது. இங்கேயுள்ள இந்த சிறிய, வாலிப ஸ்திரீயும், அவளுடைய கணவனும், சமீபத்தில் இரட்சிக்கப்பட்டு, கர்த்தருடைய ஞானத்திற்குள்ளாகக் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஆகவே இப்பொழுது, இவர்கள் உடைய இணைப்பில் இந்த அழகான சிறிய ரெபெக்காவை தேவன் அளித்துள்ளார், ஆகவே இவர்கள் இதை கர்த்தரிடம் கொண்டு வருகின்றனர்.
35 இப்பொழுது, அநேக ஜனங்கள், அவர்கள் அதை எண் ணிக்கைக்கடங்கா... குழந்தை ஞானஸ்நானம் என்று அழைக்கின்றனர், மெதோடிஸ்டு சபையிலும், இன்னும் அநேக சபைகளிலும், குழந்தைகளாக இருக்கையில் அவர்கள் தண்ணீரைத் தெளித்து விடுகின்றனர். இப்பொழுது என்னைப் பொறுத்த வரையில் அது பரவாயில்லை. ஆனால் நாம் எப்பொழுதுமே, வேதாகமம் எதைக் கூறுகின்றதோ அதில் மாத்திரமே நிலைத்திருக்க முயற்சிக்கிறோம். ஆகவே நமக்குத் தெரிந்த வரையில், நிசாயா ஆலோசனை சங்கத்திற்கு முன்னரே ஆதி கத்தோலிக்க சபை வரைக்கும் ஒரு குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுப்பது என்கின்ற ஒரு காரியம் வேதாகமத்திலும், சரித்திரத்திலும் இருந்ததே கிடையாது  (இல்லை). 
36 (குழந்தை “வீல்-!'' என்று அழுகின்றது- ஆசி) ஆகவே 'ஆமென்'' என்று சொல்லக் கூடிய வழி இது தான். அது, பாருங்கள், நீங்கள்... பாருங்கள், நீங்கள் வியாக்கியானத்தைக் கொண்டு இருக்க வேண்டும். 
37 ஆதலால், ஆனால், வேதாகமத்தில் அவர் சிறுபிள்ளைகளை ஆசீர்வதிக்கத் தக்கதாக இயேசுவினிடத்தில் அவர்கள் கொண்டு வந்தனர். ஆகவே அவர் தம்முடைய கைகளை அவர்கள் மீது வைத்து அவர்களை ஆசீர்வதித்தார். அதை நாம் இன்னுமாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.
இப்பொழுது நம்முடைய தலைகளை நாம் வணங்குவோம். 
38 எங்களுடைய பரலோகப் பிதாவே, இந்த வாலிப ஸ்திரீயும், வாலிப மனிதனும், தேவனுடைய சிட்சையில் வளர்க்க, இவர்களுடைய பொறுப்பில், இவர்களிடம் அளிக்கப்பட்டிருக்கும் இந்த அருமையான சிறிய ரெபெக்காவுடன் இன்றிரவு வந்திருக்கின்றனர். ஆகவே இவர்கள் கர்த்தருக்கு சமர்ப்பிக்க இதைக் கொண்டு வந்திருக்கின்றனர். ஆகவே இந்த தாய் தன்னுடைய கரங்களிலிருந்து என்னிடம் அளிக்க, பிறகு என்னுடைய கரங்களிலிருந்து இந்த சிறிய ரெபெக்காளை, உம்மிடம் அளிக்கின்றேன். தேவனே, இவளோடிருந்து இவளை ஆசீர்வதிப்பீராக. இவளுடைய தந்தையையும் தாயையும் ஆசீர்வதியும். இவர்கள் தாமே உத்தமமாக, நீண்ட காலம் ஜீவித்து, கூடுமானால், கர்த்தராகிய இயேசுவின் வருகையை காணட்டும். இந்த குழந்தை தானே, கர்த்தரை அறிகின்ற அறிவில் வளர்வதாக. ஆகவே நாளை என்று ஒன்று இருக்குமானால், இவள் தாமே உமக்கு ஒரு மகத்தான சாட்சியாக இருப் பாளாக. இதை அருளும் கர்த்தாவே. இப்பொழுது இங்கே நீர் இந்த பூமியின் மீது இருந்தால், இந்த ஸ்திரீயும் மனிதரும் தங்களுடைய பிள்ளைகளை உம்மிடம் கொண்டு வந்திருப்பார்கள். ஆனால் நாங்கள் சுவிசேஷத்தின் ஊழியக்காரர்களாக, உம்முடைய பிரதிநிதிகளாக இருக்கிறோம். ஆகவே, இந்த குழந்தையை, உம்முடைய இராஜ்ஜியத்தில் ஊழியத்தின் ஜீவியத்திற்காக, உம்மிடம் நாங்கள் அளிக்கிறோம், உம்முடைய குமாரனாகிய, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 
39. சிறிய ரெபெக்கா-! உன்னை ஆசீர்வதிக்கிறேன். என்ன ஒரு சிறிய அருமையான ஒன்றாகும்-! தேவன் உங்கள் இருவரையும், குழந்தையையும், ஆசீர்வதித்து, தேவனுடைய ஊழியத்திற்கு என்று, உங்களுக்கு நீண்ட, சந்தோஷமான வாழ்க்கையை அளிப்பாராக.
40. சில அடிகள் வைத்து முன்னே வாருங்கள். நான் பலமுள்ளவனா, அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. இது பையன். இவனுடைய பெயர் என்ன-? (தாய், “ஸ்டான்லி விக்டர் கிளெவ்லாண்ட்'' என்று கூறுகிறார்கள்-ஆசி) ஸ்டான்லி... (“ஸ்டான்லி.'') ஸ்டான்லி விக்டர்... (“கிளெவ் லாண்ட்'') கிளெவ்லாண்ட். கிளெவ்லாண்ட். ('கிளெவ் லாண்ட்') கிளெவ்லாண்ட். சிறிய ஸ்டான்லி, என்ன ஒரு சிறிய அழகான பெயர், என்ன ஒரு அருமையான சிறிய பையன்-! நல்லது, நான் ஊகிப்பது என்னவெனில்... ஸ்டான், இங்கே வா. நீ ஒரு அருமையான பையன்-? இதை நாங்கள் கைக் கொள்வதில்லை. உங்களுக்குத் தெரியுமா, இதை நாங்கள் செய் கின்றோம், அதைக் குறித்து முறைப்படியான ஒன்று இல்லை. அது சரி. இவன் நிச்சசயமாக ஒரு இனிமையான சிறிய பையன் ஆவான். இவனுடைய கடைசிப் பெயரை நான் மறந்துவிட்டேன். அதை நான் சரியாக உச்சரிக்கவில்லை என்று நினைக்கிறேன். (கிளெவ்லாண்ட்) கிளெவ்லாண்ட். அது சரி.
இப்பொழுது நம்முடைய தலைகளை நாம் வணங்கு வோமாக.
41. பரலோகப் பிதாவே, கர்த்தராகிய இயேசுவினிடம் அர்பணிக்க, இந்த சிறிய குழந்தை ஸ்டான்லி கிளெவ்லாண்டை இந்த தம்பதியினர் கொண்டு வருகின்றனர். இந்த சபையின் மேய்ப்பனும், நானும் கர்த்தருடைய கிரியைகளில், ஒன்றாக கூட்டொருமைப்பாட்டுடன் நின்று, இந்த குழந்தைக்கு ஊழியத்தின் ஜீவியத்தை தர உம்மிடம் இதை நாங்கள் அளிக்கின்றோம். தாய்க்கும் தந்தைக்கும் நீர் இவனை அளித்தீர்; இப்பொழுது இவர்கள், இவனை என்னிடம், என் கரங்களில் அளித்து இருக்கின்றனர், ஆகவே நான் இவனை என்னுடைய கரங்களிலிருந்து உம்முடையதில் வைக்கின்றேன். தேவனே, இவனுடைய தந்தையையும் தாயையும் ஆசீர்வதியும். இந்த சிறிய பையனை ஆசீர்வதியும். ஆகவே இவர்கள் எல்லாரும் நீண்ட காலம் சந்தோஷமான ஜீவியங்களை உம்முடைய ஊழியத்திற்கென கொண்டு இருப்பார்களாக. இவனுடைய வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் அவருக்கு சேவை செய்ய, அவருக்கு பயப்பட, அவரை நேசிக்க தேவனுடைய சிட்சையில் இந்த குழந்தையானது வளர்க்கப்படட்டும். இப்பொழுது, நீர் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று, அவர்கள் சிறுபிள்ளைகளை உம்மிடத்தில் கொண்டு வந்தனர். நாங்கள் எங்கள் கரங்களை இந்தப் பிள்ளையின் மேல் வைத்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஆசீர்வதிக்கிறோம். அவன், உம்முடைய ஊழியத்தில், சுகமும் பெலனுமான மகிழ்ச்சியுள்ள நீண்ட ஆயுசுடன் வாழ்வானாக. இயேசுவின் நாமத்தில், ஆமென் சிறிய ஸ்டான்லி தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ ஒரு அருமையான பையனாய்  இருப்பாய். 
42. இங்குள்ள சிறுவர்களிடமும் வாலிபர்களிடமும் ஒரு உதவி கேட்கப் போகின்றேன். அதிக நேரம் அசையாமல் நின்று கொண்டிருப்பது கடினம் என்று நானறிவேன். ஏனெனில் உங்கள் கால்கள் மரத்துவிடும். ஆனால் இன்றிரவு நான் முன்பு செய்திராத ஏதோ ஒன்றை நான் அணுகிக் கொண்டிருக்கிறேன். நான் பேசப் போகின்ற ஒன்றில் ஏதோ ஒன்று இருக்கின்றது, அதைப்பற்றி பேசவேண்டும் என்று நான் நினைத்ததே இல்லை. 
43. எனவே தான் இன்று காலை செய்திக்கு முன்பு அதிக சமயம் எடுத்துக்கொள்ள வேண்டாமென்று எண்ணினேன். ஆனால் என் ‘முற்றிலுமானவரை,' (Absolute) குறித்து இன்று காலை பேசி முடிக்கவில்லை. அது என்னால் பேசி முடியாது. அவர் அவ்வளவு அற்புதமானவர். 
44. ஆனால், இன்றிரவு, எனக்கு தெரியாது இருக்கின்ற ஏதோ ஒன்றின் பேரில் நான் பேசப் போகின்றேன். ஆகவே இப்பொழுது, ஒரு ஊழியக்காரன், தான் அறியாது இருக்கின்ற ஏதோ ஒன்றைக் குறித்து பேசப் போகிறேன் என்று கூறுவது ஒரு வினோதமான காரியம் ஆகும். ஆனால் இந்த சபை அறிந்து கொள்ள வேண்டும் என்று கருதியே எனக்குத் தெரிந்த வரையில் பேச நான் துணிவுடன் முயற்சிக்கின்றேன். ஆகவே நான் ஒருக்காலும் உங்களுக்கு பயனுள்ள எந்த ஒரு காரியத்தையும் மறைத்து வைக்கமாட்டேன். 
45. ஆகவே பிறகு, இந்த ஒலிநாடாவை பையன்கள் ஒலிப் பதிவு செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்குக் கிடைக்குமானால், நீங்கள் அதைக்கேட்க தருணம் கிடைத்தால், ஒலி நாடாவைக் கேட்கின்ற எவராயிருந்தாலும் சரி, நினைவில் கொள்ளுங்கள், ஏதாவதொன்று உங்களுக்கு குழப்பமாக இருக்கும் பட்சத்தில், ஒலி நாடாவில் இல்லாத ஒன்றைக் கூறவேண்டாம். அதில் உள்ளதற்கு மாறாக எதையும் கூற வேண்டாம்.
46. பாருங்கள், ஜனங்கள் காரியங்களைக் குறித்து தவறான கருத்தைக் கொள்கின்றனர். சர்ப்பத்தின் வித்தைக் குறித்து நான் இன்னின்னதைச் சொன்னேன் என்பதாக அநேகர் எனக்கு கடிதம் எழுதுகின்றனர். நான் அந்த ஒலிநாடாவைப் போட்டுக் கேட்கும் போது, நான் அவ்விதம் கூறவில்லை என்பது விளங்குகின்றது. பாருங்கள்,  ஜனங்கள் தவறாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
47. இயேசு, அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, தம் சீஷர்களுடன் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவர் மார்பில் சாய்ந்து கொண்டு இருந்தான். அவர்கள் இயேசுவிடம், “ஆண்டவரே, இவனுக்கு என்ன நேரிடும்-?'' என்று கேட்டனர்.
அப்பொழுது இயேசு, “நான் வருமளவும் அவனிருக்கச் சித்தமானால் உனக்கென்ன-?'' என்றார்.
48. “யோவான் இயேசுவின் வருகை மட்டும் உயிரோடிருப்பான் என்னும் செய்தி அவர்களிடையே பரவியது.” 
49. ஆனால் இயேசுவோ அவ்வாறு கூறவில்லை என்று வேத வாக்கியம் உரைக்கின்றது. பாருங்கள், அவர் அப்படிச் சொல்லவேயில்லை. “நான் வருமளவும் அவனிருக்கச் சித்தமானால் உனக்கென்ன-?'' என்று மாத்திரமே அவர் கேட்டார். அவன் அதுவரை உயிரோடிருப்பான் என்று அவர் கூறவில்லை. ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அவ்விதம் செய்தல் எளிதாகும். 
50. ஆகவே, இப்பொழுது, அது-அது யாரோ ஒருவர் அவ்விதம் செய்தார் என்பதற்காக நான் குற்றம் சாட்டுகிறேன் என்று எண்ண வேண்டாம். ஏனெனில் நானே அப்படி செய்திருக்கிறேன். எல்லாரும் அதைச் செய்கின்றனர். நம்முடைய கர்த்தரோடு கூட நடந்த சீஷர்களும்கூட அவரைத் தவறாகப் புரிந்து கொண்டனர். ஆகவே அவர்கள் அவரைத் தெளிவாக புரிந்து கொள்ளவேயில்லை. 
51. சரியாகக் கடைசியில், அவர்கள் “இப்பொழுது நாங்கள் புரிந்து கொண்டோம்; இப்பொழுது நாங்கள் விசுவாசிக்கின்றோம். நீர் எல்லாம் அறிந்தவர். உமக்கு யாரும் போதிக்க வேண்டியதில்லை'' என்று சொன்னார்கள். 
52. அப்பொழுது இயேசு, “இப்பொழுதாவது நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா-?' பாருங்கள்-? “இத்தனைக் காலம் கழித்து, நீங்கள் கடை... கடைசியில், பாருங்கள், நீங்கள் விசுவாசிக்கத்தக்கதாக உங்கள் மனதில் பதிந்து விட்டதா-?'' என்றெல்லாம் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
53. அது மனித இயல்பு. நாமெல்லோரும் மானிடர்களே. ஆதலால் நாம் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவுண்டு. 
54. ஆயினும், உங்களுக்கு ஏதாகிலும் குழப்பம் இருக்குமானால், மறுபடியும் ஒலி நாடாவைப் போட்டுக் கேளுங்கள். கூர்ந்து கவனியுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு வெளிப்படுத்தித் தருவார் என்று நான் நிச்சயிக்கிறேன். 
55. சிறுவர்கள் உங்கள் 'ஆமென்களை சற்று நிறுத்திக் கொள்வீர்களா-? சற்று பொறுங்கள். ஏனெனில் இது தெளிவாகக் கேட்கப்பட வேண்டும் என்று நான்-நான் விரும்புகிறேன். ஏனெனில் அநேகரிடம் இந்த ஒலி நாடா இராது. எனவே நான் கூறுவதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பொருளை நாம் 35 அல்லது 40 நிமிடங்கள், நாம் அறிந்த வரை, பயபக்தியுடன் அணுகுவோம். 
56. ஏனெனில் இது எனக்கு ஒரு பயங்கரமான நேரம். இதில் ஒன்று சம்பவித்தது. எனக்கு என்ன செய்ய வேண்டுமென்றே தெரியாதிருக்கின்றது. பாருங்கள்-? என்னுடைய ஊழியத்தின் நாட்களிலே, எனக்கு தெரிந்தவரை மிக திகிலூட்டுகின்ற குறுகிய பாதையில் நான் நின்று கொண்டு இருக்கிறேன்.
எனவே நாம் வார்த்தையை அணுகு முன்பு தலை வணங்குவோம் :
57. பரம பிதாவே, சில நாட்களுக்கு முன்பு, நான் 'ஊகித்தல்' (Presuming) என்னும் பொருளின் பேரில் பிரசங்கம் நிகழ்த்தினேன். 'ஊகித்தல்' என்னும் பதம் ‘அதிகாரம் இல்லாமல் துணிவு கொள்ளுதல்' என்று பொருள்படும். ஆண்டவரே, ஒருக்கால் இன்றிரவு, ஒரு தரிசனம் இல்லாமல் நானே ஜனங்களுக்கு ஒன்றை அர்த்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கலாம். ஆகவே ஆண்டவரே, எங்கெங்கே என் பேச்சைத் தடுத்து நிறுத்துவது அவசியமோ, அங்கெல்லாம் தடுத்து நிறுத்தி என் வாயை மூட வேண்டுகிறேன். கர்த்தாவே தானியேலின் குகையிலிருந்த சிங்கங்களின் வாய்களை, அவனைத் துன்புறுத்தாதிருக்க நீர் கட்டிப் போட்டீர். ஆண்டவரே, இன்றிரவு நான் எதையாகிலும் தவறாக வியாக்கியானம் செய்ய நேர்ந்தால், என் வாயை அடைத்துப் போடுவதற்கு இப்பொழுதும் உமக்கு வல்லமையுண்டு. ஆனால் நான் பேசுவது சத்தியமாய் இருக்குமானால், அப்படியானால் கர்த்தாவே அதை ஆசீர்வதித்து வெளியே அனுப்பும், இன்றைய சூழ்நிலையையும், எது எப்பொழுது நேரிடவிருக்கிறது என் பதையும் நீர் அறிந்திருக்கிறீர். எனவே தான், இந்த கடைசி நேரத்திலும் கூட வியாக்கியானப்படுத்த முயற்சி செய்ய நான் பிரசங்க பீடத்திற்கு வந்து இருக்கிறேன். எங்களுக்கு உதவி செய்யுமாறு மன்றாடுகிறேன். 
58. இந்த சிறிய சபையை ஆசீர்வதியும். இந்த கூரையின் கீழிருப்பவர், இந்நேரத்தில், இங்கே எங்களுடன் குறுந்தங்கலாய் (Sojourns) வருபவர், நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்து இங்கு வந்துள்ளனர். ஓ, சூரிய அஸ்தமனத்தின் போது மாலை நிழல்கள் தோன்றும் நேரத்தில், நாங்கள் கூடுவதற்கு எங்களுக்கு ஒரு இடம் இருப்பதற்காக மகிழ்ச்சியுறுகிறோம். உலகமே குழப்பத்திற்குள்ளாகி, அவர்கள் உடைய நிலை என்ன வென்பதை அறிந்து கொள்ள முடியாதிருக்கும் இத் தருணத்தில், “கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாய் இருப்பான்'' என்பதினால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அநேக வார்த்தைகள் அல்ல, வெளிப்பாடே முக்கியம் வாய்ந்ததாகும். 
59. ஆகவே பிதாவே, சூரியன் அஸ்தமிக்கும் போது, சாயங் கால வெளிச்சங்கள் உண்டாகும். சூரியன் அஸ்தமனமாகும் நேரத்தில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று நம்புகிறோம். நீர் எங்களுக்கு செய்து இருக்கும் எல்லாவற்றிற் காகவும், எங்கள் இருதயங்களின் ஆழங்களில் இருந்து உமக்கு நன்றி செலுத்துகி றோம். நீர் காலந்தோறும் அளித்து வந்துள்ள தரிசனங்களுக்காக உமக்குத் நன்றித் செலுத்துகிறேன். அவை ஒவ்வொன்றும் பிழையின்றி நிறைவேறின; அவ்வாறே சொப்பனங்களின் அர்த்தமும்கூட, ஆண்டவரே, நீர் ஒருவர் தான் அதை செய்ய முடியும் என்பதை நாங்கள் உறுதியாக அறிவோம். நாங்கள் எல்லாரும் இறக்க வேண்டிய மானிடரே. நாங்கள் அனைவரும் பாவத்தில் பிறந்தவர்கள். எங்களிடம் பழுதில்லாத எதுவுமே கிடையாது. ஆனால் நீர் அப்படிப்பட்ட மனிதனை எடுத்து, திருவசனமாகிய தண்ணீர் முழுக்கினாலும், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலும் அவனைக் கழுவி, அவன் தன் சுயசிந்தையை உபயோகிக்காமல், எல்லாம் அறிந்த கிறிஸ்துவின் சிந்தை அவனுக்குள் வந்து, அவனை ஒரு கூடாரமாக நீர் உபயோகிக்க அனுமதிக்கும்படி செய்கிறீர் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, பிதாவே, உமக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
60. உமது பரிசுத்த நாமத்தை நாங்கள் ஸ்தோத்தரிக்கிறோம். இன்றிரவு இந்த சிறு குழுவை உமது நாமத்தினால் ஆசீர்வதிக்கிறோம். தேவனுடைய வீரமுள்ள ஊழியக்காரனும், இந்த சபையின் போதகருமான சகோ. நெவில் அவர்களை நாங்கள் ஆசீர்வதிக்கிறோம். இந்த சபையின் மூப்பர்களையும், தர்ம கர்த்தாக்களையும் இங்கும், உலகின் எல்லா பாகங்களிலும் இருக்கும் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர் ஒவ்வொருவரையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஆசிர்வதிக்கிறோம்.
61. ஓ, இந்த பயங்கரமான இருள் நிழல்கள் கிறிஸ்தவ மார்க்கத்தின் மீது விழுவதை நாங்கள் காணும் போது, நேரம் அருகாமையில் வந்திருக்கின்றது என்பதை நாங்கள் அறிகிறோம், எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும்; அப்பொழுது சபை ஆனது எடுத்துக் கொள்ளப்படும். ஆண்டவரே, துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய கிறிஸ்துவை நோக்கி நாங்கள் அணிவகுத்து முன்செல்ல கிருபையருளும். எங்கள் இருதயங் களில் வைக்கப்பட்டு உள்ளவைகளை செய்து நிறைவேற்ற நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் முன் செல்லும் போது, நீர் எங்களோடு கூட இருந்து, எங்களுக்கு உதவி செய்யுமாறு ஜெபிக்கிறோம். அதனால் வரும் மகிமையை நீர் எடுத்துக் கொள்ளும். எங்களை உமது வார்த்தையுடன் கூட உம்மிடம் சமர்ப்பிக்கிறோம்.  இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்.  ஆமென். 
62. உங்களிடம் பென்சிலும் காகிதமும் இருக்குமானால், நீங்கள் விரும்புவதைக் குறித்துக் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவைகளை ஆயத்தமாக வைத்திருங்கள். இந்த ஒலிநாடாவைக் கேட்பவர்களுக்காகவும்; உங்களுக்கு விருப்பம் இருந்தால், வேத வாக்கியங்களை குறித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் வேத வாக்கியங்கள் எக்காலத்திலும் முக்கியம் வாய்ந்தவை. 
63. இப்பொழுது, இன்றிரவு, இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தின புஸ்தகத்தில் ஒரு பொருளை, அல்லது வேத வசன வாசித்தலைச் செய்ய நாங்கள் விரும்புகிறோம். இந்த புஸ்தகத்தில் எழுதப்பட்டு உள்ளவாறே, இது தான் இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தல் என்று நான் விவாசிக்கிறேன். இந்த வெளிப்பாட்டிற்கு முரணாக வேறு எந்த வெளிப்பாடும் தவறானதாகும். நான் நம்புகிறேன் அது.. மறுபடியும் கூறப்படுவதற்கு கூறப்படுவதற்கு தகுதி வாய்ந்தது. இந்த வெளிப்பாட்டுடன் பொருந்தாமல், இந்த வெளிப்பாட்டை வெளிக் கொணராமல் இருக்கும் எந்த ஒரு வெளியப்பாடும் தவறான ஒன்றாகும். அது வேத பூர்வமாக இருக்க வேண்டும். 
64. இப்பொழுது, இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டின் புஸ்தகம் 10-ஆம் அதிகாரம், முதல் சில வசனங்களை நான் வாசிக்க விரும்புகிறேன், முதல் ஏழு வசனங்கள், 1 முதல் 7. இப்பொழுது  கூர்ந்து  கவனியுங்கள்,  எனக்காக  ஜெபியுங்கள்.
பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வரக் கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின் மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப் போலவும் அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப் போலவும் இருந்தது. 
திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலது பாதத்தைச் சமுத்திரத்தின் மேலும், தன் இடது பாதத்தை பூமியின் மேலும் வைத்து,
சிங்கம் கெர்ச்சிக்கிறது போல மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்த போது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.
அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கின போது, நான் எழுதவேண்டும் என்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடி முழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரை போடு என்று வானத்தில் இருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.
சமுத்திரத்தின் மேலும் பூமியின் மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி:
இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக் காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிற போது தேவரகசியம் நிறைவேறும் என்று.
வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவை களையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர் மேல் ஆணையிட்டுச் சொன்னான்.''
65. ஆகவே என்னுடைய பொருள், இன்றிரவு அவ்விதமாகக் கூறுவேனானால், அது: ''ஐயா, இதுதான் முடிவின் அடையாளமா-?'' 
66. நாம் வாழும் காலம் சபைக்கு ஒரு மகிமையான காலம் என்றும், அதே சமயத்தில் இது அவிசுவாசிக்கு ஒரு பயங்கரமான காலமென்றும் நாமறிவோம். நாம் மிகவும் ஆபத்தான காலத்தில் - உலகம் தொடங்கின முதற்கு உண்டாயிருந்த காலங்கள் அனைத்திலும் மிகவும் ஆபத்தான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக் கன்ற காலத்தைப் போன்ற ஒரு காலத்தில் எந்த ஒரு தீர்க்கதரிசியும், ஒரு அப்போஸ்தலனும், இருந்ததே கிடையாது. இது தான் அந்த முடிவு ஆகும்.
67. அது வானங்களில் எழுதப்பட்டுள்ளது. அது பூமியில் எழுதப்பட்டிருக்கின்றது. அது ஒவ்வொரு செய்தித்தாளிலும் எழுதப்பட்டு இருக்கின்றது. உங்களால் அந்த கையெழுத்தை வாசிக்கக் கூடுமானால், இது தான் அந்த முடிவு. சுவற்றில் எழுதப்பட்ட கையெழுத்து ஒரு நாட்டின் முடிவை அறிவித்த காலத்தில் தீர்க்க தரிசிகள் வாழ்ந்தனர். ஆனால் நாமோ காலத்திற்கே முடிவை அறிவிக்கும் சுவற்றில் காணப்படும் கையெழுத்தின் காலத்தில் வாழ்ந்து வருகின்றோம். எல்லா நாடுகளுக்கும், இந்த பூமிக்கும் காலம் முடியும் தருவாயில் உள்ளது. எனவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால், வேத வாக்கியங்களை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். 
68. தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசி எவனும், எப்பொழுதும் வேத வாக்கியங்களுக்கே செல்வான். ஆகவே தான் ஒரு காரியம் அவ்விதமாகவே நிகழும் என்று அவன் முற்றிலுமாக நம்புகிறான். பழைய ஏற்பாட்டில், தீர்க்கதரிசிகள் எதையாவது கூறி இருந்தால், எப்பொழுதுமே, ஏதாவதொரு இடத்தில் வார்த்தையை உடைய, வார்த்தையோடே தரித்திருந்த ஒரு தீர்க்கதரிசி இருந்தான். தரிசனங்களுக்காக அவன் தேவனையே நோக்கி கவனித்துக் கொண்டிருந்தான். அவனுக்குக் கிடைத்த தரிசனம் தேவனுடைய வார்த்தைக்கு முரணாக அமைந்து இருந்தால், அவனுடைய தரிசனம் தவறு என்று அர்த்தம். தேவன் தமது வார்த்தையை மக்களுக்கு அளிக்கும் விஷயத்தில் இம்முறையையே கடை பிடித்தார். 
69. அங்கே, பின்னால் சற்று தள்ளி, நான் கூறுவது கேட்கின்றதா-? சரி. (சகோ. பிரான்ஹாம் சற்று பேசுவதை நிறுத்துகிறார்-சரி) நான் எங்கிருந்து ஆரம்பிப்பது என்றே எனக்குத் தெரியவில்லை
70. இந்த கூடாரம் தான் என்னுடைய முதல் சபையாகும் என்று நான் அறிந்து உள்ளதை மிகுந்த சிலாக்கியமாகக் கருதுகிறேன். அது ஒரு மகிமையான காரியம். இயேசுவின் வருகை தாமதித்து, நான் 100 ஆண்டுகள் உயிரோடிருக்க நேர்ந்தாலும், இதை என்னால் மறக்கமுடியாது. நான் அந்த மூலையில் இக்கூடாரத்தின் மூலைக் கல்லை நட்ட நாளை; இந்த கூடாரத்தைக் குறித்து அன்று காலை அவர் எனக்களித்த தரிசனத்தை நான் நினைவு கூருகிறேன். உங்கள் எல்லாருக்கும் அது நினைவு இருக்கும் என்று கருதுகிறேன். அது புஸ்தகங்களில் எழுதி வைக்கப்பட்டு உள்ளது. அதின் ஒவ்வொரு எழுத்தும் முற்றிலுமாக நிறைவேறினது. அதில் ஒரு பாகமும் கூட தவறாகவில்லை. 
71. ஆகவே, இப்பொழுது, என் வாழ்க்கை முழுவதிலும் அவர் என்னுடன் பேசி, நான் ஜனங்களுக்கு எடுத்துரைத்தவைகளில் ஒன்றும் நிறைவேறாமல் இருந்ததில்லை. அநேகர் தாங்கள் கண்ட சொப்பனங்களுடன் என்னை அணுகினபோது, அவைகளின் அர்த்தங்களை வியாக்கியானிக்க கர்த்தர் கிருபையருளினார். அதே சமயத்தில், இன்னும் அநேகர் சொப்பனங்களுடனும் பிரச்சினைகளுடனும் வந்தனர். என்னால் அர்த்தம் விவரிக்கக்கூடாமல் போயிற்று. 
72. ஆனால் எல்லாவற்றிற்கும் விடைகாணும் ஒரு கவர்ச்சி தரும் செயலை (gimmicks) நான் மக்களுக்கு அறிமுகப்படுத்தினதில்லை. நான் உத்தமமாக சத்தியத்தை மாத்திரம், அவர் என்னிடம் கூறியவாறே, உங்களிடம் எடுத்துரைக்க நான் முயன்று வந்திருக்கிறேன். அவரிடமிருந்து நான் பெற்றுக் கொண்டதை அந்தப் பிரகாரமாகவே உங்களிடம் எடுத்துரைக்கிறேன். 
73. ஆகவே நான் உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். நாம் ஜீவித்துக் கொண்டிருக்கும் இந்த நாளில், அநேகர்... மக்களுக்கு எதிராக எதையும் கூறவில்லை. ஆனால் எல்லா காரியத்திற்கும் விடையைக் கொண்டிருக்கும் ஒரு நபரை நீங்கள் காண்பீர்களானால், அது வார்த்தைக்கு முரணான ஒன்றாகும். 
74. இயேசு, “எலியாவின் நாட்களில் அநேக குஷ்டரோகிகள் இருந்தனர். ஆயினும் ஒருவன் மாத்திரமே சொஸ்தமானான்,'' என்று கூறினார். எலியா ஜீவித்த 80 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களில், ஒரு குஷ்டரோகி மட்டுமே சொஸ்தமானான். எலிசாவின் காலத்தில் அநேக விதவைகள் இருந்தனர். ஆனால் அவன் ஒரு விதவையினிடம் மாத்திரமே அனுப்பப்பட்டான். ஆகவே தம்முடைய ஊழியக்காரர்களுக்கு வெளிப்படுத்தாத, தேவன் செய்யும் அநேக காரியங்கள் இருக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். தன்னுடைய எஜமானிலும் பெரியவனான எந்த ஒரு ஊழியக்காரனும் இல்லை. 
75. ஆகவே, பிறகு, தேவன் தமது மகிமையை யாருடனும் பகிர்ந்து கொள்வது கிடையாது. அவர் தேவனாய் இருக்கிறார். தேவனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள ஒரு ஊழியக்காரன் முயன்றால், கர்த்தர் அவனைக் கொன்று போடுவார்; அல்லது வேறெங்காவது அவனைக் கொண்டு சென்று விடுவார். இதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 
76. இப்பொழுது அந்த தரிசனங்கள் அவைகளின் அர்த்தங்களை விவரித்தாலும்... அந்த சொப்பனம் என்னவென்பதை நான் சரியாக தரிசனத்தில் கண்டாலொழிய, அதன் அர்த்தத்தை என்னால் உரைக்க முடியாது. உங்களில் அநேகர் நீங்கள் கண்ட சொப்பனங்களை என்னிடம் கூறும் போது, ஒரு சில பாகங்களைக் கூற மறந்து விடுவீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். அந்த சொப்பனத்தை நான் தரிசனத்தில் காணநேரிடும் போது, நீங்கள் கூறாமல் விட்டு விட்ட பாகங்கள் அதில் அதிகம் உள்ளதென்றும், நீங்கள் கூறாமல் விட்டுவிட்ட பாகங்களை நான் கூறி முடித்து இருக்கிறேன். அது உண்மையென்று உங்களுக்குத் தெரியும். அது சரி என்றால், ‘ஆமென்' என்று கூறுங்கள். ஆமென் (சபையோர், 'ஆமென்' என்கின்றனர் - ஆசிரியர்). நீங்கள் என்னிடம் கூறாத காரியங்கள். ஆகையால் நீங்கள் பாருங்கள், அது... “நான் கண்ட சொப்பனம் என்னவென்று உங்களால் அறிவிக்க முடியாமற் போனால், அதன் அர்த்தம் உங்களுக்குத் தெரியும் என்று என்னால் எப்படி நம்பமுடியும்-?'' என்று நேபுகாத்நேச்சார் கேட்டான். 
77. நமது சிந்தனையில் எழும் கருத்துக்கள் அனைத்தையும், 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்று நாம் சொல்லிவிடக்கூடாது. நாம் அவ்விதம் செய்யக் கூடாது. நாம் நேரடியாக தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, அவரிடமிருந்து விடை பெற்ற பின்னே, அது தேவனால் அளிக்கப்பட்டது என்று கூறவேண்டும். ஒரு கருத்தையோ அல்லது ஒரு உணர்ச்சியையோ நாம் எடுத்துக் கொண்டு, அது எவ்வளவு உணர்ச்சிகரமாக இருந்தாலும், அது தேவனால் உண்டானது என்று நாம் கூறிவிட முடியாது.
''ஒருக்கால் அது அவ்விதமாக இருக்கலாம்'' என்று வேண்டுமானால் கூறலாம். 
78. ஆனால், 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்று நீங்கள் கூறுவீர்களானால், அது நீங்களல்ல, மேடையின் மீது கவனியுங்கள். அது எப்பொழுதாவது தவறினதை நீங்கள் கண்டிருக்கின் றீர்களா-? கர்த்தர் உரைக்கிறதாவது, அது பரிபூரணமானது, அது தவறினதே இல்லை. அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகவே இருக்கும் வரையில், அது ஒருக்காலும் தவறாது. 
79. நான் தவறுதலாக எதையும் கூறாதபடி அவர் இதுகாறும் என்னைக் காப்பாற்றி வந்துள்ளார். நான் அவருக்காகக் காத்திருந்ததே அதற்கு காரணம். நான் செல்வாக்கையோ, மனிதரின் வீண்புகழ்ச்சியையோ தேடவில்லை. என்னால் இயன்ற வரை, நான் தாழ்மையுள்ளவனாய் வாழ்ந்து ஒரு கிறிஸ்தவன் எவ்விதம் இருக்க வேண்டுமோ அவ்விதம் வாழ்ந்து வருகின்றேன். அது எனது சுய முயற்சியினால் இயலாத ஒரு காரியம். அவரே இது வரை அதை வாய்க்கப் பண்ணினார். நான் ஏற்கனவே உங்களிடம் கூறியுள்ளது போன்று, அவரே என்னை வழி நடத்தி வருகின்றார். 
80. அநேக காரியங்களை இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் நேரம் அதிகமாகும். இவை அனைத்தையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் விட்டு விட்ட சொப்பனத்தின் சில பாகங்களை நான் பூர்த்தி செய்திருக்கிறேன் என்பதை ஆமோதிக்கும் வகையில் உங்களை 'ஆமென்,' என்று சற்று முன்னர் நான் கூறச் சொன்னது, இந்த ஒலி நாடாவைக் கேட்க இருக்கும் உலகின் பல்வேறு பாகங்களில் உள்ளவர்களுக்காகவேயாம். அந்த ஆமென்-யை அவர்கள் கேட்கும் போது, இந்த ஊழியத்தில் இருப்பவர்களின் சத்தம் தவறு செய்வதில்லை என்றும், தவறான ஒன்றிற்கு அவர்கள் ஆமென், என்று சப்தமிட மாட்டார்கள் என்றும் அறிந்து கொள்வார்கள். 'ஆமென்,' என்றால், 'அப்படியே ஆகக்கடவது,' என்று பொருள். அது ஒன்றை அங்கீகாரம் செய்கின்றது. 
81. நான் சிறுவனாக இருந்த முதற்கு என் வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒன்று என்னைத் தொல்லைப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. என் வாழ்க்கை வினோதமான ஒன்றாகும். அதை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. என் மனைவியும்கூட தலையை சொறிந்து கொண்டே, “பில் (Bill), உங்களை யாருமே புரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்,'' என்று கூறியதுண்டு . 
82. நான், “என்னையே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை'' என்று பதில் அளித்திருக்கிறேன். ஏனெனில் அநேக ஆண்டுகட்கு முன்னரே நான் என்னைக் கிறிஸ்துவிடம் சமர்ப்பித்துவிட்டேன். அவரே என்னை வழி நடத்தி வருகின்றார். அதை நான் புரிந்துகொள்ள முயல்வதில்லை. அவர் எங்கு வழி நடத்தகின்றாரோ, என்னால் இயன்ற வரை, அங்கு நான் செல்கின்றேன்.
83. அருமையான என் மனைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவும் நான் நன்றி உள்ளவனாயிருக்கிறேன். அவர்களிடம் நான் எதையும் தவறாக சொல்லமாட்டேன் என்னும் திடநம்பிக்கை அவர்களுக்கு உண்டு. அதை அவர்கள் விசுவாசிக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஏதாவதொன்றை கூறினால், அவர்கள் அதை சரியாக பிடித்துக் கொள்கின்றனர். அவர்களிடம் நான் தவறான எதையும் கூறமாட்டேன் என்பது அவர்களுக்குத் தெரியும். 
84. ஆகவே தேவனுடைய பிள்ளைகளிடம் தவறாக நான் ஏதாகிலும் சொல்வேனா-? இல்லை, ஐயா. வேண்டுமென்று நான் அப்படி செய்யவே மாட்டேன். தம்முடைய பிள்ளைகள் சரியான பயிற்சி பெறவேண்டுமென்றே தேவன் விரும்புகின்றார். அவர்களிடம் நான் உத்தமமாகவும், உண்மையாகவும் இருந்தால், கர்த்தர் அதை ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன்.
85. இப்பொழுது என் வாழ்க்கைப் பயணத்தில், என்னால் புரிந்து கொள்ள முடியாத அநேக செயல்கள் நிகழ்ந்துள்ளன. நான் சிறுவனாக இருந்த போதே தரிசனங்கள் கண்டது, என்னால் புரிந்து கொள்ள முடியாதவைகளில் ஒன்றாகும். நான் தரிசனங் கள் கண்டு, வரப்போகும் காரியங்களை என் பெற்றோரிடம் முன்னறிவிப்பேன். நான் நரம்பு தளர்ச்சியால் அவதியுறுவதாக அவர்கள் எண்ணினர். ஆனால் நான் முன் அறிவித்த அனைத்தும் அவ்வாறே நிகழ்ந்தது மிகவும் அதிசயமானது.
“நீங்கள் இரட்சிக்கப்படும் முன்பா இவை சம்பவித்தன-?'' என்று நீங்கள் கேட்கலாம். ஆம்
86. “தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே'' (ஆங்கில வேதாகமத்தில், 'Gifts and Callings of God are without repentance" - அதாவது “மனந்திரும்புதல் இல்லாமலே, வரங்களும் அழைப்புகளும் உள்ளன என்று இருக்கின்றது”-மொழி பெயர்ப்பாளர்) என்று வேதம் கூறுகின்றது. ஏதோ ஒரு நோக்கத்திற்காக நாம் இவ்வுலகில் பிறந்திருக்கிறோம். நீங்கள் இல்லை... உங்கள் மனந்திரும்புதல் உங்களுக்கு வரங்களைக் கொண்டு வருவதில்லை. நீங்கள் அவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று ஏற்கனவே முன் குறிக்கப்பட்டு உள்ளன. 
87. இப்பொழுது, பார்க்கையில், நான் ஒரு சிறு பையனாக இருந்த போது என்னுடைய ஆவல் என்னவென்றால்... நான் வாழ்ந்து கொண்டிருந்த நாட்டுப் புறத்தின் மீது எனக்கு அதிருப்தி ஏற்பட்டது. எப்படியானும் மேற்கிற்குச் செல்ல வேண்டுமென்ற ஆவல் எனக்கு இருந்தது. 
88. நான் சிறு பையனாயிருக்கையில், நான் சுடப்பட்டபோது, குண்டுகளை நீக்க எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான் முதல் மயக்க மருந்து அளிக்கப்பட்ட போது, வேதனையோடு கீழே சென்று கொண்டிருந்ததாக நான் எண்ணினேன். அந்த ஈதர் மயக்க மருந்து என்னை மயக்கத்தில் ஆழ்த்தினது. எட்டு மணி நேரமாக நான் மயக்கமுற்றிருந்தேன் என்று நான் நினைக்கிறேன். எனக்கு மயக்கம் தெளியாததினால், அவர்கள் கவலை கொள்ளத் தொடங்கினர். பென்சிலின் இல்லாமலேயே அவர்கள் அந்த பெரிய அறுவைச் சிகிச்சையை செய்தனர். ரத்தம்; என் நண்பன் ஒருவன் யதேச்சையாக துப்பாக்கியால் சுட்டதால், என் இரு கால்களையும்  நான்  இழந்து விடுவேனோ  என்னும்  நிலைமை  ஏற்பட்டது. 
89. சுமார் ஏழு மாதங்கள் கழித்து, இன்னுமொரு மயக்கம் எனக்கு செலுத்தப்பட்டது. நான் அந்த மருந்தினால் மயக்க முற்றிருந்தபோது அப்பொழுது நான் மேற்கிலுள்ள புற்களின் (Prairies) மீது நின்று கொண்டிருப்பதாகவும், பொன் நிறமுள்ள ஒரு பெரிய சிலுவை வானத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாகவும், அங்கிருந்து தேவனுடைய மகிமையின் பிரகாசம் இறங்கி வருவதையும் நான் கண்டேன். இவ்விதமாக நான் அங்கே நின்று கொண்டிருந்தேன். 
90. இன்றிரவு நீங்கள் புகைப்படத்தில் காணும் அந்த ஒளி இயற்கைக்கு மேம்பட்ட ஒன்று என்று விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. என்னைப் பொறுத்த வரையில், பரி.பவுலை கீழே விழத் தள்ளியது அந்த ஒளியே, இரவு நேரத்தில் இஸ்ரவேல் புத்திரரை வழி நடத்தினதும் அதே ஒளி தான். இங்கே, இந்த தூதனை நீங்கள் கவனித்தீர்களா-? “மேகம் அவரை சூழ்ந்திருந்தது'' பாருங்கள், அவர், “பகலில் ஒரு மேகமாக' இருந்தார். இப்பொழுது,   அதே ஒளி தான். 
91. முதலில் ஜனங்கள் அதைப் புரிந்து கொள்ள இயலாமல், அது தவறென்றும், நான் வெறுமனே கூறுகிறேன் என்றும் எண்ணினர். ஆனால் அது உண்மையென்பதை நிரூபிக்க, பரிசுத்த ஆவியானவர் விஞ்ஞான கருவிகளின் மூலம் அநேக முறை அதைப் புகைப்படம் எடுக்கச் செய்தார். 
92. நான், “ஒரு ஸ்திரீ மரண நிழலினால் மூடப்பட்டிருக் கிறாள்,'' என்று உரைத்தேன். அவள் புகைப்படத்தை எடுத்த போது, ஒரு கறுத்த நிழல் அவளை மூடியிருந்தது. சில வாரங்களுக்கு முன்பு ஒரு பட்டணத்தில் நான் பிரசங்கம் செய்து கொண்டிருந்தேன். பிரசங்கம் நடந்து கொண்டிருக்கும் போது, நாங்கள் பிரசங்கிக்கையில், நீங்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது என்பது உங்களுக்குத் தெரியும், பிரசங்கம் செய்கையில் இந்தப் புகைப்படம் எடுத்த போதும், அதே நியதி கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் யாரோ ஒருவர் ஒரு புகைப்படக் கருவியை, காமிராவை வைத்திருந்தார். ஆகவே நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்த, அந்நியராகிய ஸ்திரீயை நோக்கி கூறினேன்... நான்- நான் சதர்ன் பைன்ஸில் இருந்த போது, நான் “செல்வி இன்னார்- இன்னார் அவர்கள் மீது ஒரு நிழல் காணப்படுகின்றது,” என்றேன். என் வாழ்க்கையில் நான் முன்பு கண்டிராத ஒரு ஸ்திரீ. “நீங்கள் இப்பொழுது தான் வைத்தியரைக் கண்டு வந்து  இருக்கிறீர்கள். உங்கள் இரு மார்பகங்களிலும் புற்று நோய் பரவியுள்ளது. நீங்கள் வைத்தியரால் கைவிடப்பட்டீர்கள். மரணத்திற்கேதுவான ஒரு கறுத்த முகமூடி உங்களை  நிழலிட்டிருக்கிறது,'' என்றேன். 
93. அப்பொழுது காமிராவை வைத்துக் கொண்டிருந்த சகோதரியிடம், “அந்த ஸ்திரீயைப் புகைப்படம் எடு'' என்று ஏதோ ஒன்று கூறினது. புகைப்படம் எடுக்க அந்த சகோதரிக்கு விருப்பமில்லை. ஆனால் மேலும் மேலும் “புகைப்படம் எடு'' என்னும் கட்டளை தொனித்துக் கொண்டே இருந்ததால், திடீரென்று காமிராவை எடுத்து புகைப்படத்தை... புகைப்படத்தை எடுத்தார்கள். விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது, அதோ அங்கே இருக்கின்றது. கறுத்த நிழல்; அங்கே அறிக்கைப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. 
94. 'சுகமடைவேன்' என்னும் விசுவாசம் அந்த ஸ்திரீக்கு தோன்றின போது, அவர்களுக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. "அந்த நிழல் மறைந்து விட்டது.'' என்று நான் கூறின மாத்திரத்தில், மற்றொரு புகைப்படம் எடுக்கப்பட்டது. பாருங்கள்-? அதில் கறுத்த மூடி மறைந்து போய், புகைப்படம் தெளிவாகக் காணப்பட்டது. தேவனுடைய கிருபையால் அந்த ஸ்திரீ உயிரோடிருக்கிறார்கள்.
95. நான் எதைக் குறிப்பிடுகின்றேன் என்று உங்களுக்குப் புரிகின்றதா-? (சபையார் “ஆமென்,'' என்கின்றனர்-ஆசி) நீங்கள் உண்மையைக் கூறினால், சிறிது காலத்திற்கு கேலி பரியாசத்திற்கு ஆளாவீர்கள். சில காலம் நீங்கள் தவறாகப் புரிந்த கொள்ளப் படுவீர்கள். ஆனால் நீங்கள் அதில் நிலை கொண்டு இருந்தால், தேவன் அது தான் உண்மையென்று நிரூபிப்பார். பாருங்கள்-? அதில் நிலை கொள்ளுங்கள். ஆபிரகாமுக்கும் மற்றவர்க்கும் நேர்ந்தது போன்று, அது நிரூபிக்கப்பட அநேக ஆண்டுகள்  கழியலாம்,  ஆனாலும்  அவர்  அதை  உண்மை என்று  நிரூபிப்பார்.
96. 30 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த கர்த்தருடைய தூதன் இறங்கி வந்தபோது, என் மனைவியும், இன்றிரவு இங்கு வந்திருப்பவர்களில் சிலரும் என்னுடன் அப்போது இருந்தனர். கர்த்தருடைய தூதன் முதன் முறையாக ஜனங்களுக்கு முன்பாக ஆற்றின் கரையில் இறங்கி வந்த போது, அங்கிருந்தவர் யாராகிலும் இப்பொழுது இங்கு இருக்கின்றனரா-? உங்கள் கைகளை உயர்த்துங்கள். ஆம், இருக்கின்றனர். பாருங்கள்-? இப்பொழுது, திருமதி வில்சன் தங்கள் கரத்தை உயர்த்துவதை நான் காண்கின்றேன். அவர்கள் அன்று அங்கு நின்று கொண்டிருந்தார்கள். என் மனைவியும் கூட அங்கு இருந்தாள். வேறு யார் அங்கு இருந்தனர் என்பது எனக்கு ஞாபகமில்லை. பகல் 2 மணியளவில் நான் ஞானஸ்நானம் கொடுத்து கொண்டிருந்த போது, அநேகர் ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்தனர்.
 97. ஒரு வாரமாக மழை இல்லாத காரணத்தால், வானம் வெண்கல நிறமாகக் காணப்பட்ட அந்நேரத்தில் வானத்தில் இருந்து பலத்த முழக்கத்துடன் இறங்கி வந்தார். அவர் "கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டது போன்று, அவருடைய இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக நீ ஒரு செய்தியுடன் அனுப்பப்பட்டு இருக்கின்றாய்,'' என்று கூறினார். 
98. அநேகர், பட்டணத்திலுள்ள வர்த்தகரும், கரையில் அப்பொழுது நின்று கொண்டு இருந்தனர். அதன் அர்த்தம் என்ன என்று அவர்கள் என்னைக் கேட்டார்கள். நான், “அது எனக்காக அல்ல, உங்களுக்காகவே நேர்ந்தது என்று நான் நம்புகிறேன்,'' என்று கூறினேன். ஹும் ஹும் அது சென்றது. அந்த தூதன் சென்ற பிறகு, நீங்கள் நினைவுகூருவீர்களானால், அவர் சரியாக வெளியே, மேற்கு புறமாக சென்று, பாலத்தின் மேலே சென்று, மேற்கு பக்கமாகச் சென்றார் என்று பதிலளித்தேன். அந்த பாலத்திலிருந்து அவர் மேலே சென்று, மேற்கில் மறைந்து விட்டார். 
99. பின்பு நான் ஒரு வான ஆராய்ச்சி செய்கின்ற ஒருவரை சந்தித்தேன், இயேசுவை காண வந்த சாஸ்திரிகளைப் போன்றவர். நட்சத்திரங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு குறிப்பிட்ட நட்சத்திரக் குழுவில் ஒன்றாகக்கூடி வந்ததைக் குறித்து என்னிடம் அவர்கள் கூறினர். 
100. இந்த மூன்று நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து நட்சத்திரக் குழுவாக இருந்த போது, பாபிலோனில் இருந்த அந்த சாஸ்திரிகள் பாலஸ்தீனாவை நோக்கிப் பார்த்தனர். அநேக முறை அதை நான் கூறினதை நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு அது உண்மையென்று நிரூபிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா-? சகோதரன் சாத்மன் நீங்கள் எங்கே இருந்தாலும் சரி, இன்றிரவு அந்த செய்தித்தாளை வைத்திருக்கின்றீரா-? அது டிசம்பர், ஒன்பது, ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளாகும். அது ஒரு, பத்திரிக்கை நிருபர் அங்கே சென்றார், அங்கே உள்ள காரியங்களை அவர்கள் தோண்டிப் பார்த்தனர். நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருப்பது, நாம்... வருகின்ற வருடம் 1970 என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஏழு வருடங்கள் கணக்கில் இல்லாமல் இருக்கின்றது, கற்பாறைகள் தோண்டப்பட்டு, அது தவறு என்று நிரூபிக்கப்பட்டு இருக்கின்றது. நாம் நினைப்பதைக் காட்டிலும் தாமதம் ஆகிவிட்டது. சகோ.ஃபிரட்-சாத்மனை நான் காணவில்லையே-! இங்கு இருக்கின்றீர் களா-? உங்களிடம் அந்த செய்தித்தாள் உள்ளதா-? அவரிடம் இருக்கின்றது. நாளை இரவு அது படித்துக் காண்பிக்கப்படும், இன்றிரவு நமக்கு நேரமில்லை. ஆதலால், நீங்கள் காணலாம். 
101. ஆகவே சரியாக கவனியுங்கள், இயேசுவின் காலத்தில் பாபிலோனிலிருந்த அந்த வான சாஸ்திரிகள் யூத வான சாஸ்திரிகள் நட்சத்திரங்களை ஆராய்ந்தனர், அந்த நட்சத்திரங்கள் தங்களுக்குள், நட்சத்திரங்கள் கூட்டமாக ஒன்று சேர்வதைக் கண்டனர். அப்படி அவை ஒன்று கூடின போது, மேசியா பூமியில் தோன்றிவிட்டார் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். அவர்கள் பாடிக் கொண்டே எருசலேமுக்கு வந்து, அது 2-ஆண்டு பயணம், “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே-?'' என்று வினவினார்கள். அவர்கள் தெருக்களில் இங்கும் அங்கும் நடந்தனர். ஆகவே, ஏன், அ...
இஸ்ரவேல் ஜனங்கள் அவர்களை ‘பக்தி பயித்தியம் கொண்ட குழு' என்று கேலி செய்தனர். அந்த நிகழ்ச்சியைக் குறித்து அவர்கள் ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. ஆனால் மேசியாவோ ஏற்கனவே பூமியில் பிறந்து விட்டார். அந்த வரலாற்றின் மீதி உள்ள பாகம் உங்களுக்குத் தெரியும்.
இப்பொழுது,  அதை  நாம்  நாளை  இரவு  படிப்போம். 
102. இப்பொழுது, தரிசனங்கள் ஒரு போதும் தவறுவதில்லை என்பதற்கு நாம் இப்போது வருவோம். ஏனெனில் அவை தேவனால் உண்டாவதால் ஒரு போதும் தவறுவது இல்லை. என் வாழ்க்கை பிரயாணம் முழுவதும் ஏதோ ஒன்று என்னை இழுத்துக் கொண்டிருக்கின்றது, என்னை கட்டி இழுக்கின்றது. 
103. பிறகு, அந்த வான சாஸ்திரி என்னிடம் இந்த காரியங்களை கூறினபோது நான் ஒரு பையனாக, ஒரு வேட்டை காப்பாளனாக இருந்தேன், அல்லது அதற்கு முன் னதாக, அது இந்த காரியங்களைக் குறித்து தான் என்று நான் விசுவாசிக்கின்றேன். ஆகவே அது எனக்கு பயத்தை உண்டாக்கியது, ஏனென்றால் அந்த வான சாஸ்திரியைக் குறித்து எனக்கு பயமிருந்தது. ஆனால் வேதாகமத்தில் கூறப்பட்டு உள்ள வான சாஸ்திரிகள் சரியானவர்கள் என்பதை நான் பின்னர் கண்டுபிடித்தேன். ஏனெனில் பூமியில் ஒன்றை வெளிப்படுத்துவதற்கு முன்பு, தேவன் அதை முதலில் வானங்களில் வெளிப்படுத்துகிறார். வானத்திலுள்ள கிரகங்களை இந்த வான சாஸ்திரிகள்  கூர்ந்து  கவனித்து  வந்தனர். 
104. “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருக்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்,'' என்று பேதுரு கூறினான். இப்பொழுது, ஆனால் எல்லா தேசங்களிலும் அவருக்கு பயப்படுகிறவர்களை தேவன் ஏற்றுக்கொள்கிறார். (ஒலிநாடாவில் காலியிடம்-ஆசி). 
105. ஆகவே நாம் காண்பதென்னவெனில் அந்த வானசாஸ்திரி சொன்னதை நான் மறக்க முயன்றேன். அதை விவரிக்க அநேக மணி நேரம் செல்லும். அது என் சிந்தையில் இங்கும் அங்குமாக சென்று, எனக்கு பயித்தியம் பிடித்து விடும் போல் தோன்றினது. 
106. இந்த வானசாஸ்திரி என்னிடம், “நீ கிழக்கில் வெற்றி காணமாட்டாய், ஒரு அடையாளத்தின் கீழ் நீ பிறந்தாய். அந்த அடையாளம், அந்த நட்சத்திரக் கூட்டம்... நீ பிறந்த தினத்தன்று மேற்கு திசையில் தொங்கிக் கொண்டிருந்தது. எனவே நீ மேற்கில் தான் செல்லவேண்டும்,” என்றார்.
நான், “அதெல்லாம் ஒன்றுமில்லை,'' என்றேன்.
107. அதனுடன் எனக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. ஆகவே, அது முதற்கொண்டு, இன்னுமாக, இன்னுமாக, என்னுடைய இருதயத்திலிருந்து அது வெளியே விலகிச் செல்லவே இல்லை.
108. பிறகு அன்றிரவு நான் எனக்கு நேர்ந்த தரிசனங்களைக் குறித்து சிந்தனை செய்து கொண்டிருந்த போது, எனக்கு அவைகளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பாப்டிஸ்டு ஸ்தாபனத்தைச் சேர்ந்த என் சகோதரர்கள் அது பிசாசினால் உண்டானது என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் அந்த தூதன் தோன்றின போது, அவை அனைத்தையும் வேத வாக்கியங்களுடன் இணைத்து காண்பித்து, “அப்பொழுது இருந்தது போல,” என்றார். 
109. இயேசுவின் காலத்திலிருந்த ஆசாரியர்கள் இயேசுவின் பிறப்பை அறியாதவர் களாய், தாங்கள் உடுக்கும் உடைகளைக் குறித்தும், அவர்களிடையே காணப்பட்ட கருத்து வேற்றுமை குறித்தும் தர்க்கம் செய்து கொண்டு இருந்த சமயத்தில், அந்த சாஸ்திரிகள் கிறிஸ்துவின் நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து சென்றனர். 
110. போதகர்கள், இயேசுவை போலியாள் என்றும் பெயல்செபூப் என்றும் அழைத்த போது, பிசாசுகள் எழும்பி "நீர் யாரென்று எங்களுக்குத் தெரியும். நீர் தேவனுடைய பரிசுத்தர்; நேரம் வருவதற்கு முன்பே எங்களை வேதனைப்படுத்தவாவந்தீர்,'' என்றன. 
111. பவுலும் சீலாவும் சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டு வந்தபோது, தெருவில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு சிறிய குறி சொல்லுகின்ற... அந்த தேசத்தின் பிரசங்கிகளோ “இம்மனிதர் வஞ்சகர். இவர்கள் நம் சபையைக் கலைத்து, தங்கள் பரிசுத்தக் குலைச்சலினால் உலகத்தைத் தலை கீழாகத் திருப்புகின்றனர்,'' என்று குற்றஞ்சாட்டினர்.
112 ஆனால் நடந்தது என்ன-? அந்த சிறிய வானவியலாளள், அந்த சிறிய குறி சொல்பவள், “இவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்; இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள்,'' என்று கூறினாள். பவுல் அவளுக்குள் இருந்த ஆவியைக் கடிந்து கொண்டான். அவன் யாரென்று சாட்சி பகர அவனுக்கு யாரும் அவசியம் இல்லை. 
113 இயேசுவும்கூட பிசாசுகள் பேசாமலிருக்கும்படி அதட்டினார். இது எதைக் காண்பிக்கிறது என்றால், சில சமயங்களில் பிசாசுகளுக்குப் போதகர்களைக் காட்டிலும் தேவனுடைய காரியங்களைக் குறித்து அதிகம் தெரியும்; போதகர்கள் தங்கள் மதக்கோட்பாடுகளினால் கட்டப்பட்டவராய் இருக்கின்றனர். அவ்வாறே நாம் வேதத்தில் காண்கிறோம். தேவன் ஒரு போதும் தமது வழிகளை மாற்றுவது கிடையாது. 
114 ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் நான் சகோ. நார்மன் வீட்டில் கூட்டம் நடத்தி விட்டு திரும்பி வரும் நேரத்தில், சாலையில் கார் ஓட்டிக் கொண்டு வந்திருந்த அச்சமயம், கர்த்தராகிய தேவன் ஒரு தரிசனத்தை எனக்கு அருளினார். அத்தரிசனத்தில் நான் என் வீட்டின் வாசலுக்கு முன்பாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன். அப்பொழுது வானிலை (weather) மோசமாயிருந்தது போல் தோன்றினது. 
115 உங்களில் அநேகருக்கு அத்தரிசனம் ஞாபகமிருக்கலாம். என் தரிசனங்களின் புஸ்தகத்தில் அது எழுதப்பட்டுள்ளது. இவைகளை மறந்து விடக்கூடாது என்பதற்காகவே அவைகளை நான் எழுதி வைத்திருக்கிறேன்.
116 அந்தத் தரிசனத்தில், ஏதோ ஒன்று ஒரு சந்தின் வழியாக வருவதைக் கண்டேன். என் முற்றம் முழுவதும் கற்களால் நிறைந்திருந்தன. அந்த சந்து முழுவதிலும் கூலியாட்கள் இருந்தனர். மரங்கள் வெட்டப்பட்டும், பிடுங்கப்பட்டும் இருந்தன. நான் வீட்டினுள் செல்ல முயன்றபோது, வாசல் (gate) கற்களால் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். அங்கு நின்று கொண்டிருந்த மனிதனிடம், 'ஏன் இப்படி-?' என்று கேட்டதற்கு, அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. அவன் என்னைப் பின்னே தள்ளி விட்டு,  “இந்தப் பிரசங்கிமார்களே இப்படித்தான்,'' என்றான். 
117 “என் வாசலை ஏன் நீ கற்களால் அடைத்தாய் என்று தானே நான் கேட்கிறேன். என் தெருவில் வந்து இப்படிச் செய்கின்றாயே-! ஏன் இப்படி செய்தாய்-?'' என்று நான் கேட்டதற்கு, அவன் ஏறக்குறைய என் கன்னத்தில் அறைந்து, என்னைப் பின்னே தள்ளி விட்டான்.
118 ஆகவே நான் ''அவன் பேசுவது என்ன காரியம் என்பது அவனுக்கு தெரியவில்லை என்று நான் அவனிடம் கூறுவேன்,'' என்று நினைத்தேன். 
119 அப்பொழுது ஒரு சத்தம், “நீ அதைச் செய்யாதே. நீ ஒரு பிரசங்கி,' என்று உரைத்தது.
ஆகவே நான், “சரி நல்லது,” என்றேன். 
120 நான் திரும்பிப் பார்த்த போது, என் வலது பக்கத்தில், வாசலின் முன்னால் பழங்காலத்து குதிரை வண்டி (Schooner) ஒன்று காணப்பட்டது. அது எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா-? அந்த வண்டி மூடப்பட்டிருக்கும். அதில் குதிரைகள் சேர்க்கப்பட்டிருக்கும். வண்டி ஓட்டுபவருக்கு எதிர்வாடையில் என் மனைவி அமர்ந்திருந்தாள். நான் திரும்பிப் பார்த்த போது, என் பிள்ளைகளும் அதில் அமர்ந்து இருந்தனர். நான் வண்டியினுள் ஏறி என் மனைவியிடம், 'அன்பே, என்னால் இயன்ற வரை, நான் நிலை நின்றேன்,'' என்றேன். முன்னால் செல்லும் குதிரையின் கடிவாளத்தில் இணைக்கப்பட்டிருந்த கயிறை நான் பிடித்து இழுத்து, மேற்குத் திசையில் வண்டியை ஓட்டிச் சென்றேன். 
121 அப்பொழுது ஒரு சத்தம், இது சம்பவிக்கும்போது, மேற்கில் செல்வாயாக,'' என்று என்னிடம் கூறினது. 
122 நமது சபையின் கட்டிடத்தை கட்டும் பணியை மேற்கொண்டு வரும் தர்மகர்த்தாவுமான சகோ.உட் (Bro. Wood)- உங்களில் எத்தனை பேருக்கு அந்தத் தரிசனம் ஞாபகமிருக்கிறது-? உங்களிடம் இத்தரிசனத்தைப் பற்றிக் கூறினது ஞாபகமிருக்கின்றதா-? நிச்சயமாக. அது எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. நான் சகோ. உட்டிடம், அவர் அந்த நிலத்தை வாங்கியிருந்தார். அங்கு ஒரு கல் கட்டிடம் கட்ட அவர் எண்ணம் கொண்டிருந்தார். நான் அவரிடம், “அங்கு கட்டிடம் கட்ட வேண்டாம். அவர்கள் அதற்கு நஷ்டஈடு கொடுக்கமாட்டார்கள்,'' என்றேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதை நான் கூறினேன். அவரிடம் நான், “ஒருக்கால் அவர்கள் பாலத்தை இவ்வழியாகக் கொணரலாம். நான் கண்ட அந்த கற்கள், அவர்கள் அங்கிருந்த என் வீட்டின் அஸ்திபாரத்தையும் நடை பாதையையும் உடைத்த துண்டுகளாய் இருக்கலாம்.'' அவை கற்களுக்குப் பதிலாகக் கான்க்ரீட் துண்டுகளாக அமைந்தன. “அந்த துண்டுகளை அவர்கள் இங்கு கொண்டு வந்து போடுவார்கள். ஏனெனில் அவர்கள் இவ்வழியாக பாலம் அமைக்க உத்தேசித்துள்ளதாக நான் செய்தித் தாளில் கண்டேன்,'' என்றேன். நல்லது, அவர் என் ஆலோசனைக் கிணங்கி, கட்டிடம் கட்டவில்லை. ஓரிரண்டு ஆண்டு பின்னர் அவர்கள் அவ்வாறே பாலத்தை அவ்வழியே கொண்டுவர வேண்டுமென்று தீர்மானித்தனர். நான் கூறினது நிறைவேறியது. ஆனால் நானோ அதை மறந்தே போய்விட்டேன். 
123 ஒரு ஆண்டிற்கு முன்பு ஒரு விநோதமான சம்பவம் நிகழ்ந்தது. சகோ. ஜுனியர் ஜாக்சனின் வீட்டில் நான் ஒரு இரவு கூட்டம் நடத்திக் கொண்டிருந்தேன். அவர் இப்பொழுது இங்கு அமர்ந்திருக்கிறார். அவர் பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒரு மெத்தோடிஸ்டு போதகர். அவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று, இப்பொழுது  நம்  துணை  சபை  ஒன்றிற்கு  போதகராய் இருக்கின்றார். 
124 ஜனங்களிடம் எவ்வாறு தேவன் ஈடுபடுகின்றார் என்பதைக் காண்பிக்க - நான் இதனை என் முழு இருதயத்துடன் கூறுகிறேன் - பரிசுத்தாவியானவர் நமது சபையில் அசைவாடுவதைக் காட்டிலும் உலகிலுள்ள வேறெந்த சபையிலும் அசைவாடுவதை நான் கண்டதில்லை, அவர்கள் இடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இப்பொழுது இல்லை. நாம் யாவரும் அப்படித்தான் இருக்கின்றோம். ஆனால் நான் அறிந்தமட்டில், மற்றோரைக் காட்டி லும் நாம் அருகாமையில் இருக்கின்றோம்.
என்ன நடக்கப்போவது என்பதை நான் முன்கூட்டியே அறிந்திருந்தேன் என்பதைக் காண்பிக்கவே இதைக் கூறுகிறேன்.
125 சகோ. ஜாக்சன் ஒரு கனவு கண்டார். அவரால் அதை மறக்க முடியவில்லை. அவருடைய சபையை விட்டு நான் புறப்படு முன்பு, அவரால் அதை கூறாமலிருக்க முடியவில்லை. 
126 சகோ. ஜாக்சன், அது எவ்வளவு நாட்களுக்கு முன்பு-? (சகோதரன் ஜாக்சன், “61 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் நான் அந்த சொப்பனத்தைக் கண்டேன் சகோதரன் பிரான்ஹாம்'' என்று கூறுகிறார் - ஆசி) 61-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவர் ஒரு சொப்பனத்தைக் கண்டார். 
127 அவர் என்னை அணுகி, ''சகோ. பிரான்ஹாம், என் இருதயத்தில் ஒன்று உண்டு. அதை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன்'' என்றார்.
நான், “ சகோதரன் ஜாக்ஸன் சரி கூறுங்கள்'' என்றேன். 
128 “நான் ஒரு சொப்பனம் கண்டேன்'' என்றார். அவ்வளவு தான். நான் அமைதலாக அவர் கூறினதைக் கவனமாய்க் கேட்டுக் கொண்டே வந்தேன். அவர், “நீலநிறப் புற்கள் வளர்ந்திருந்த ஒரு வயலில் ஒரு பெரிய மலை காணப்பட்டது. அந்த மலையின் உச்சியில், தண்ணீர் மண்ணை அடித்துக் கொண்டு போயிருந்த ஒரு இடத்தில் ஒரு உச்சிப் பாறை (top rock) இருந்தது. அங்குப் புற்கள் இல்லை. மண்ணைத் தண்ணீர் அடித்துக் கொண்டு போனபோது, அந்த உச்சிக் கற்பாறையில் அது ஏதோ சில எழுத்துக்களைப் பொறித்து இருந்தது. நீர் அங்கே நின்று கொண்டு, இந்த கற்களின் மேல் காணப்பட்ட எழுத்துக்களை வியாக்கியானம் செய்து கொண்டு இருந்தீர்.” மேலும் அவர் கூறினார், “நாங்கள் எல்லாரும்," அவர் இவ்விதமாக சொன்னார், அவர், “ஜார்ஜியாவிலிருந்தும், மற்றும் எல்லா இடங்களிலும் இருந்த சகோதரர், நாங்கள் சுற்றிலும் நின்று கொண்டு, அந்த மலை, கல்லின் மேல் எழுதப்பட்டு இருந்த அந்த ரகசிய எழுத்துக்களை நீர் வியாக்கியானம் செய்வதை நாங்கள் கவனித்துக் கொண்டிருந்தோம்,” என்றார். 
129 மேலும் “பின்பு ஒரு கடப்பாறையை நீங்கள் வெறும் காற்றிலிருந்து கையில் எடுத்தீர்கள்'' என்றார். அப்படித்தானே சகோதரனே-? “கூர்மையான ஒரு கடப்பாறை.'' ''அதை எப்படி எடுத்தீர்கள் என்று எனக்குத் தெரியாது. கடப்பாறையினால் நீங்கள் மலையைப் பிளந்து அந்த உச்சி பாறையை அப்படியே தூக்கி விட்டீர்கள். ஆகவே - ஆகவே பிறகு, அது கூர்நுனி கோபுர வடிவில் இருந்தது. ஆகவே நீர் அதன் உச்சியில் பிளந்து எடுத்தீர்,'' என்றார். இப்பொழுது கூர்நுனிக் கோபுரச் செய்தியை நான் பிரசங்கிப்பதற்கு அநேக மாதங்கள் முன்பே அவர் அந்த சொப்பனத்தைக் கண்டார். “அந்தக் கல்லைத் தூக்கி விட்ட பின்பு, அதனடியில் ஒரு வெள்ளைப்பாறை இருந்தது. நீங்கள் எங்களிடம்; சூரியனோ வெளிச்சமோ இதன் மேல் இதுவரை பட்டதில்லை. இதை பாருங்கள். நன்றாக கவனியுங்கள் என்றீர்கள்,'' என்றார். 
130 அது சரி தான். ஏனெனில் வெளிச்சம் உண்டாவதற்கு முன்பே இந்த உலகம் சிருஷ்டிக்கப்பட்டது. நாமெல்லாரும் அதை அறிவோம். தேவ ஆவியானவர் தண்ணீரின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். ஆகவே - ஆகவே பிறகு, ஆதியிலே அவர், “வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று கட்டளையிட்டார். எனவே, அந்த மலை உண்டான காலத்தில், அந்தக் கல்லின் மேல் வெளிச்சம் பட்டிருக்க முடியாது. 
131 அவர், “இதை உற்று நோக்குங்கள். இதற்கு முன்பு இதன் மேல் வெளிச்சம் பட்டதில்லை என்று கூறினீர்கள்'' என்றார். அவர்கள் எல்லாரும் எழுந்த போது, அதைக் கவனிக்கும் படியாக நான் அவர்களிடம் கூறினேன், அவர்கள் அதைப் பார்க்க வந்தார்கள். 
132. மேலும் அவர் கூறினதென்ன என்றால், அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டு இருக்கையில், ஜுனியர் ஜாக்சன் என்னை ஓரக் கண்ணால் கவனித்துக் கொண்டு இருந்தாராம். அது அப்படித் தான் என்று நான், நம்புகிறேன், அவர் என்னைக் கவனித்தார். அப்பொழுது நான் ஒரு மூலையில் மெல்ல நழுவி, சூரியன் அஸ்தமிக்கும் மேற்கு திசையை நோக்கி சென்று, மலையின்மேல் ஏறி, மலையின் கீழிறங்கி, மலையின் மேல் ஏறி, மலையின் கீழிறங்கி, சிறு உருவமாகிக் கொண்டே அவர்கள் கண்களுக்கு மறைந்து விட்டேனாம். 
133 மேலும் அவர் என்னிடம், “சற்று கழிந்த பின்னர், அங்கிருந்த சகோதரர் மறுபக்கமாகத் திரும்பி: அவர் மறைந்து விட்டாரா-? அவர் எங்கே சென்றார்-?'' என்று கேட்டார்கள். பின்பு, சிலர் அந்த வழியாகச் செல்ல ஆரம்பித்தனர்; சிலர் ஒரு வழியாக சென்றனர். சிலர் வேறொரு புறமாக சென்றனர்'' என்றார். ஆனால் வெகு சிலர் மாத்திரமே தரித்து நின்று நான் எதை நோக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினேனோ அதை உற்று நோக்கிக் கொண்டு இருந்தனர். 
134 இப்பொழுது, அந்த சொப்பனத்தின் அர்த்தம் என்ன என்பதைக்கவனியுங்கள். நான் அவரிடமோ அல்லது அங்கிருந்த மற்றவரிடமோ விவரிக்கவில்லை. நான் 'ஆம்' என்று மாத்திரம் கூறினேன். என் இதயமோ நடுங்கிக் கொண்டிருந்தது. நான் பார்த்துக் கொண்டு இருந்தேன். இப்பொழுது, அந்த ரகசிய எழுத்துக்கள்... பொறுங்கள், நான் சற்று அதை அப்படியே விட்டுவிடுகிறேன். 
135 அண்மையில் சகோ. பீலர் - சகோ. பீலர் வழக்கமாக இங்கு இருப்பார். சகோ. பீலர், இங்கிருக்கிறீரா-? ஆம், அவர் பின்வரிசையில் இருக்கிறார். பில்லி என்னிடம், ''சகோ. பீலர் கவலையுற்று இருக்கிறார். அவர் விசித்திரமான சொப்பனம் ஒன்றைக் கண்டாராம்'' என்றான். 
136 நான் வீடுகளைச் சந்திக்கச் சென்றிருந்த போது, சகோ.பீலர் வீட்டிற்கும் சென்று இருந்தேன். அப்பொழுது அவர், “சகோ. பிரான்ஹாம், நான் வினோதமான சொப்பனம் ஒன்று கண்டேன். தண்ணீர் ஓடை ஒன்று மேற்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. இடது பாகத்தில் ஒரு பாதை இருந்தது. அந்த பாதையின் வழியாய் நான் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். நான் ஆடு மாடுகளைத் தேடிக்கொண்டிருந்தது போல் எனக்குத் தோன்றினது. நான் அந்த இடத்தை அடைந்தபோது, வலது பாகத்தில் நீங்கள் நின்று கொண்டிருப்பதைக் கவனித்தேன். ஒரு பெரிய மாட்டு மந்தையை நீங்கள் ஒன்று கூட்டிக் கொண்டு இருந்தீர்கள். அங்கு நிறைய புல் வளர்ந்திருந்தது. மாடுகளை எல்லாம் ஒன்று கூட்டின பின்பு, அவைகளை ஆற்றினருகில் ஓட்டிச் சென்றீர்'' என்றார். அந்த மாடுகளை அவர் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நான் தலையசைப்பினால் ஒருக்கால் உணர்த்தியிருப்பேன். அவர், “அந்த மாடுகள் எளிதான வழி யில் செல்வது நன்றாயிருந்திருக்கும். ஆனால் சகோ. பிரான்ஹாமோ அவை நதியின் வலது பாகத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். எனவே நான் பாதையின் வழியாக சென்று, நதியைக் கடந்து மாடுகள், மற்றைய பாகத்துக்கு வராமல் தடுத்து, அவைகளை அந்த பாகத்திலேயே வைக்க வேண்டும் என்று எண்ணினேன்,'' என்றார். நான் அந்த மந்தையைப் பின்தொடராமல், மேற்கு நோக்கிச் சென்றதை அவர் கவனித்தாராம். “வழி தப்பி சென்ற மாடுகளைத் தேடிக்கொண்டு அவர் செல்கின்றார் போலும்-!" என்று அவர் எண்ணினாராம். 
137 அந்த சொப்பனத்தை அவர் என்னிடம் கூறினவுடனே நான் அதைப் பார்த்தேன். கவனியுங்கள், நான் என்ன செய்கிறேன் என்பதைக் காண ஆவல் கொண்டவராய் அவர் நான் சென்ற திசையின் பக்கம் நோக்கினார். அப்பொழுது நான் ஒரு மலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை அவர் கண்டார். திடீரென்று நான் மறைந்து விட்டேன். எனக்கு என்ன நேர்ந்ததோ என்று ஐயங்கொண்டு, அவர் கீழே இறங்கினார். அங்கு ஒரு சிறு ஓடை இரண்டாகப் பிரிந்து இடது பக்கம் செல்வதை அவர் கண்டார். அது சரியென்று நான் நினைக்கின்றேன், சகோ.பீலர், ஆம். ஆகவே அவர்... கவனித்தார். ஆனால் நான் சென்ற பாகத்தில் ஒரு பெரிய நீர்வீழ்ச்சி இருந்தது. ஒருக்கால் அந்த நீர் வீழ்ச்சியில் நான் மூழ்கி மாண்டு போனேனோ என்று அவர் எண்ணினார். அவர் சுற்றும் முற்றும் பார்த்த போது, அந்த நீர் வீழ்ச்சிகளின் பாதிப்புகளை அவர் கவனித்தார், அது இந்த வழியாக கீழே சென்று பொங்குகின்ற கிணற்றைப் போல (artesian well) தண்ணீர் மேலே பீரிட்டு வரும்படிச் செய்தது. அந்த தண்ணீர் மறுபடியும் பூமிக்குள் செல்லாமல், மேல் நோக்கியே பாய்ந்து கொண்டு இருந்தது. அவர் அந்த சிறு ஓடையை உற்று நோக்கிக் கொண்டிருந்த போது, வட்டமுள்ள காதுகளையுடைய சில சிறுமிருகங்களை அவர் அங்கு கண்டார். “நான் இவைகளில் ஒன்றை எடுத்துக் கொள்ளப் போகிறேன்,'' என்று எண்ணி, அவர் அந்த பாகத்திற்குக் கடந்து சென்றார். 
138 எனக்கு என்ன நேர்ந்ததோ என்று அப்பொழுது அவர் கவலை கொள்ளத் தொடங்கினார். ஏதாவது ஒரு குறுகிய பாறை பிளவின் வழியாய் கடந்து சென்று இருப்பேனோ என்று கருதி, அவர் ஒரு சிறிய குன்றின் உச்சியில் ஏறி நோக்கினார். ஆனால் அத்தகைய பிளவு ஒன்றையும் அவர் காணவில்லை. “எங்கள் சகோதரனுக்கு என்ன ஆனது-?'' “சகோ. பிரான்ஹாமுக்கு என்ன நேர்ந்தது-?" என்று அவர் கவலையுற்றார். அவருக்கு பயம் அதிகரித்துக் கொண்டே வந்த போது, என் சத்தத்தை அவர் கேட்டாராம். நான் ஒரு மலையின் உச்சியில் நின்று கொண்டு, சமீபத்தில் அவரிடம் நான் கூறின ஒரு சொப்பனத்தின் அர்த்தத்தை அவருக்கு விவரித்து கொடுத்தேனாம். அவர், கர்த்தரிடத்தில் காத்திருக்க வேண்டும் என்றும், என்றாவது ஒருநாள் நான் அவரை ஒரு தீவில் சந்திப்பேன் என்றும் கூறினேனாம். அவர் அங்கே இருந்தார்... 
139 இப்பொழுது அந்தச் சொப்பனத்தின் அர்த்தம் இது தான்: அது ஒரு பெரிய நதியாக இருந்தது. எனவே அது ஜீவநதியைக் குறிக்கின்றது. நான் அந்த நதியின் வழியாய் மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்தேன். அவரும் மேற்கு நோக்கியே சென்றார்; அவர் ஓடிக் கொண்டிருந்தார்... அவர் பாதையின் வழியாக சென்றார். பாதையின் மறு பக்கத்தில் புல் நிறைய வளர்ந்திருந்தது. அது ஒரு புதர் காடாக இருந்தது. ஆனால் அங்கே புல் நிறைய இருந்தது. கர்த்தரையும், கர்த்தருடைய ஆகாரத்தையும் நாம் அநேக இடுக்கண்களின் வழியாய் சென்று கண்டு பிடிக்கிறோம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. சிதறிக்கிடந்த மாடுகளை நான் ஒன்று சேர்ப்பது, இந்தச் சபையை தேவனுடைய வழியில் காத்துக் கொள்வதைக் குறிக்கின்றது. கூடுமானால் மாட்டு மந்தை சுலபமான பாதையில் - அதாவது ஸ்தாபனங்களின் வழியாக - செல்ல விரும்பும். அந்த பாதை ஸ்தாபனத்தின் பாதையைக் குறிக்கின்றது. சபையானது ஸ்தாபனங்களின் வழியாக செல்லக் கூடாது என்பதற்காகவே நான் அவரை அந்தப் பாதையில் திரும்பவும் அனுப்பினேன். 
140 நான் மேற்கில் செல்லாதபடிக்கு ஒரு சுவர் தடுப்பதை அவர் கண்டாரே, அது தான் வரி விஷயமாக அரசாங்கத்துடன் எனக்கிருந்த வழக்காகும். அதனின்று எப்படி வெளியே வந்தேன் என்பது யாருக்குமே புரியாத ஒரு விஷயம். அந்த சுவர் என்னை போக விடாதபடி தடுத்தது. ஆனால் கர்த்தரோ அதை நான் தாண்டிச் செல்லும்படி செய்தார். சகோ. பீலர், நான் உங்களை அந்த தீவில் சந்திப்பேன். 
141 இதற்கு பின்பு உடனடியாக சகோ. ராய் ராபர்சன் என்னை அணுகி, ஒரு சொப்பனம் கண்டதாகக் கூறினார் சகோ. ராய், இன்றிரவு இங்கு இருக்கின்றீர்களா-? ஆம், நான் - நான் நம்புகிறேன்.... என்ன-? (ஒரு சகோதரன், “அந்த பக்கமாக இருக்கிறார்” என்று கூறுகிறார் - ஆசி). ஆம், அந்த பக்கத்தில் இருக்கின்றார். அவர் என்னை அழைத்தார், அவர் ஒரு சொப்பனம் கண்டிருந்தார். நாங்கள் மாடுகளை ஒன்று கூட்டி சேர்ப்பதாக அவர் சொப்பனம் கண்டார். (மாடுகளை ஒன்று சேர்ப்பதாக சொப்பனம் காணுவது இது மூன்றாம் தடவை.) அங்கு இடுப்பளவில் புல் வளர்ந்திருந்தது. மாடுகளுக்கு நிறைய ஆகாரம் அங்கிருந்தது. சகோதரராகிய நாமெல்லாரும் அப்பொழுது ஒன்று கூடியிருந்தோம். மத்திய உணவு அருந்துவதற்காக நாம் ஒரு இடத்திற்கு வந்தோம். அப்பொழுது சகோ.ஃபிரட்-சாத்மன் எழுந்து நின்று, "அந்த மகத்தான தீர்க்கதரிசி ஆகிய எலியா, இன்று பகல் 12 மணிக்கு இங்கிருந்து பேசுவார்,'' என்று அறிவித்தார். நாங்கள் உணவு அருந்தின பின்பு, எல்லாரும் சென்று விட்டனர். எலியாவின் செய்தியைக் கேட்காமலே இவர்கள் அனைவரும் சென்று விடுகின்றனரே என்று அவர் வியந்தார். 
142 இப்பொழுது சகோ.ஜாக்சன் கண்ட சொப்பனத்துடன் இது எவ்வாறு ஒத்துப் போகின்றது என்பதைக் காண்கின்றீர்களா-? அவ்வாறே சகோ. பீலர் கூறியதுடனும் இது இணைந்து போகின்றது. அது என்னவென்பதைக் கண்டு கொள்ள யாருமே காத்து இருக்கவில்லை. 
143 கவனியுங்கள், இதற்குப் பின்பு உடனடியாக சகோதரி காலின்ஸ்... (சகோதரி காலின்ஸ், இங்கு இருக்கின்றீர்களா-?) ஒரு சொப்பனம் கண்டார்கள். அந்த சொப்பனத்தில் அவர்கள், விவாகம் ஒன்றிற்காக இங்கே சபையில் இருந்தார்கள் அங்கே, மாணவாளன் பூரணமாயிருந்து, உள்ளே வருவதைப் பார்த்தார்கள்; ஆனால் மணவாட்டியோ பரிபூரணமானவளாக இல்லை, இன்னுமாக அவள் மணவாட்டியாய் இருந்தாள். இப்பொழுது அது தான் சபையாகும். அங்கு ஆராதனை நடந்து கொண்டு இருந்தது. இராப்போஜனம் போன்று ஒரு விருந்து அவ்விடத்தில் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது. சகோ.நெவில் ஆலயத்தில் விருந்து பரிமாறிக் கொண்டு இருந்தார். இதைக் கண்டதும் சகோதரி குழப்பமுற்றார்கள். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட ஆகாரம் அவர்கள் அதுவரை கண்டிராத சிறந்த ஆகாரமாக இருந்ததாம். அவர்களுக்கு அதிகமாக பசியெடுத்தது, சகோ.நெவில் ஆலயத்தில் விருந்து பரிமாறக் கூடாதே என்று அவர்கள் எண்ணினார்கள். அவர்களும் சகோ. வில்லார்டும் ஆகாரம் உண்பதற்காக ‘ராஞ்ச் வீட்டிற்கு' (Ranch House) செல்லப் புறப் பட்டார்கள். அப்பொழுது வலது பக்கத்திலிருந்த ஒளி அணைந்து விட்டதை அவர்கள் கண்டார்கள். அது என்னவென்பது உங்களுக்குத் தெரியும். 
144 அந்த ஆகாரம் - மணவாட்டி குறைவுள்ளவள். ஆனால் மணவாளன் பரிபூரணமானவர். மணவாட்டி இன்னமும் பரிபூரணப்படவில்லை. அங்கு அளிக்கப்பட்ட ஆகாரம் உண்மையான ஆகாரமில்லை. அது நீங்கள் இதுவரை அருந்திய ஆவிக்குரிய ஆகாரமாகும்.
இப்பொழுது  நான்  அந்த  நான்காம்  சொப்பனத்தில்  சிறிது  நிறுத்தட்டும்.
145 நானும், சகோ.ஃபிரட்-சாத்மனும், சகோ.பாங்க்ஸ்-உட்டும் சென்ற ஆண்டு ஜவாலினா பன்றிகளை வேட்டையாட அரிசோனாவுக்கு சென்றிருந்தபோது, கர்த்தர் என்னுடன் பேசினது உங்களுக்கு நினைவிருக்கின்றதல்லவா-? நாங்கள் பாதையின் வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது என்ன நேரிடும் என்று அவர் எனக்குக் காண்பித்தது அந்தப்படியே நிறைவேறினது என்பது உங்களுக்குத் தெரியுமா-? நான் கூறுவது சரியென்றால், இவ்விரு சகோதரர்களும் ஆமென்' என்று சொல்லட்டும் (அந்த இரண்டு சகோதரரும் “ஆமென்,'' என்கின்றனர் -ஆசி) அது ஒரு போதும் தவறாது. 
146 நாங்கள் ஒரு நாள் கார் ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது, கர்த்தருடைய தரிசனம் எனக்கு உண்டானது. வெளிநாடு செல்வதற்காக நான் ஆயத்தம் செய்து கொண்டு இருக்கும் சமயம் அது. அந்த தரிசனத்தில், நான் வெளிநாடு செல்ல புறப்பட்டு கடற்கரையை அடைந்தேன். அப்பொழுது கடலின் ஒரு பாகத்தில் கப்பல்கள் சென்று கொண்டிருப்பதைக் கண்டேன். அங்கு ஒரு சிறிய, குள்ளமாக இருந்த ஒரு மனிதன் என்னிடம், “சகோ.பிரான்ஹாம், உங்களுக்காக ஒரு படகை ஆயத்தம் செய்து வைத்து இருக்கிறேன்'' என்றார். அது ஒரு அடி நீளமுள்ள துடுப்புகளால் இயக்கப்படும் சிறு படகாக (canoe) இருந்தது. ஆனால் காண்பதற்கு அது பனிக்கட்டியைப் போன்று வெண்மை நிறம் உடையதாயிருந்தது. அவர், “நீங்கள் கடலைக் கடந்து செல்வதற்காக இது உங்களுக்கு அளிக்கப்படுகின்றது,'' என்றார்.
நான் “ஓ அது - அது- அது போதுமான ஒன்றல்லவே,'' என்றேன். 
147 அவரோ, “இந்த வழியாக மேலும் கீழுமாக மணிக்கு நாற்பது மைல்கள் வேகம் இது செல்லும்," என்றார். அது, கரையிலிருந்து மேலும் கீழும் என்பதாகும். 
148  நான், “இருந்தாலும் கடலைக் கடக்க இது உதவாது,” என்று பதிலளித்தேன். அவர் என்னிடம், “அவர்கள் போகும் விதமாகவே நீங்களும் செல்லுங்கள்,'' என்றார். நான் பார்த்த போது, சகோ.ஃபிரட்-சாத்மனும், சகோ.பாங்க்ஸ்-உட்டும், பச்சை வர்ணம் அடித்த, துடுப்புகளால் இயங்கும் சிறு படகில் அமர்ந்திருக்கக் கண்டேன். அவர்களிருவரும் வித்தியாசமான தொப்பிகளை அணிந்திருந்தனர். அந்த மனிதன் என்னிடம், “அவர்களைப் போல் நீங்களும் போங்கள்,'' என்றார். நான், “முடியாது,'' என்றேன்.
149 அந்த மனிதன் அவர்களிருவரிடம், “நீங்கள் படகோட்டிகளா-?'' என்று கேட்டதற்கு, சகோ. பாங்க்ஸும், சகோ. ஃபிரட்டும், “ஆம்,” என்றனர். 
150 உடனே நான், 'அவர்கள் அப்படி அல்ல. நான் தான் படகோட்டி, ஆகவே அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், நிச்சயமாக அவர்கள் செல்லும் வழியில் நான் செல்லமாட்டேன்,'' என்றேன். 'அவர்களுடன் நீர் செல்லலாமே-?'' என்றார். 
151 நான், 'இல்லை. இல்லை.'' என்றேன். நல்லது, நான் திரும்பிப் பார்த்த போது, அந்த உயரம் குறைந்த மனிதன் வேறு யாரு மல்ல, நமது நண்பர் சகோ.ஆர்கன்பிரைட் என்று கண்டு கொண்டேன். 
152 பின்பு தரிசனத்தில் ஒரு நீண்ட கட்டிடத்தைக் கண்டேன். ஒரு சத்தம் என்னிடம் (நீங்கள் எல்லாரும், அல்லது உங்களில் பெரும்பாலோர், இதை ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்) “ஆகாரத்தைக் கொண்டு வந்து இவ்விடத்தில் சேகரித்து வை. அவர்களுக்கு ஆகாரமளிக்க இங்கு சேகரித்து வைப்பது தான் ஒரே வழி,'' என்று விளம்பினது. நான் அதுவரை கண்டிராத மிக அழகான காரட்டுகளையும் (carrots), காய்கறிகளையும் பெரிய பெரிய பிப்பாய்கள் நிறைய அங்கு கொண்டு வந்து சேகரித்து வைத்தேன். அந்த தரிசனம் இப்பொழுது உங்களுக்கு ஞாபகம் வருகின்றதா-? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). 
153 அதன் அர்த்தம் என்னவென்று நான் உங்களுக்கு பின்னர் விவரித்துக் கொடுத்தேன். ஐந்து நாள் இரவு கூட்டங்களுக்காக சகோ.ஆர்கன் பிரைட்டுடன் நான் சுவிட்சர்லாந்திலுள்ள ஜுரிக் (Zurich) என்னும் இடத்திற்கு செல்ல வேண்டுமென்று தீர்மானம் செய்யப்பட்டிருந்தது. “அந்த கூட்டங்களுக்கு நான் செல்லமாட்டேன்,'' என்று அது நடப்பதற்கு முன்னதாகவே நான் சகோதரரிடம் கூறியிருந்தேன். ஆகவே அது வியாக்கியானத்தை அளித்தபோது அங்கே சகோதரன் வெல்ஷ் ஈவான்ஸுடன் நான் இருந்தேன்.
154 ஒருநாள் இரவு நாங்கள் மீன்பிடிக்கச் சென்று கொண் டிருந்த போது, சகோ. வெல்ஷ் வந்து, சகோ. ஆர்கன்பிரைட் என்னைச் சந்திக்கப் போவதாகக் கூறினார். ''சரி, என்னைத் தடுமாறச் செய்ய வேண்டுமென்று அவர்கள் எத்தனித்துள்ளனர் போலும்'' என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆகவே அநேக முறை... 
155 சகோதரன் மைனர் மூலம் அல்ல; என்னுடைய அருமையான நண்பர்களில் அவரும் ஒருவர். ஆனால் சில சமயங்களில், அவர்களால்... அவர்களுடைய உபதேசங்களுக்கு விரோதமாய் நான் பிரசங்கம் செய்வேன் என்று அவர்கள் எண்ணினால், என்னுடன் சில நண்பர்களையும் நான் கூட்டிக்கொண்டு வர வேண்டும் என்பார்கள். ஆகவே அவர்கள் கூறினர்.... 
156 சகோ.ஆர்கன்பிரைட் என்னை அழைத்து, “சகோ.பிரான்ஹாம்,'' என்றார், ஆவியானவர் கூறியிருந்த விதமாகவே மேலும் அவர், “நீங்களும் உங்கள் மனைவியும் வரவேண்டும். நீங்கள் அதிகம் பிரசங்கம் செய்யவேண்டியிராது. ஒரே ஒரு இரவு பிரசங்கம் செய்வதற்கு மாத்திரமே உங்களை அழைத்திருக்கிறார்கள்'' என்றார். மேலும் அவர், “அந்த காரியத்தைக் குறித்து நீங்கள் பிரசங்கம் செய்ய வேண்டிய அவசியமிராது,” என்றார்.
நான், “இல்லை,” என்றேன். 
157 அவர், “நீங்களும் மனைவியும் எல்லாரும் வரவேண்டும். உங்கள் மனைவியும் என் மனைவியும் எல்லாருமாக சுற்றுலா சென்று வரலாம். நாம் சுவிட்சர்லாந்துக்குச் சென்று, பின்பு பாலஸ்தீனாவுக்குச் செல்லலாம்,” என்றார்.
நான், "இல்லை, ” என்று மறுத்துவிட்டேன். 
158 ஏனெனில் ஏற்கனவே அந்தத் தரிசனத்தின் அர்த்தம் எனக்கு வெளியாகிவிட்டது. நான் சகோதரன் வெல்ஷிடம் அல்லது சகோ.ஃபிரட்டிடம், “நாளை காலை உங்களுக்குப் பதில் கூறுகின்றேன். முதலில் என் மனைவி என்ன சொல்லுகிறாள் பார்க்கலாம்,” என்றேன். நான் அவளை அழைத்தபோது, அவள் வர மறுத்து விட்டாள். நான், “இதோ,'' என்றேன். பாருங்கள்-? 
159 இப்பொழுது அந்த வெள்ளைப் படகு, அந்த ஒரு இரவு கூட்டத்தைக் குறிக்கின்றது. இக்கரையில் நான் ஒருநாள் கூட்டத்துக்கு எங்கு செல்ல வேண்டுமானாலும், அதற்குத் தகுதியாக அது அமைந்திருந்தது. அது வெண்மை நிறமுள்ள தாயும் நல்லதாகவும் காணப்பட்டாலும், கடல் கடந்து செல்வதற்கு அது தகுதி வாய்ந்ததாக அமைந்திருக்கவில்லை. 
160 தரிசனத்தில் நான் கண்ட சகோ. ஃபிரட், சகோ. ஆர்கன் பிரைட் என்னிடம், ''சுற்றுலா பயணியாகச் செல்லுங்கள், மகிழ்ச்சியாயிருங்கள்,'' என்று கூறினார். ஆனால் எனக்கு விருப்பமில்லை. அவர்கள் படகோட்டிகள் என்று ஏற்றுக் கொள்ள மறுத்தல், அவர்கள் பிரசங்கிகள் அல்லவென்று அர்த்தம். ஆனால் நானோ ஒரு பிரசங்கி.
161 அந்தச் சிறிய நீண்ட கட்டிடத்தில் ஆகாரத்தை சேமித்து வைத்தல் என்பது... நான் வெளிநாடு செல்லவில்லை. இந்த சிறு கட்டிடத்திற்கு நான் திரும்பவும் வந்து, நாம் வாழும் மணி நேரம் என்னவென்பதை மக்களுக்குக் காண்பிக்க, கூர்நுனிக் கோபுரச் செய்தியை  டஜன்  கணக்கான  ஒலிநாடாக்களில்  பதிவு  செய்தோம். 
162 இதை மற்றவர் கண்ட சொப்பனங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இது ஒரு தரிசனம். இந்த இடத்தில் தான் ஆகாரம் இருக்கின்றது. 
163 கவனியுங்கள், பின்பு என்ன நேர்ந்தது-? தரிசனம் வந்த பிறகு நான்காவது அல்லது நான்காம் சொப்பனம் எனக்கு அறிவிக்கப்பட்ட பிறகு, சகோ.பார்னல் உடனே என்னிடம் வந்தார். அவர் இங்கு எங்கோ அமர்ந்திருக்கின்றார். பில்லி அப்பொழுது அங்கில்லை. அவர் ப்ளூமிங்டனைச் சேர்ந்தவர்; அல்லது பெட்ஃ-போர்டைச் சேர்ந்தவரா-? (ஒரு சகோதரன் ''லாஃபாயெட்,'' என்கிறார் - ஆசி) லாஃபாயெட், கூட்டங்கள் நடத்தினார். அவர் பதட்டமாகக் காணப்பட்டார். அவர் சொப்பனம் ஒன்றைக் கண்டார். அவர் சகோ. உட்டிடம் வந்து, "இதை நான் விட்டு விடமுடியாது. எப்படியாயினும் நான் இதை சகோ.பிரான்ஹாமிடம் கூறி ஆகவேண்டும். இது என்னைத் தொல்லை செய்து கொண்டேயிருக்கின்றது,'' என்றார். 
164 சொப்பனங்கள் தொடர்ச்சியாக ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு தோன்றின. இவைகளுக்கிடையே வேறு சொப்பனங்கள் எதுவும் தோன்றவில்லை என்பதை தேவனறிவார்.
165 சகோ. பார்னல், ''ஒரு வினோதமான சொப்பனம் கண் டேன். அந்த சொப்பனத்தில், அந்த இடத்தில் ஒரு கூட்டத்தை நான் ஒழுங்கு செய்திருந்தேன். அதே சமயத்தில் இந்த இடத்தில், புதிய சபை போன்று தோற்றமளித்த ஒரு கட்டிடத்தில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவ்விரு சபைகளும் ஏன் ஒத்துழைக்கவில்லை என்று நான் வியந்தேன். 'சரி, எப்படியோ இங்கு வந்து விட்டோம். இங்கு ஆராதனையில் கலந்து கொள்ளலாம்,' என்று நினைத்தேன். அப்பொழுது பழுப்பு நிற உடையணிந்த ஒருவர் கையில் ஒரு புஸ்தகத்தை வைத்துக் கொண்டு கட்டிடத்தில் இருந்து வந்தார். அவர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். அவர் என்னைப் பார்த்து, 'இது ஒரு சிலருக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்ட கூட்டமாகும். இது மூப்பர்களுக்கும் தர்மகர்த்தாக்களுக்கும் மாத்திரம்,' என்றார்''. இதைக் கேட்டதும் சகோ.பார்னல், தான் புறக்கணிக்கப்பட்டதைக் குறித்து மனவருத்தம் கொண்டார். அந்த புதிதாய் கட்டப்பட்ட கட்டிடத்தினின்று அல்லது அது பழுது பார்க்கப்பட்ட இக்கட்டிடமா-? அவர் வெளி நடந்தார். அவர் வெளியே வந்தபோது, பனிக்கட்டி (Snow) பெய்துக் கொண்டிருந்தது. அது குளிர் காலமாயிருந்தது - மோசமான சீதோஷ்ண நிலை.
அங்கு பனி பெய்து கொண்டிருப்பதை கட்டிடத்திலுள்ள யாருமே அறியவில்லை. 
166 அவர் வெளியே வந்த போது, நான் மேற்கை நோக்கியவாறு நின்று கொண்டு இருந்தேனாம். நான் அவரிடம், “நீர் புறக்கணிக்கப்பட்டதாக எண்ணவேண்டாம். நீர் செய்ய வேண்டியதை நான் உங்களுக்கு காண்பித்து, உங்களை வழி நடத்துவேன்,'' என்று கூறினேனாம். 
167 இந்த சொப்பனத்தின் அர்த்தத்தை நான் சகோ. பார்னலிடமோ அல்லது வேறு யாரிடமோ அறிவிக்கவில்லை. அது இப்பொழுது நிறைவேற வேண்டும். சகோ. பார்னல்-! உங்களிடம் அதன் அர்த்தத்தை நான் கூறவிரும்பாதபடி, உடனே அந்த இடத்தை விட்டு நழுவி விட்டேன். என்பதைக் கவனித்தீர்களா-? சகோ. உட்டிடமோ அல்லது வேறு யாரிடமோ இதைக் குறித்து நான் ஒன்றுமே கூறவில்லை. அது எங்கு தான் கொண்டு செல்கின்றது என்பதை நான் காண விரும்பினபடியால் அதை அப்படியே விட்டு விட்டேன். நான் குழப்பமுற்றிருப்பதாக அண்மையில் கூறினதை நீங்கள் கேட்டிருப்பீர்கள் அல்லவா-? இது தான் அதன் காரணம். 
168 சொப்பனத்தில் நான் சகோ.பார்னலிடம், “சகோதரன் பார்னல் புறப்படுங்கள். நீர் சென்றடையும் முதலாவது இடம் சிப்போரா,'' சிப்போரா (Zipproah) “சிப்போரா என்றால் hyphen, அல்லது  நில், அல்லது ஏதோ ஒன்று. மேலும், ''அங்கேயே நின்று விட வேண்டாம். நீங்கள் புறப்பட்டுச் செல்லவேண்டும். அப்பொழுது ஒரு வயோதிப ஸ்திரீயை வழியில் காண்பீர்கள். அங்கேயும் நிற்க வேண்டாம். சற்று தூரம் சென்ற பின்பு உண்மையில் வயோதிப பிராயம் கொண்ட வேறொரு ஸ்திரீயை சந்திப்பீர்கள். அங்கேயும் நின்றுவிட வேண்டாம்,'' என்றேன். இவ்விதம் நான் அவருடன் பனிக்கட்டி வழியாக உரையாடிக் கொண்டே சென்றேனாம். “என் மனைவியைக் காணும் வரை நீங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். அவர்களைக் கண்ட உடன், அங்கேயே நின்று விடுங்கள்,'' என்று கூறினேன். ஆகவே அவர் பார்த்தபோது, நாங்கள் இருவரும் பனிக்கட்டியைக் கடந்து, பாலைவனத்தில் இருந்தோம். நான் மறைந்து போனேன். ஆகவே அவர் திரும்பிப் பார்த்தபோது, தன்னுடைய மனைவி கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து கொண்டு இருப்பதாகவும், யாரோ போதகர் ஒருவர் அவளைக் கை பம்ப்பிலிருந்து (Pump) இழுத்துக் கொண்டு இருப்பதையும் அவர் கண்டார். அவள் அவரை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆகவே அவர் விழித்துக் கொண்டார். 
169 உங்கள் சொப்பனத்திற்கான வியாக்கியானம் இதோ. அந்த இரவே நான் உங்களிடம் கூறி இருக்கலாம், ஆனால் நான் திரும்ப வந்துவிட்டேன். அந்த சிப்போரா, ஒரு வயோதிப ஸ்திரீ, பிறகு மற்றுமொரு மிக மிக வயோதிப ஸ்திரீ, அது சபைகள் ஆகும். பாருங்கள்-? மோசேயினுடைய மனைவி சிப்போரா ஆவாள், சிப்போரா. ஆகவே நாம் பார்ப்பது என்னவென்றால், அவர்கள் எவ்வளவு வயோதிபர்களாக இருந்தாலும், அவர்களிடத்தில் நிற்க வேண்டாம் என்று நான் அவரிடம் கூறியிருந்தேன் . அவர்கள் ஸ்தாபனங்கள் ஆவர். அவர்களிடத்தில் நிற்க வேண்டாம். தங்கள் காலத்தில் அவர்கள் வாழ்ந்தனர். ஆனால், இந்த கடைசி நாளில், எனக்கு இயேசு கிறிஸ்து அனுப்பியிருக்கின்ற, என்னுடைய சபையாகிய, என் மனைவி இடம் அவர் வருகையில், “அங்கே நில்லுங்கள்-!'' என்றவாறு அது இருக் கிறது. ஆகவே நான் மேற்கிற்கு சென்று விட்டிருந்தேன். 
170 பிறகு சகோதரி ஸ்டெஃப்பி. அவர்கள் இங்கே இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் அவர்கள் மருத்துவமனையில் இருக்கின்றார். சகோதரி ஸ்டெஃப்பி எங்கே... எனக்குத் தெரிய வில்லை... ஆம், இதோ இங்கே இருக்கின்றார்கள். சகோதரி ஸ்டெஃப்பி அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் முன்னர், தேவன் அவர்களுக்கு உதவி செய்து ஆசீர்வதிக்கும்படிக்கு ஜெபத்திற்காக என்னுடைய வீட்டிற்கு வந்தார்கள். அவர் நிச்சயமாகவே அதைச் செய்தார்.
அவர்கள், “சகோ.பிரான்ஹாம், நான் ஒரு வினோதமான சொப்பனம் ஒன்றைக் கண்டேன்'' என்று கூறினார்கள்.
நான் ''அப்படியா-?'' என்றேன்.
171 ஆகவே அவர்கள் கூறினர் “நான் சொப்பனத்தில் மேற்கு புறமாக இருந்ததாக கண்டேன். ஆகவே நான்...” இது ஆறாவது சொப்பனம். ஆகவே மேலும் அவர்கள் “சொப்பனத்தில் நான் மேற்கில் இருந்தேன், அது ஒரு... ஆகவே நான் ஒரு மலையின் மேல் நின்று கொண்டு பார்த்த போது, அங்கே ஒரு மிக வயதான ஒரு மனிதன், வெள்ளை தாடிகளை உடையவராய், தன்னுடைய முகத்தில் அடர்ந்த மயிரை உடையவராக இருந்தார். அவர் வெள்ளை துணியினால், ஏதோ ஒன்றால் சுற்றப்பட்டிருந்தார். காற்று அதன்மேல் வீசிக்கொண்டிருந்தது. சகோதரி ஸ்டெஃப்பி, நான் சரியாகக் கூறுகிறேன் என்று நினைக்கிறேன். “நான் அவரருகில் நெருங்கிச் சென்று கொண்டிருந்தேன். அவர் ஒரு மலையின் மேல் நின்று கொண்டு கிழக்கு நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வயோதிபர் யாராயிருக்கும் என்று நான் வியந்தேன்,'' என்று கூறினார்கள். ஆகவே அவர்கள் நெருங்கி, நெருங்கிச் சென்றார்கள். அவர்கள் நெருங்கி நெருங்கிச் சென்ற போது அது யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டார்கள். அது என்றென்றும் மரிக்காத தீர்க்கதரிசியாகிய எலியா அங்கே மேலே நின்று கொண்டு கிழக்கு நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார்.
172 அவர்களுக்கு ஒரு தேவையிருந்தது. எனவே அவர்கள், ''நான் அவரை நிச்சயம் பார்க்க வேண்டும்'' என்று கூறிக் கொண்டே மலையின் மேல் ஓடிச் சென்று, எலியாவின் பெயரில் அவரிடத்தில் பேசவேண்டுமெனக் கருதி, சாஷ்டாங்கமாக பணிந்து கொண்டார்கள். அப்பொழுது, “சகோதரி ஸ்டெஃப்பி, உங்களுக்கு என்ன வேண்டும்-?'' என்று ஒரு குரல் எழுந்தது. அவர்கள் பார்த்த போது, அது நானாக இருந்தேனாம். 
173 சகோதரி ஸ்டெஃப்பி, உங்கள் சொப்பனம் அங்கேயே நிறைவேறினது. நீங்கள் அந்த சொப்பனம் கண்டவுடனே நான் லூயிவில்லுக்கு சென்று விட்டேன். அவர்களுக்கு தேவையாயிருந்த காரியமானது ஜெபம். பாருங்கள்-? ஆகவே அந்த மருத்துமனையில் அவர்கள் சுகமானார்கள்; நான் மேற்குக்கு செல்வேன் என்னும் அடையாளம் அந்த சொப்பனத்தில் வெளியானது. அங்கிருந்து கிழக்கிலுள்ள என் மந்தையை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். கவனியுங்கள்... 
174 நான் லூயிவில்லுக்குச் சென்று திரும்பி வந்த போது, என் வீட்டு வாசலில் நேர்ந்ததைக் கண்டு மலைத்துப் போனேன். என் வாசலில் குறுக்கே முளைகள் அடிக்கப்பட்டிருந்தன. 'பட்டணத்து தெரு'வில் வசிக்கும் திரு.காய்ன் (Mr. Goyne) என்பவர் தெரு வழியே சென்று கொண்டிருந்தார். அவர், “பில்லி, இங்கு வாருங்கள்,'' என்று என்னை அழைத்தார். “நீங்கள் உங்கள் கல்வேலியையும், வாயிலையும் (Gate) தள்ளி வைக்கவேண்டும்,'' என்றார். நான் “நல்லது, சரி, பில்,'' என்றேன். நான்- நான் நான் அதைச் செய்வேன்'' என்று கூறிவிட்டு, “எப்பொழுது செய்ய வேண்டும்-?” என்று கேட்டேன். 
175 அவர், “நான் உங்களிடம் கூறும் போது செய்தால் போதும். வரப்போகும் ஆண்டின் துவக்கத்தில் அவர்கள் வேலையை ஆரம்பிக்க இருக்கின்றார்கள்'' என்றார்.
நான், “'சரி'' என்றேன்.
176 நான் வீட்டிற்குள் செல்ல புறப்பட்ட போது, என் மனைவி, “நான் உடனே மளிகை சாமான்கள் வாங்க வேண்டும்,'' என்று கூறி சென்று விட்டாள். நான் தெருவின் வழியாகச் சென்று கொண்டிருந்த போது, பட்டணத்து என்ஜினியராக பணி புரியும் ரேமாண்ட் கிங் என்பவரைக் கண்டேன். நான் அவரை எப்பொழுதுமே ‘மண் காது,' என்று அழைப்பது வழக்கம். நாங்கள் சிறுவயதில் ஒரு முறை நீச்சல் அடித்துக் கொண்டு இருந்த போது, அவர் வேறொரு பையனின் செவியை ஒரு மண் உருண்டையால் அடித்து விட்டார். அன்று முதல் அவரை நான் ‘மண் காது' என்று கூப்பிடுவது வழக்கமாகி விட்டது. என் தெருவின் முனையில் தான் அவர் தங்குகிறார். சகோ. உட்டின் வீட்டிற்கு இரண்டு வீடுகள் கீழே அவர் தங்குகிறார்.
அவரை நான் கண்ட போது, “மண் காது, இங்கு ஒரு நிமிடம் வாருங்கள்,'' என்று கூப்பிட்டேன்.
அவர், ''சரி, பில்லி '' என்று கூறி, அங்கே அவர் வந்தார்.
“இது என்ன முளைகள் அடித்திருக்கிறீர்களே,'' என்று கேட்டேன். 
177 அவர், “ஆம், பில்லி. அவர்கள் முழுவதையுமே எடுத் துக் கொள்ளப் போகிறார்கள். அவர்கள் அங்குள்ள மரங்கள், வேலிகள் எல்லாவற்றையும் அகற்றப் போகின்றார்கள்,” என்றார். 
178 நான், “நல்லது, என்னுடைய பாகம் தெருவின் நடுவில் வருகின்றது என்று பொறியாளர் என்னிடம் கூறினார்,'' என்றேன். 
179 “ஆம், ஆனால் அவர்கள் அதை விரிவுபடுத்தப் போகின்றனர். எப்படியாயினும் அவர்கள் அதை எடுத்துக் கொள்ளப் போகின்றனர். என்னுடையதும் கூட என்றார்.'' 
180 நான், “ நல்லது, சகோ. உட் கொத்தனாயிற்றே. நான்... நான்- அவரிடம் அதைத் தள்ளி வைக்கச்சொல்கிறேன்,'' என்றேன். 
181 அதற்கு அவர், “வேண்டாம், பில்லி அதைத் தொட வேண்டாம். கான்ட்ராக்டரே அதைச் செய்யட்டும். அது போதகரின் வீடு தானே-?'' என்றார்.
“ஆம், ஐயா,'' என்று நான் பதிலுரைத்தேன்.
அவர், “காண்ட்ராக்டரே செய்யட்டும். நான் கூறுவது புரிகின்றதா-?'' என்றார்.
நான் “ஆம்,” என்றேன்.
182 அங்கிருந்து நான் புறப்பட்டுச் சென்ற போது, அந்த வேகத்தில் ஏதோ ஒன்று என் மனதில் பட்டது. (சகோதரன் பிரான்ஹாம் தன் விரலை சொடுக்கின்றார் - ஆசி) நான் வீட்டை அடைந்து, குகையறைக்குச் சென்று, 'அந்த புஸ்தகத்தைக் கையில் எடுத்தேன். அது அங்கே இருந்தது. அது கான்க்ரீட் துண்டுகள் அல்ல, கற்கள். நான், “மேடா, ஆயத்தமாகு,'' என்றேன்.
183 ஆறு நேரடியான கனவுகள். அதை பூர்த்தியாக்க ஒரு தரிசனம் அதன் மேல் தோன்றினது (Capped). ''இது சம்ப விக்கும்போது, மேற்குக்குச் செல்,” என்றது அது. 
184 நான் டூஸ்ஸானுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். சகோ. நார்மனுக்கு அங்கு ஒரு வீடு உண்டு. நான் எங்கு செல்வேன், என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை. என் வீட்டை விட்டு நான் செல்ல வேண்டும். அதற்கு நான் வாடகை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நான் வாரம் நூறு டாலர் சம்பளம் பெறுகின்றேன். அங்கு மாதம் 100 டாலர் வாடகை கொடுக்க வேண்டியதாய் இருக்கும். இங்கு நான் என் சகோதரர், சகோதரிகளுடன் கூட இருக்கிறேன். இங்கு நான் நேசிக்கப்படுகின்றேன். நான் இங்கிருந்து போகின்றேன்; எங்கு என்பது எனக்குத் தெரியாது. ஏன் என்றும் எனக்குத் தெரியாது. எதற்காக போகவேண்டும் என்றும் என்னால் கூற இயலாது. ஒன்று மாத்திரம் எனக்குத் தெரியும். அவர் கட்டளை இடுவதை நான் செய்து முடித்தலே அது. எந்த வழியாய் போக வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. என் செய்வது-?
185 கர்த்தர் ஆபிரகாமிடம், “அந்த ஆற்றைக் கடந்து மறு பக்கம் செல்,'' என்று கட்டளையிட்ட போது, அவனும் என்னைப் போன்ற நிலையில் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். அவனுக்கும் என்ன செய்வதென்று தெரிந்திருக்காது. “நீ பிரயாணப்பட்டு போ,'' - அவன் மற்றவரை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டும். என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. 
186 சென்ற சனிக்கிழமை காலை, நேற்றைய தினத்திலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பு, அதிகாலை மூன்று மணியளவில், தண்ணீர் குடிப்பதற்காக நான் படுக்கையை விட்டு எழுந்து, ஜோசப்பின் அறைக்குச் சென்று அவனைப் போர்த்தி விட்டு, பிறகு நான் திரும்பவும் வந்து படுத்துக் கொண்டேன். நான் உறங்க ஆரம்பித்தேன். ஆகவே நான் உறங்க ஆரம்பித்த போது... நான் என்ன கூறப் போகின்றேன் என்பதின் பின்னணியை நீங்கள் காணத்தக்கதாக இந்த சிறு சொப்பனங்களையும் மற்றவை களையும் நான் கூறுகிறேன். நான் - நான் ஜோசப்பை போர்வையால் போர்த்திவிட்டு நான் திரும்பச் சென்று படுத்து உறங்க ஆரம்பித்தேன். அப்பொழுது, ஒரு சொப்பனம் கண்டேன்.
187 அந்த சொப்பனத்தில் பெரிய உருவம் கொண்ட மனிதன் ஒருவரைக் கண்டேன். அவர் என் தகப்பனாராம். ஒரு அம்மாளையும் நான் கண்டேன். அவர்கள் என் தாயாராம்-? ஆனால் அவர்களுக்கு என் தாயாருடைய சாயல் சற்றேனும் இல்லை. அந்த மனிதன் அவர் மனைவியிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டார். அவர் மூன்று முனைகள் கொண்ட ஒரு கம்பை வைத்திருந்தார். ஒரு மரத்துண்டை குறுக்கே வெட்டினால், மும்முனை கொண்ட கம்பு கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு முறையும் அந்த ஸ்திரீ எழுந்து நிற்க முயற்சி செய்த போது, அவர், அவர்களுடைய கழுத்தைப் பிடித்துக் கொண்டு, அந்த கம்பினால் அவர்கள் தலையில் அடித்து, அவர்களைக் கீழே வீழ்த்துவார். அந்த ஸ்திரீ அழுது கொண்டே தரையில் கிடப்பார்கள். அதன்பின் எழுந்து நிற்க முனைவார்கள். அவர் மார்பை முன்னால் தள்ளிக் கொண்டே, பெருமையோடு இங்கும் அங்கும் நடப்பார். மகத்தான, பெரிய ஆள். மறுபடியும் அந்த அம்மாள் எழுந்து நிற்க முனையும்போது, அவர் அந்த மும்முனை கம்பினால் அவர்கள் தலையில் அடித்து வீழ்த்தி, ஏதோ ஒரு பெரிய காரியத்தை சாதித்து விட்டதாக எண்ணிக் கொண்டு, மார்பை முன்னால் தள்ளிக் கொண்டு, பெருமையுடன் இங்கும் அங்கும் நடப்பார். 
188 நான் அங்கு நின்று கொண்டு கவனித்துக் கொண்டிருந்தேன். “இந்த மனிதனை என்னால் மேற்கொள்ள முடியாதே. அவர் மிகவும் பலசாலியாயிற்றே. அது மாத்திரம் அல்ல, அவர் என் தகப்பன் என்று கருதப்படுபவர். ஆனால் உண்மையில் அவர் என் தகப்பனல்ல. இந்த ஸ்திரீயிடம் இவ்விதம் அவர் கொடூரமாக நடந்து கொள்ள அவசியமில்லை,'' என்று எண்ணினேன். அவர் நடத்தையைக் கண்டு நான் கலங்கினேன். அப்பொழுது திடீரென்று எனக்கு தைரியம் வந்தது. நான் அவர் அருகில் சென்று, அவருடைய கழுத்துப் பட்டையைப் பிடித்து, அவரைச் சுழற்றினேன். “அந்த அம்மாளை அடிக்க உமக்கு உரிமையில்லை,'' என்று அவரிடம் கூறினேன். நான் இவ்விதம் கூறினபோது, என் தசைகள் வளரத் தொடங்கின - நான் பெரிய உருவம் படைத்தவனைப் போல் (giant) காட்சியளித்தேன். என் தசைகளை அவர் கண்டு பயந்தார். நான் அவரிடம், “அந்த அம்மாளை மறுபடியும் அடித்துப் பாருங்கள்-! உம்மை ஒரு கை பார்த்துக் கொள்வேன்,'' என்றேன். அவர்களை மறுபடியும் அடிப்பதற்கு அவர் தயங்கினார். அப்பொழுது நான் உறக்கத்தினின்று விழித்துக் கொண்டேன். 
189 நான் படுக்கையில் படுத்துக்கொண்டே, “இது என்ன-? அந்த அம்மாளைக் குறித்து நான் சொப்பனம் கண்டது விசித்திரமாயிருக்கிறதல்லவா-?” என்று எண்ணினேன். அப்பொழுது ஒரு நொடியில் அவர் அங்கு வந்தார். அந்த சொப்பனத்தின் அர்த்தம் எனக்குத் தெளிவானது. 
190 அந்த ஸ்திரீ இவ்வுலகில் இன்றுள்ள சபைக்கு உதாரணமாக இருக்கிறாள். உலகம் பூராவும் பரம்பியுள்ள சபை. அந்த குழப்பத்தின் மத்தியில் தான் நான் பிறந்தேன். அவள், வேசிகளுக்குத் தாயாக இருந்தாலும், அந்த ஸ்தாபனங்களுக்குள் நான் பிறந்த காரணத்தால் என் தாயாக அவள் கருதப்படுகின்றாள். அவள் கணவன் அவள் மேல் ஆதிக்கம் செலுத்தும் ஸ்தாபனங்கள். அந்த மும்முனை கம்பு, தவறான நாமங்களால் கொடுக்கப்படும் திரித்துவ ஞானஸ்நானத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் சபையார் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள எழுந்திருக்கும் போது, அவன் அந்த கம்பினால் அடித்து வீழ்த்தினான். அவருடைய பெரிய உருவத்தைக் கண்டு நான் முதலில் பயந்தேன். எனினும் நான் எப்படியோ அவரைத் தாக்க முற்பட்டேன். அந்தத் தசைகள் விசுவாசம் என்னும் தசைகள். “தேவன் என்னுடன் இருப்பாரானால், அவர் எனக்கு தசைகளைக் கொடுக்க முடியும். நான் அந்த அம்மாளின் சார்பில் இருந்து, அவர் அடிப்பதை நிறுத்துவேன்,'' என்று நினைத்தேன். 
191 என் மனைவி அன்று என் அறைக்குள் நுழைந்த போது காலை பத்து மணி இருக்கும். அன்று காலை தான் நான் அந்த தரிசனத்தைக் கண்டேன். இப்பொழுது எனக்கு ஞாபகம் வருகின்றது. அது சொப்பனமல்ல, அது ஒரு தரிசனம்.
192 சொப்பனத்திற்கும் தரிசனத்துக்கும் வித்தியாசம் உண்டு. நீங்கள் உறங்கும் நிலையில் காண்பவை சொப்பனங்கள். நீங்கள் உறங்காமலிருக்கும் போது காண்பவை தரிசனங்கள். நாம் அவ்விதமாக பிறந்திருக்கிறோம். ஒரு சாதாரண மனிதன் கனவு காணும் போது, அவனுடைய மறைநினைவு (Subconscious) ஈடுபடுகின்றது. அது அவனை விட்டு தூரம் இருக்கின்றது. அவன் சுயநினைவில் உள்ள போது அவனுடைய புலன்கள் பணி புரிகின்றன. அந்த நிலைமையில் அவன் சாதாரண ஒருவனாய் இருக்கின்றான். அவன் பார்த்தல், ருசித்தல், உணர்தல், முகர்தல், கேட்குதல் என்னும் புலன் உணர்ச்சிகளைக் கொண்டிருக்கிறான். ஆனால் நீங்கள் மறை நினைவை அடைந்து தூங்கும்போது, பார்த்தல், ருசித்தல் உணர்தல், முகர்தல் கேட்டுதல் என்னும் புலன்களின் உணர்ச்சிகளைக் கொண்டு இருப்பது இல்லை. நீங்கள் கனவு கண்ட பிறகு உறக்கத்தினின்று எழுந்து சுய நினைவை அடைகின்றீர்கள். அநேக ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் கண்ட கனவுகளும்கூட உங்கள் நினைவில் பதிந்து உங்களுக்கு ஞாபகமிருக்கும். ஒரு சாதாரண மனிதனின் அமைப்பு அவ்வாறே உள்ளது.
193 ஆனால் தேவன் ஒரு தீர்க்கதரிசியை முன் குறிக்கும்போது, அவனது மறை நினைவு அவனை விட்டு தூரம் இருப்பதில்லை. அவனுடைய சுயநினைவும், மறை நினைவும் ஒன்றுக்கொன்று அருகாமையில் உள்ளன. ஒரு தீர்க்கதரிசி தரிசனம் காணும் போது உறங்கும் நிலையில் இருப்பதில்லை. அவன் சுயநினைவில் இருந்து கொண்டே தரிசனங்களைக் காண்கிறான். 
194 அன்றொரு நாள் இதை நான் சில வைத்தியர்களிடம் விவரித்தேன். அவர்கள், “மிக அற்புதம்; நாங்கள் அவ்வாறு யோசிக்கவில்லை,'' என்றனர். அவர்கள் 'அலை பரிசோதனை'யை (Wave test) என்னில் நடத்தின போது, அம்மாதிரி ஒன்றை அவர்கள் கண்டதில்லை என்று கூறினர். பாருங்கள்-? “நல்லது, உங்களுக்கு ஏதாவது ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டுமே,'' என்று அவர்கள் என்னைக் கேட்டனர். எனக்கு தரிசனம் உண்டாவதைக் குறித்து அவர்களிடம் கூறினேன். அவர்கள், “அதுதான்,'' என்று பதிலுரைத்தனர். 
195 இந்த இரு நினைவுகளும் என்னில் ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் இருக்கின்றன. இதைக் குறித்து நான் ஒன்றும் செய்ய முடியாது. இதனால் நான் மற்றவரைக் காட்டிலும் வித்தியாசமானவன் என்பதல்ல. தேவன் என்னை அவ்விதம் படைத்திருக்கிறார். நான் உறங்க வேண்டியதில்லை. நான் இங்கேயே சரியாக இருக்கிறேன். நான் நின்று கொண்டு, இவ்விதமாக தரிசனம் காண்கிறேன். 
196 ஆகவே நீங்கள் எல்லாரும், உலகம் முழுவதும் அதை கண்டு உள்ளீர்கள். நான் பீடத்தின் மேல் நின்று கொண்டு ஜனங்களிடம் பேசிக் கொண்டிருப்பேன். அப்போது நான் உறங்கும் நிலையில் இருப்பதில்லை. உடனே நான் தரிசனத்துக்குள் சென்று விடுவேன். உங்களுடன் நான் மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, இன்னும் மற்ற சமயங்களிலும் நான் இவ்விதம் தரிசனம் கண்டு, இனி நிகழ இருப்பவைகளை உங்களுக்கு முன்னறிவித்திருக்கிறேன். அவை ஒரு போதும் தவறினதில்லை. அவை தவறாக இருக்கவே முடியாது. எப்போதாகிலும் அவை தவறாய் இருந்ததை உங்களில் யாராகிலும் கண்டதுண்டா -? (சபையார் “இல்லை,” என்கின்றனர் -ஆசி) இல்லை ஐயா. அவை ஒரு போதும் தவற முடியாது. தேவன் அதில் தொடர்பு கொண்டுள்ள வரை, அவை தவறவே முடியாது. கவனியுங்கள், இந்த மேடையின் மேல் நின்று கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முன்பாக; அவர்கள் மொழியை நான் அறிந்திராத கூட்டங்களின் முன்னிலையிலும் கூட - நான் தரிசனங்களைக் கண்டு அறிவித்திருக்கிறேன். அவை ஒரு போதும் தவறினதில்லை. ஏனெனில் அது தேவன் ஆகும். 
197 இப்பொழுது இந்த தரிசனத்தில், அல்லது நான் பேசிக் கொண்டிருந்தபோது, நான் பார்த்தேன், ஒரு விசித்திரமான காரியத்தை நான் கண்டேன். 
198 நான் கண்ட இத்தரிசனத்தில் என் சிறிய மகன் ஜோசப் என் அருகில் இருந்ததாக எனக்குத் தோன்றினது. நான் அவனுடன் அந்த தரிசனத்தில் பேசிக்கொண்டிருந்தேன். நீங்கள் அந்த தரிசனத்தைக் கூர்ந்து கவனித்தால், ஜோசப் ஏன் அங்கு நின்று கொண்டு இருந்தான் என்பது விளங்கும். 
199 நான் பார்த்த போது, ஒரு பெரிய புதர் அங்கு இருந்தது. அந்த புதரின் மேல் ஒரு பறவை கூட்டம் காணப்பட்டது. அவை மிகச் சிறிய பறவைகளாக தோற்றமளித்தன. அவை ஒவ்வொன்றும் அரை அங்குலம் நீளமும் அரை அங்குலம் உயரமும் இருக்கும். அவைகளின் சிறகுகள் உடைந்திருந்தன - போர் வீரரைப் போல் காணப்பட்டன. மேல் வரிசையில் இரண்டு அல்லது மூன்று பறவைகள் இருந்தன. அதற்கு அடுத்த வரிசையில் ஆறு அல்லது எட்டு பறவைகள் இருந்தன. அதற்கும் அடுத்த வரிசையில் பதினைந்து அல்லது இருபது பறவைகள் இருந்தன. இவ்வாறு அவை, கூர்நுனிக் கோபுர வடிவில் இறங்கி வந்தன. ஆகவே அந்த சிறியவைகள், சிறிய செய்தியாளர்கள், மிகவுமாக களைப்புற்றிருந்தன. அவை அனைத்தும் கிழக்கையே நோக்கிக் கொண்டிருந்தன. 
200 அந்த தரிசனத்தில் நான் அரிசோனாவிலுள்ள டூஸ்ஸானில் இருந்தேன். அது எங்கே நிகழ்கின்றது என்பதை நான் காணத் தவறக்கூடாது என்னும் நோக்கத்துடன், நான் டூஸ்ஸானில் இருப்பதாக தேவன் எனக்குக் காண்பித்தார். பாலைவனத்தில் இருந்த, மண் ஒட்டு முள்ளை என்னிலிருந்து நான் எடுத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது “இது ஒரு தரிசனம் என்பது எனக்குத் தெரியும். நான் டூஸ்ஸானில் இருக்கிறேன். அந்த சிறு பறவைகள் ஏதோ ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதும் எனக்குத் தெரியும்,'' என்று சொல்லிக் கொண்டேன். அவை கிழக்கை நோக்கிக் கொண்டு இருந்தன. பறக்க வேண்டுமெனும் எண்ணம் சடுதியாக அவைகளுக்குத் தோன்றவே, அவை கிழக்கு திசையில் பறந்து சென்றன. 
201 அவை சென்றவுடனே, அவைகளைக் காட்டிலும் கூட்டமாக பெரிய பறவைகள் வந்தன. காண்பதற்கு அவை புறாக்களைப் போன்று இருந்தன. சீரிய, கூர்மையான செட்டைகள், ஒரு விதமான சாம்பல் நிறம், முதலிருந்த செய்தியாளர்களை விட சிறிது வெண்மை நிறமாக இருந்தன. அவைகள் வேகமாக கிழக்கை நோக்கி வந்து கொண்டு இருந்தன.
202 இப்பறவைகள் என் பார்வையை விட்டு அகன்றவுடன், நான் திரும்பி மேற்கில் நோக்கினேன். அப்பொழுது அது சம்பவித்தது. முழு பூமியை குலுங்கப் பண்ணின ஒரு வெடி சத்தம் உண்டானது.
203 இதைக் காணத் தவற வேண்டாம். இந்த ஒலி நாடாவைக் கேட்பவர்கள் சரியாக புரிந்து கொள்ளவும்.
204 முதலில் ஒரு பயங்கர சத்தம். ஒலித் தடையை (Sound Barrier) கிழித்துக் கொண்டு ஆகாய விமானங்கள் செல்லும் போது ஒரு பயங்கர சத்தம் ஏற்பட்டு பூமிக்கு வருமல்லவா-! அது போன்று அது இருந்தது. அது குலுக்கி, முழக்கமிட்டு, எல்லாவற்றையும் செய்தது. ஒருக்கால் அது ஒரு- ஒரு- ஒரு பலத்த இடி முழக்கமும் மின்னலுமாய் இருக்கலாம். நான் மின்னலைக் காணவில்லை. அங்கு உண்டான பலத்த சத்தத்தை மாத்திரமே கேட்டேன். அது தென்பாகத்தில், மெக்ஸிகோவில் இருந்து புறப்பட்டு வருவது போன்று எனக்குத் தோன்றியது. 
205 ஆனால் அது பூமியையே அசைத்தது. இது நிகழ்ந்தபோது நான் இன்னும் மேற்கை நோக்கிக் கொண்டிருந்தேன். ஆகவே நித்தியத்திற்குள், ஏதோ ஒரு கூட்டம் வருவதைக் கண்டேன். முதலில் அது சிறு புள்ளிகள் போல் தென்பட்டது. மொத்தத்தில் அவை ஐந்திற்கு குறையாமல், ஏழுக்கு அதிகம் இல்லாமலிருந்தன. ஆனால், இந்த செய்தியாளர்கள் வருவதைப் போல கூர்நுனி கோபுர வடிவில் அவை இருந்தன. இது நிகழ்ந்த சமயம், சர்வவல்லமையுள்ள தேவனுடைய வல்லமை என்னை உயர தூக்கி, அவர்களைச் சந்திக்க என்னைக் கொண்டு சென்றது. 
206 என்னால் அதைக் காணமுடிகிறது... இது நிகழ்ந்து எட்டு நாட்களாகி விட்டன. ஆயினும் இது என் சிந்தையை விட்டு அகலவில்லை. என்னால் அதை மறக்கவே முடியவில்லை. இது போன்று வேறெந்த சம்பவமும் என்னைத் தொல்லைப் படுத்திது இல்லை. அது உண்மையென்று என் குடும்ப நபர்கள் ஆமோதிப்பார்கள். 
207 அந்த தூதர்களை என் கண்களால் கண்டேன். அவர்களுடைய சிறகுகள் பின் நோக்கியிருந்தன. ஒலியைக் காட்டிலும் அவர்கள் வேகமாய்ப் பறந்து வந்தனர். ஒரு இமைப்பொழுதில் அவர்கள் நித்தியத்திலிருந்து இங்கு வந்து அடைந்தனர். நாம் ஒரு முறை கண் இமைப்பதற்கு எடுக்கும் நேரத்தைக் காட்டிலும் குறைவான நேரத்தில் அவர்கள் இங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் எடுத்துக் கொண்ட நேரத்தை என்னால் கணக்கிட முடியவில்லை. அவர்கள் பலமுள்ள மகத்தான வல்லமையுள்ள தூதர்கள். அவர்கள் பனியைப் போன்ற வெண்மை நிறம் உடையவராய் இருந்தனர். அவர்கள் உடைய சிறகுகள் தலையில் அமைந்திருந்தன. அவர்கள் இறங்கி வரும் போது, 'வ்யூ வ்யூ' என்று சீட்டி அடிக்கும் சத்தம் போல் கேட்டது. இது நிகழ்ந்த போது, நான் மேலே எடுக்கப்பட்டு, கூர் நுனிக்கோபுர வடிவிலிருந்த தேவ தூதர்கள் கூட்டத்திற்குள் கொண்டு செல்லப்பட்டேன்.
208 'ஆகவே இது தான் என் முடிவு,'' என்று நினைத்துக் கொண்டேன். என் தேகம் எல்லாம் மரத்துவிட்டது. என்னே-! அப்படியென்றால், “ஓ, வேறொரு இடி சத்தம் உண்டாகி, நான் கொல்லப்படுவேன் என்பதே இதன் அர்த்தமாகும். என் வாழ்க்கைப் பாதையின் இறுதிக்கு வந்து விட்டேன். இந்த தரிசனம் என்னை விட்டு அகன்ற பின்பு, இதைக் குறித்து என் குடும்பத்தினருக்கு நான் ஒன்றும் சொல்லக் கூடாது. அவர்கள் இதை அறியக் கூடாது. எனது காலம் முடிவு பெற்று விட்டது என்று பரமபிதா எனக்கு இப்பொழுது அறிவித்து விட்டார். 'அவர் செல்ல ஆயத்தமாகி விட்டார்' என்று என் குடும்பத்தினர் அறிந்தால் கவலை கொள்வர். எனவே அவர்களிடம் இதைக் கூறமாட்டேன். இந்த தேவ தூதர்கள் எனக்காகவே வந்து உள்ளனர். ஒருவித வெடியில் (blast) நான் விரைவில் கொல்லப்படுவேன்,'' என்று எண்ணினேன். 
209 அந்த தூதர்களின் கூட்டத்தில் நான் சேர்ந்து கொண்ட பிறகு, “அதுவல்ல. நான் கொல்லப்பட்டு இருந்தால் ஜோசப்பும் கொல்லப்பட்டு இருக்க வேண்டும்,'' என்று நினைத்துக் கொண் டேன். ஜோசப் என்னைக் கூப்பிடும் சத்தம் கேட்கிறது. 
210 நல்லது, அப்பொழுது நான் மறுபடியுமாக திரும்பி, நான், “தேவனாகிய கர்த்தாவே, இந்தத் தரிசனத்தின் அர்த்தம் என்ன-?'' என்று நினைத்து வியப்புற்றேன்.
211 அப்பொழுது அது எனக்கு வந்தது (ஒரு சத்தம் அல்ல) எனக்கு வந்தது, “ஓ-! எனக்குப் புதிய ஓர் ஊழியத்தை அளிக்க வந்த கர்த்தருடைய தூதர்கள் இவர்கள்'' என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. நான் என் கைகளையுயர்த்தி, “ஓ, கர்த்தராகிய இயேசுவே, நான் என்ன செய்ய வேண்டும்-?'' என்றேன். அப்பொழுது அந்த தரிசனம் என்னை விட்டு அகன்றது. அதன் பின்பு ஒரு மணி நேரத்திற்கு எனக்கு எவ்வித உணர்வும் இல்லை. 
212 தேவனுடைய ஆசீர்வாதங்கள் எவ்விதம் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்துஉ இருக்கிறீர்கள். அவ்வித இடங்களில் கர்த்தருடைய வல்லமை, கர்த்தருடைய வல்லமை என்பது முற்றிலும் வித்தியாசப்பட்டது. இதற்கு முன்பு அநேக முறை நான் தரிசனங்களில் தேவனுடைய வல்லமையை உணர்ந்திருக்கிறேன். ஆனால் இப்படிப்பட்ட ஒரு வல்லமையை நான் உணர்ந்ததேயில்லை. அது ஒரு “பக்தியுள்ள பயத்தை'ப் பிறப்பிக்கின்றது. அந்த தூதர்கள் மத்தியில் நான் இருந்த போது, மிகவும் பயந்து, உணர்ச்சிகள் அனைத்தையும் இழந்து போனேன்.
213 நான் கூறுவது உண்மை. பவுல், “நான் பொய் சொல்லுகிறதில்லை,” என்று கூறினது போன்று இது. நான் ஏதாவதொன்றைத் தவறாகக் கூறினதாக நீங்கள் கண்டு பிடித்ததுண்டா -? ஏதோ ஒன்று நிகழ ஆயத்தமாய் இருக்கின்றது. 
214 பிறகு சற்று கழிந்து நான், “கர்த்தராகிய இயேசுவே, நான் கொல்லப்படவிருந்தால், எனக்குத் தெரியப்படுத்தும்; என் ஜனங்களிடம் நான் அறிவிக்கமாட்டேன். ஆனால் இது வேறு ஏதாகிலும் இருந்தால், அதை தெரியப்படுத்தும்,'' என்று மன்றாடினேன். எவ்வித பதிலும் எனக்குக் கிடைக்கவில்லை.
215 ஆவியானவர் என்னைவிட்டு சென்ற பிறகு, அரைமணி நேரமாக - அதைக் காட்டிலும் சற்று அதிக நேரம் என்று நினைக்கிறேன். நான் “கர்த்தாவே நான் கொல்லப்படுவேனானால், பூமியில் என்னுடைய காலத்தை முடித்து என்னை வீட்டுக்கு அழைத்துக் கொள்ள நீர் சித்தம் கொண்டிருந்தால், பரவாயில்லை. எனக்கு அதை தெரியப்படுத்த வேண்டுகிறேன். அதற்கு அறிகுறியாக உமது வல்லமையை மறுபடியும் என் மேல் அனுப்பும். இதை என் குடும்பத்தாரிடமோ அல்லது வேறு யாரிடமோ சொல்லக் கூடாது என்பதை அதனால் அறிந்து கொள்வேன்,'' என்று முறையிட்டேன். ஆகவே நான்... ஆனால் ஒன்றும் சம்பவிக்கவில்லை. நான் சற்று நேரம் காத்திருந்தேன். 
216 பின்பு நான், “கர்த்தராகிய இயேசுவே, அதன் அர்த்தம் அதுவாயிராமல், நான் வேறு ஏதோ ஒன்றை இங்கு செய்ய வேண்டுமென்று சித்தம் கொண்டு, அதை பின்பு எனக்கு வெளிப்படுத்த தீர்மானித்திருப்பீரானால், உமது வல்லமையை அனுப்பும்,'' என்று ஜெபித்தேன். அப்பொழுது என்னை அந்த அறையிலிருந்து தூக்கிச் செல்லும் அளவிற்கு அந்த வல்லமை இறங்கினது. 
217 நான் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தேன். என் மனைவி கதவை எங்கோ அசைக்கும் சத்தம் கேட்டது. படுக்கை அறையின் கதவு பூட்டியிருந்தது. நான் வேதாகமத்தைத் திறந்து படிக்கத் தொடங்கினேன். அது ரோமர் 9-ம் அதிகாரத்தின் கடைசி வசனம் என்று நினைக்கிறேன்: '
'இதோ.... (விலையுயர்ந்த) மூலைக்கல்லை இடறுதற்கான கல்லை சீயோனில் வைக்கிறேன். அவரிடத்தில் (ஆங்கில வேதாகமத்தில் அவர் மேல் என்று எழுதப் பட்டு உள்ளது தமிழாக்கியோன்)  விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை.''
218 “இந்த வசனத்தை நான் பிரத்தியேகமாகப் படிக்க நேர்ந்தது விசித்திரமாய் இருக்கிறதல்லவா-?" என்று நினைத்துக் கொண்டேன். ஆவியானவர் அப்பொழுது அந்த அறையில் என்னை சுமந்து கொண்டிருந்தார். நான் வேதாகமத்தை மூடி வைத்து விட்டு நின்று கொண்டிருந்தேன். 
219 நான் ஜன்னல்களின் அருகாமையில் சென்றேன். அப்பொழுது காலை சுமார் பத்து மணி இருக்கும். நான் கைகளை உயர்த்தி, “கர்த்தாவே தேவனே, எனக்குப் புரியவில்லை. இது எனக்கு விசித்திரமான ஒரு நாள். நான் பைத்தியம் பிடித்த வனைப் போல் இருக்கிறேன்,'' என்று கூறினேன். 
220 நான் “கர்த்தாவே இதன் அர்த்தம் என்ன-? அது  நீர் தான் என்றால்... நான் மறுபடியும் வாசிக்கட்டும்,'' அது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறதல்லவா-? நான் மறுபடியும் வேத புஸ்தகத்தைத் திறந்தேன். மறுபடியும் அதே விஷயம்... பவுல் ரோமரிடம், யூதர்கள் கிரியைகளினால் பெற்றுக் கொள்ள முயன்றனர்; ஆனால் விசுவாசத்தினாலே மாத்திரம் அது முடியும் என்று கூறுதல். 
221 சரி, அன்று முதல் இது ஒரு பயங்கர நேரமாகவே இருந்து வருகின்றது. இப்பொழுது நான் எங்கே நிற்கின்றேன் என்பதை நீங்கள் பாருங்கள். என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது. என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை . 
222. இப்பொழுது நான், இப்பொழுது, இப்பொழுதிலிருந்து அடுத்த 15 அல்லது 20 நிமிடங்களுக்கு, ஏதாவதொன்றை உங்களிடம் பிரசங்கிக்க நான் முயற்சி செய்யட்டும். தரிசனங்கள் ஒருமுறை கூட தவறாக இருந்ததில்லை என்பது ஞாபகமிருக்கட்டும். இப்போது நான் வேத வாக்கியங்களை சற்று எடுத்துரைக்கப் போகின்றேன். வெளிப்படுத்தல் 10-ம் அதி காரத்தை நீங்கள் கவனித்தால் - இதை உங்களிடம் கூற முற்படுகிறேன். ஒரு தரிசனம் வேதப்பூர்வமாக இருந்தால், அது வேத வாக்கியங்களின் மூலமாகவே விவரிக்கப்பட வேண்டும். பின்பு இவை இரண்டையும் நீங்கள் ஒன்றாக இணைக்க நான் விரும்புகிறேன். 
223 இங்குள்ளவர்களும், ஒலிநாடா கேட்பவர்களும், நான் கூறும் விதமாகவே நீங்களும் கூற கவனமாயிருங்கள். ஏனெனில் இதை எளிதில் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. 
224 நீங்கள் அவசரமாகப் போக வேண்டுமா-? (சபையார் 'இல்லை' என்று கூறுகின்றனர்-ஆசி) சரி. நீங்கள் மிகவும் அமைதியாகவும், நேர்த்தியானவருமாய் இருப்பதற்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.
இப்பொழுது, “அந்த ஏழாம் தூதன்...'' 
225. இப்பொழுது, ஐயன்மீர் (நான் இவ்விதமாகத் தலைப்பிட்டது போல) இது தான் முடிவு காலத்தின் அடையாளமா-? நாம் எந்த காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்-? எந்த சமயத்தின் நாள் இது-? களைத்துப் போயிருக்கின்ற ஒரு மல்யுத்த வீரன், இரவு முழுவதும், எழுந்து விளக்கைப்போட்டு, கடிகாரத்தை பார்த்து என்ன சமயம் என்று பார்ப்பதைப் போன்று, “தேவனே நாங்கள் அந்த விளக்கைப் போடட்டும்,'' என்பதே என்னுடைய ஜெபம். 
226 நான் ஒரு பயங்கரமான இடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். நீங்கள் அதை அறிந்து கொள்வீர்களானால், கர்த்தருடைய நாமத்தில் உங்களிடம் நான் கூறுகிறேன், நான் உங்களிடம் உண்மையைக் கூறியுள்ளேன், ஏதோ ஒன்று சம்ப விக்கப் போகின்றது.
227 அது என்னவென்று எனக்குத் தெரியாது. இப்பொழுது ஒலி நாடாவைக் கேட்பவர்களே, நீங்கள் புரிந்துகொண்டீர்களா-? எனக்குத் தெரியாது. நேற்று நான் குகை அறையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது, என்னிடம் வந்தவைகளை உங்களிடம் கூற முயல்கிறேன். அது சத்தியம் என்று நான் சொல்லவில்லை. நான் இங்கும் அங்கும் தரையில் நடந்து கொண்டிருந்த போது என் இருதயத்தில் அசைந்து கொண்டு இருந்த ஏதோ ஒன்று, அது. 
228 நான் - நான் - சென்று, சிறிது சமயம் கழித்து வந்து நானும் சார்லியும் பிரிந்து போகும் முன்பு, நாங்களிருவரும் வேட்டையாடச் செல்ல சற்று சமயம் ஒதுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. 
229 இதை நான் கூறவிரும்புகிறேன். நான் மேற்கில் செல்வதனால் இந்தக் கூடாரத்தை விட்டு செல்கிறேன் என்று அர்த்தமல்ல. இது கர்த்தராகிய தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட சபை. இது தான் என் தலைமை இருப்பிடம். இது தான் நான் தங்கும் ஸ்தலம். ஒரு தரிசனத்தின் மூலம் எனக்குக் கிடைக்கப் பெற்ற கட்டளைக்குக் கீழ்ப்படியவே நான் செல்கின்றேன். என் மகன், பில்லிபால், இங்கு செயலாளராக இருப்பான். என் அலுவலகம் இந்த சபையில் தான் இருக்கும். காரியம் முடிந்தவுடன், நான் திரும்பவும் இங்கு வந்து தேவ ஒத்தாசை கொண்டு ஏழு முத்திரைகளின் பேரில் பிரசங்கம் செய்வேன். நான் பதிவு செய்யும் ஒலிநாடாக்கள் இந்த சபையில் தான் பதிவு செய்யப்படும். எனக்குத் தெரிந்த வரையில், உலகின் மற்றெல்லா பாகங்களைவிட, இந்த இடத்தில்தான் நான் அதிக சுதந்திரத்துடன் பேச முடியும். ஏனெனில் பசி கொண்டு, நிலை கொண்டு, விசுவாசிக்கின்ற ஒரு கூட்டம் ஜனங்கள் இங்கு இருக்கின்றனர். இங்கு என் சொந்த குடும்பம் போன்ற உணர்ச்சியைப் பெறுகின்றேன். இது தான் என் ஸ்தலம். நீங்கள் நன்கு கவனித்தால், சொப்பனமும் அதையே குறிப்பிடுகின்றது - அதாவது ஆகாரம் இங்கு தான் இருக்கும் என்று. 
230 இப்பொழுது, ஆனால் வருங்காலத்தில் என்ன வைக்கப்பட்டிருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அந்த எதிர்காலத்தை யார் தாங்கிக் கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அது தான் முக்கியம். 
231 இப்பொழுது தேவனே, நான் தவறாக ஏதாகிலும் சொன்னால் என்னை மன்னித்து, உமக்குச் சித்தமில்லாதவைகளை கர்த்தாவே நான் கூறாதபடிக்கு என் வாயை மூடி விடும். ஆண்டவரே, இது என்னைக் கவர்ந்ததன் காரணமாகவே அதை எடுத்துக்கூற முற்படுகிறேன். ஜனங்களும் அதை புரிந்து கொள்ளட்டும் - அது என்னைக் கவர்ந்து உள்ளது என்பதை.
232 அதன் அர்த்தம் உடனடியாக வெளிப்படாததன் காரணம் தேவனுடைய ராஜாதிபத்தியமே (Sovereignty). ஆனால் அது எனக்காக வேத புஸ்தகத்தில் எழுதி வைக்கப்பட்டு உள்ளது என்று நான் நம்புகிறேன். அது வேதப்பூர்வமாக அமைந்து இருந்தால், வேதாகமம் மாத்திரமே அதற்கு விளக்கம் தரமுடியும். சகோதரனே, சகோதரியே-! இது உண்மையாய் இருக்குமானால் - உங்களைப் பயப்படுத்த வேண்டும் என்பதற்காக இதைக் கூறவில்லை -நாம் கவனம் உள்ளவர்களாய் இருக்கக்கடவோம். ஏதோ ஒன்று நிகழவிருக்கின்றது. நான் பயபக்தியோடும் தேவ பயத்தோடும் இதைக் கூறுகிறேன். அப்படி இல்லையென்றால் நான் இந்த மேடையின் மேல் நின்று கொண்டிருப்பேன் என்று நினைக்கிறீர்களா-? நான் தீர்க்க தரிசியென்று நீங்கள் நம்புகின்றீர்கள். நான் என்னைத் தீர்க்கதரிசியென்று அழைத்துக் கொள்ளவில்லை.
233 என் கருத்து இதுவே. சென்ற ஆண்டு இதை நான் கண்டதாக உங்களிடம் கூறி இருக்கின்றேன் - அதாவது நாடுகளுக்கு அல்லது இந்த நாட்டிற்கு எழுப்புதல் முடிவடைந்துவிட்டது என்று. நான் சுவிசேஷ பிரயாணம் ஒன்றை மேற் கொண்டேன். உங்களில் சிலர் என்னுடன் வந்திருந்தீர்கள். ஓ, அதெல்லாம் நல்லது தான். நமக்கு மகத்தான நேரமும், சிறந்த கூட்டங்களும் உண்டாயிருந்தன. அநேகர் கூட்டங்களில் பங்கு கொண்டனர். ஆனால் அந்த குறிப்பான ஓரிடத்தை அது அடிக்கவில்லை. 
234 இந்த ஆண்டு நான் சுவிசேஷ பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றேன். என்னால் முடிந்த வரை துரிதமாக ஆப்பிரிக்கா, இந்தியா, கூடுமானால் மற்றும் உலகின் பல்வேறு பாகங்களில் மற்றொரு சுவிசேஷ பயணமாகச் செல்ல எத்தனித்து உள்ளேன். 
235 அதுவும் சரிவர கிரியைச் செய்யவில்லையென்றால், நான் தண்ணீர் குடியாமல், ஆகாரம் உட்கொள்ளாமல், மலையின் உயரச் சென்று, தேவன் ஏதாவது ஒரு வகையில் உத்தரவு அருளும்வரை, அங்கேயே தங்கியிருக்கப் போகிறேன். என்னால் இதைப் போன்று வாழவும் முடியாது. நான் இது போன்று சென்று கொண்டே இருக்க முடியாது. 
236 இங்கே இது தான் பதிலாக இருக்கலாம். எனக்கு தெரியாது, “அவர் என்னை மாற்றும் வரையில்.'' மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்கு உண்டான தரிசனம் நினைவிருக்கிறதா-? “நான் சூரியனில் நின்று கொண்டு சபையாருக்கு பிரசங்கம் செய்து கொண்டிருந்தேன்.'' சென்ற ஞாயிறன்று நீங்கள் எல்லாரும் இங்கு வந்திருந்தீர்கள் அல்லவா-? ஞாயிறு தோறும் செய்திகளை ஒலிப்பதிவு செய்யும் போதெல்லாம் நீங்கள் இங்கு இருக்கின்றீர்கள். ஒவ்வொரு ஞாயிறன்றும் அநேக ஒலி நாடாக்களை நீங்கள் வாங்கிக் கொண்டு செல்கின்றீர்கள். இங்கு கூறப்படுபவை களை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ஏனெனில் முக்கியமானவைகளைக் குறித்து நான் விவரிக்கும் போது நீங்கள் கவனமாகக் கேட்கின்றீர்கள். நான் கூறும் ஒவ்வொன்றும் இதனுடன் சரியாக பொருந்துகின்றது. அப்படித் தான் விளக்கங்கள் அமைந்திருக்க வேண்டும். எனக்கு ஒன்றும் தெரியவில்லை. எனவே தான் நான், ''ஐயன்மீர், இது தான் அதுவா-?” என்று கேட்கிறேன். 
237  வெளிப்படுத்தல் 10-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள ஏழாம் தூதன் வெளிப்படுத்தல் 3:14 ஏழாம் சபை கால செய்தியாளன் ஆவான். நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது நான் வாசிக்கட்டும். நான் எங்கே வாசிக்க இயலுகின்றது என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது  இது தான் ஏழாம் தூதனாகும்.
''... தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப் போகிற போது தேவரகசியம் நிறைவேறும்,''
வெளி. 10:6 
238 இப்பொழுது அவன் ஒரு தூதன் என்பதைக் கவனிக்கவும். அவன் தான் ஏழாம் சபை காலத்தின் தூதன். ஏனெனில் இங்கே, அது, ஏழாம் சபை காலத்தின், “ஏழாம் தூதனுடைய” என்றிருக்கிறது. அந்த தூதன் யாரென்றும், அவன் எங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறான் என்றும் நீங்கள் அறிய விரும்பினால், வெளி. 3:14க்கு வேதத்தைத் திருப்புங்கள். அது லவோதிக்கேயா சபையின் தூதன்.
239 அந்த அதிகாரத்தில் சபை காலங்களின் தூதர்களைக் குறித்து சொல்லப்பட்டு இருக்கிறது. ஆகவே இப்பொழுது, இதில், நாம் பேசவிருக்கின்ற ஏழு முத்திரைகளுக்குள் அது சரியாக ஒன்றுக்கொன்று பொருந்தும். ஆகவே நாம் பேசவிருக்கின்ற அந்த ஏழு முத்திரைகள், அவைகளை இந்த நேரத்தில் பார்க்கப் போனால், அது ஏழு எழுதப்பட்ட முத்திரைகள் ஆகும். ஆகவே நீங்கள் அறிந்துள்ளபடியே, இந்த ஏழு முத்திரைகள், ஏழு சபைகளின் ஏழு தூதர்களுடைய வெளிப்படுத்தல் மாத்திரமே; ஆனால், அந்த புஸ்தகத்தின் பின்புறத்தில் ஏழு பிற முத்திரைகளும் உள்ளன, அது வேதாகமத்திற்கு வெளியே இருக்கின்றது. இன்னும் சிறிது நேரத்தில் அதற்கு நாம் வருவோம். 
240 இப்பொழுது, இதை நான் ஆரம்பிக்கு முன்னர், நீங்கள் களைப்பாக இருக்கின்றீர்களா-? நீங்கள் இடம் மாறி நிற்க விரும்புகிறீர்களா-? (சபையார் “இல்லை,” என்று கூறுகின்றனர் -ஆசி) இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். 
241 வெளிப்படுத்தல் 10:7னுடைய ஏழாம் தூதன் தான் ஏழாம் சபை காலத்தின் செய்தியாளன் ஆவான். பாருங்கள்-? இப்பொழுது கவனியுங்கள். “நாட்களில்...'' இப்பொழுது இங்கே கவனியுங்கள்.
"....ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப் போகிற போது தேவ ரகசியம் நிறைவேறும்''
242 இப்பொழுது, முழங்குகையில், இந்த செய்தியாளன், ஏழாம் தூதன், இங்கே, லவோதிக்கேயா சபைக்கு தன் செய்தியை முழங்குகிறான். அவனுடைய செய்தியின் தன்மையைக் கவனியுங்கள். இத்தகைய செய்தி முதலாம் தூதன், 2-ம் தூதன், 3-ம், 4-ம், 5-ம், 6-ம் தூதர்களுக்கு அளிக்கப்படவில்லை. ஆனால் ஏழாம் தூதன் மாத்திரமே இத்தகைய செய்தியைக் கொண்டவனாய் இருக்கிறான். அது என்ன செய்தி-? அவனுடைய செய்தியின் வகையைக் கவனியுங்கள், புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா தேவனுடைய ரகசியங்களையும் முடிக்கின்ற ஒன்று. இந்த ஸ்தாபனங்கள் மற்றும் அமைப்புகளினூடாக கிடக்கின்ற தளர்ந்த முனைகளான அந்த எல்லா ரகசியங்களையும் ஏழாம் தூதன் முடித்து வைக்கின்றான். அந்த ஏழாம் தூதன் அவைகளைச் சேகரித்து, முழு இரகசியத்தையும் முடித்து வைக்கின்றான். “எழுதப்பட்ட புஸ்தகத்தின் இரகசியத்தை முடிக்கின்றான்." 
243 இப்பொழுது நீங்கள் அவைகளை எழுதிக் கொள்ள விரும்பினால், இந்த ரகசியங்களில் சிலவற்றை நாம் குறிப்பிடு வோம். மத்தேயு 13-ம் அதிகாரத்தில் ஸ்கோ-பீஃல்ட் என்பவர் இங்கே என்ன கூறுகின்றார் என்பதை நான் முதலில் எடுத்துக் கொள்கிறேன். உங்களிடம் ஸ்கோபீஃல்ட் வேதாகமம் இல்லாவிடில், அவைகளில் சிலவற்றை குறித்துக்கொள்ளலாம். அந்த வேதாகமம் உங்களிடம் இருந்தால், இரகசியங்கள் சிலவற்றைக் குறித்து அவர் என்ன நினைக்கின்றார் என்பதை நீங்கள் படிக்கலாம். இப்பொழுது, 11-ம் வசனத்தில்.
''அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோக ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி அது உங்களுக்கு (அவருடைய சீஷர்களுக்கு) உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ இல்லை, அவர்களுக்கோ அது அருளப்படவில்லை '' (இரகசியங்கள்)
244 இரகசியங்கள், இங்கே “அந்த இரகசியம்.” ஒரு இரகசியமாயிருக்கின்ற வேத வாக்கியம், முன்பு மறைக்கப்பட்டிருந்த சத்தியமானது இப்பொழுது தெய்வீகமாக வெளிப்படுத்தப்படுவது, ஆனாலும் வெளிப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், ஒரு இயற்கைக்கு மேம்பட்ட சக்தி இன்னுமாக இருந்து கொண்டு இருப்பதாகும். பரம இரகசியங்களும் மகத்தான இரகசியங்களும் பின்வருமாறு: 
245 முதலாம் இரகசியம்: பரலோக ராஜ்யத்தின் இரகசியம். அதைப்பற்றித்தான் இப்பொழுது பேசிக்கொண்டிருக்கிறோம். 13, மத்தேயு 13:3லிருந்து 50.
246 இரண்டாம் இரகசியமானது, இந்த காலத்தில் இஸ்ரவேல் உடைய குருட்டு நிலையின் இரகசியம் ஆகும். பொருளோடு கூட ரோமர் 11:25 ஆகும். 
247 மூன்றாவது ரகசியம், இந்த காலத்தின் முடிவு வேளையில் உயிரோடு இருக்கும் பரிசுத்தவான்களின் மறுரூபமாகுதலின் இரகசியம். 1 கொரிந்தியர் 15, மற்றும் தெசலோனிக்கேயர் 4:14லிருந்து 17. 
248 நான்காவது, யூதர் மற்றும் புறஜாதிகள் ஆகிய இரண்டையும் கொண்ட ஒரே சரீரமாகிய புதிய ஏற்பாட்டின் சபையின் இரகசியம். எபே.3:1-11, ரோமர் 16:25, எபேசியர் 6:19, கொலோசேயர் 4:3. 
249 ஐந்தாவது இரகசியம், கிறிஸ்துவின் மணவாட்டியாக சபை(Church) இருப்பதைக் குறித்ததான இரகசியம். எபேசியர் 5:28-32. 
250 ஆறாவது இரகசியம், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக ஜீவிக்கின்ற கிறிஸ்துவைக் குறித்தது. கலாத்தியர் 2:20; எபிரெயர் 13:8 இன்னும் அநேக வேத வாக்கியங்கள். 
251 ஏழாவது இரகசியம் தேவனைக் குறித்த ஒன்று, எல்லா தெய்வீக ஞானமும் தம்முள் கொண்ட, தேவத்துவத்தின் முழுமையின் அவதாரமான கிறிஸ்துவின் உடையது.
ஆகவே  தேவத்தன்மை  மனிதனுக்குத்  திரும்ப  கொண்டு  வரப்படுகின்றது.
    (எட்டாம் இரகசியத்தைக் குறித்து தீர்க்கதரிசி வாசிக்கவில்லை) 
252 ஒன்பதாம் இரகசியம். இரண்டு தெசலோனிக்கேயர் மற்றும் மேலும் காணப்படுகின்ற அக்கிரமத்தின் இரசியத்தைக் குறித்த ஒன்று. 
253 பத்தாம் இரகசியம் வெளிப்படுத்தல் 1:20-ல் இருக்கின்ற ஏழு நட்சத்திரங்களைக் குறித்த ஒன்று. “ஏழு-சபைகளுடைய ஏழு-நட்சத்திரங்கள், அந்த ஏழு செய்தியாளர் கள்” - இவைகளைக் குறித்தும், மற்றவற்றையும் நாம் இப்பொழுதுதான் பார்த்தோம்.
254 ஆகவே பதினோறாம் இரகசியம், அந்த விபசாரியாகிய மகா பாபிலோனைக் குறித்த ஒன்று. வெளிப்படுத்தல் 17:5-7 வரை. 
255 இந்த தூதன் முடித்து வைக்க வேண்டிய சில இரக சியங்கள் இவை, எல்லா ‘அந்த இரகசியம்”  தேவனுடைய எல்லா இரகசியங்கள்.
ஆகவே  இன்னும்  மற்றவை:
256  இதை நான் பயபக்தியுடன் கூறட்டும், என்னைக் குறித்து நான் குறிப்பிட வில்லை, ஆனால் தேவனுடைய தூதனைக் குறித்து நான் குறிப்பிடுகின்றேன். 
257 சர்ப்பத்தின் வித்து, இத்தனை வருடங்கள் முழுவதுமாக ஒரு மறைக்கப்பட்ட இரகசியமாக இருந்து வந்தது. 
258 கிருபை என்பது தெளிவாக்கப்பட்டது; அவமானம் (disgrace) அல்ல, ஆனால் நிஜமான, உண்மையான கிருபை. 
259 நித்தியகாலமாக எரிந்து கொண்டிருக்கும் நரகம் என்பது கிடையாது. அவர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக எரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் நித்தியம் என்பதற்கு தொடக்கமும் முடிவும் கிடையாது. நரகம் என்பது உண்டாக்கப்பட்டது.
இந்த இரகசியங்கள் எல்லாம் விவரிக்கப்பட்டன. 
260 உணர்ச்சி (Sensation) எதுவும் ஏற்படாமலே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறும் இரகசியம் - ஆனால் கிறிஸ்து என்னும் நபர், அவர் செய்த அதே கிரியைகளை உங்களுக்குள் நடப்பித்துக் கொண்டிருப்பது. 
261 தண்ணீர் ஞானஸ்நானத்தின் இரகசியம். தீவிரவாத திரித்துவப் போதகம், பட்டப் பெயர்களான பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை ஞானஸ்நானத்தில் நுழைத்தது. தேவத்துவத்தின் இரகசியம்--இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தில் நிறைவேறியது. வெளிப்படுத்தல் புஸ்தகத்தில் கூறப்பட்டு உள்ளபடியே, இக்காலத்து சபை (Church) அதைப் பெற்றுக் கொள்ள வேண்டிதாய் இருக்கின்றது.
இன்னும் வேறு சில இரகசியங்கள் உள்ளன. 
262 அந்த, அக்கினி ஸ்தம்பம் திரும்பவுமாக வருதல். ஆமென்-! (சகோதரன் பிரான்ஹாம் தன் கரங்களை மூன்று முறை சேர்த்து தட்டுகின்றார் - ஆசி) அந்த காரியம் தான்  இப்பொழுது சம்பவிக்க வேண்டியதாயிருக்கின்றது, அதை நாம் காண்கிறோம்.
ஓ, அந்த  இரகசியங்களை  பெயரிட்டுக்  கொண்டே  செல்லலாம்  அல்லவா-! 
263 இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தின அதே அக்கினி ஸ்தம்பம், அதே விதமான ஒன்று தமஸ்குவுக்கு சென்று கொண்டிருந்த சவுலை கீழே வீழ்த்தியது-! ஆகவே அந்த அதே அக்கினி ஸ்தம்பம், அதே வல்லமையுடன் வந்து, அதே விதமான காரியங்களைச் செய்து, அதே வார்த்தையை வெளிப்படுத்தி, வேதாகமத்துடன் ஒவ்வொரு வார்த்தையாக நின்று கொண்டு இருக்கின்றது. 
264 எக்காளம் முழங்குதல் என்றால், “சுவிசேஷ'' எக்காளம் ஆகும். ஆகவே வேதாகமத்தில் எக்காளம் முழங்குதல் என்றால் “வேதப்பிரகாரமான யுத்தத்திற்கு ஆயத்தமாகு என்பதே.'' உங்களுக்குப் புரிகின்றதா-? வேதப் பிரகாரமான யுத்தம்-! 
265. பவுல் கூறினான், இதை நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், ஒன்று கொரிந்தியர் 14:8ல், பவுல் கூறினான், “எக்காளம் விளங்காத சத்தமிட்டால், எதற்கு ஆயத்தம் பண்ண வேண்டும் என்று ஒரு மனிதனுக்கு எப்படி தெரியும்-?” ஆகவே அது ஒரு உறுதிபடுத்தப்பட்ட வேதப் பிரகாரமான சத்தத்தை, தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்பட்டதின் ஒரு உறுதிப்பாட்டை கொண்டு இரா விட்டால், நாம் கடைசி காலத்தில் இருக்கின்றோம் என்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும். 
266. ஆகவே அவர்களோ இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்று அவர்கள் விசுவாசிப்பதாகக் கூறி அதே சமயத்தில் இயற்கையின் முழு மண்டலமும், முழு சபையும் (Church) அவர் மேல் விசுவாசம் வைத்து, விசு வாசிக்கின்ற, அவருடைய அடையாளங்களையும் அற்புதங்களையும் மறுதலித்தால் எவ்வாறு ஆயத்தப்பட வேண்டுமென்று நாம் எப்படி அறிந்து கொள்வது. 
267. யாரோ ஒருவர் வரைபடத்துடன் வந்து எல்லாவற்றையும் அதை விளக்குகின்றார்; வேறு ஒன்றுடன் யாரோ ஒருவர் வந்து இதற்கு முரணாக விளக்குகின்றார். சிலர் வந்து இது தான் அது என்கின்றனர் - திரும்பவுமாக இதற்கு வருதல். மற்றவர்கள் புத்தகங்கள், மற்றும் அதைப் போன்ற காரியங்களை எழுதி உள்ளனர். 
268. ஆனால் தேவனோ தம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையுடன் வருகின்றார். அதற்கு விரோதமாக யார் பேச முடியும்-? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருப்பாராயின், அவர் நேற்று செய்தவைகளையே இன்றும் என்றும் செய்கின்றார். மக்கள் காணத்தவறின அந்த தளர்ந்துள்ள முனைகள் அனைத்தையும் எடுத்து, இரகசியங்களை நேராக்குவதே இந்த தூதன் செய்ய வேண்டிய பணியாகும். 
269. கவனியுங்கள், அது விளங்காத, வேதப்பிரகாரமாய் அமைந்திராத சத்தமிட்டால், யார் தன்னை ஆயத்தம் செய்து கொள்ள முடியும்-? ஆனால், ஒரு எக்காளம், நான் உங்களிடம் கூறியது போன்று, ஒவ்வொரு சபைக்காலம் தோன்றின போதும், ஒரு எக்காளம் முழங்கி, ஒரு முத்திரை அவிழ்க்கப்பட்டது என்பதை கவனித்தீர்களா-? எக்காளம் முழங்குதல் போருக்கு அறிகுறியாகும். அது வேதப் பிரகாரமான சத்தத்தை முழங்காவிட்டால், அதனால் என்ன பயன்-?
ஆனால் நான் இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வரட்டும். அதை இப்பொழுது காணத் தவறாதீர்கள். 
270. கவனியுங்கள், ஒவ்வொரு சபை காலமும் தன்னுடைய செய்தியாளனைக் கொண்டிருந்தது. அதை நாம் அறிவோம். பவுல் முதலாவது செய்தியாளனாக இருந்தான். ஆகவே முதலாம் எக்காளம் முழங்கின போது, முதலாம் முத்திரை தளர்த்தி விடப்பட்டது. பவுல் முதலாம் சபையின் செய்தியாளனாக விளங்கினான் என்று நாம் கண்டோம். அவன் என்ன செய்தான்-? போர் அறிவித்தான். எதன் மேல்-? அவர்கள் முன்னிலையில் இயேசு செய்த மேசியாவின் அடையாளத்தை அக்காலத்து வைதீக சபை (Orthodox Church) விசுவாசிக்காத காரணத்தால், அவர்கள் மேல் அவன் போர் அறிவித்தான். என்ன, அவர்கள் அதை அறிந்திருக்க வேண்டும். அவர்கள் அவரை அறிந்து கொண்டிருக்க வேண்டும்.
271. நினைவில் கொள்ளுங்கள், காலத்தின் முடிவில் பவுல் வந்தான். காலத்தின் முடிவில் தான் எல்லா செய்தியாளர்களும் வருகின்றனர். முடிவுக் காலத்தில் தான் இந்த காரியங்கள் கொண்டு வரப்படுகின்றன. 
272. பவுல் வேதத்தை நன்கு அறிந்திருந்தான். இயேசுவே, மேசியா என்று அவன் அறிந்திருந்தபடியால், அவன் இடத்திற்கு இடம் சென்று ஆங்காங்குள்ள தேவ ஆலயங்களை வேத வசனங்களினால் தகர்த்தான். அதன் விளைவாக அவன் எல்லா இடங்களிலும் புறம்பாக்கப்பட்டான். முடிவில் அவன் தன் கால்களிலிருந்த தூசியை உதறி விட்டு, புறஜாதிகளிடம் திரும்பினான். அது என்ன-? அது தான் எக்காளம் முழங்குதல். ஒரு தூதன் செய்தியாளன், அங்கே வார்த்தையுடன் நின்று கொண்டு இருத்தல். ஓ, என்னே-! அதை இப்பொழுது நீங்கள் காணத் தவறாதீர்கள். அந்த வார்த்தை-! ஆகவே, பவுல் தேவனுடைய வார்த்தையின் கலப்படமற்ற வியாக்கி யானத்துடன் ஒவ்வொரு தேவாலயத்தையும் தகர்த்தான். அதன் விளைவாக அவன் உயிரையே இழக்க நேர்ந்தது. 
273. அடுத்த சபைக் காலத்து செய்தியாளனாகிய, அந்த நபர், ஐரேனியஸ் பற்றி எவ்வளவாக நம்மால் காணக்கூடும்-! 
274. ஆகவே பரிசுத்த மார்டின், அடுத்த சபைக்காலம், நிக்கொலாய் போதகம் அவர்கள் பெறத் துவங்கின போது, உள்ளே வர ஆரம்பித்தது. ஆகவே அவர்கள் அந்த காலத்தைத் தகர்த்தெரிந்தனர். பரிசுத்த மார்டின் தன்னுடைய காலத்தை தகர்த் தெரிந்தார்.
275. ஆகவே பிறகு லூத்தர், ஐந்தாம் செய்தியாளன், தேவனுடைய வார்த்தையைக் கொண்டு கத்தோலிக்க சபையைத் தகர்த்தார். “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்,'' என்று அவர் முழக்கமிட்டார். அவர், “இது கிறிஸ்துவின் உண்மை யான சரீரமன்று,'' என்று கூறி, நற்கருணை அப்பத்தை தரையில் விழத்தள்ளி, வெளியே வந்து, அந்த கத்தோலிக்க சபையை தகர்த்தார். அந்த எக்காளம் சரியாக முழங்கினது. அது சரியா-? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி) 
276. ஆங்கிலிகன் சபையின் நாட்களிலே ஜான்-வெஸ்லி தோன்றினார். அவர் காலத்தில், “எழுப்புதல்கள் இனி அவசியமில்லை,'' என்று கூறி வந்தனர். அது வளரத் தொடங்கினது. ஆனால் ஜான்-வெஸ்லியோ, கிருபையின் இரண்டாம் கிரியையான 'பரிசுத்தமாக்கப்படுதல்' (Sanctification) என்னும் செய்தியுடன் அங்கு நின்றார். சுவிசேஷ எக்காளத்தைக் கொண்டு அவர் ஆங்கிலிகன் சபையைத் தகர்த்தார். போருக்கு ஆயத்தமானார். அது சரி. அவர் அதைச் செய்தார். 
277. இப்பொழுது நாம் லவோதிக்கேயா சபையின் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இந்த காலத்தில் அவர்கள் மறுபடியும் ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்டனர் - மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், லூத்தரன், பெந்தெகொஸ்தே. இந்த காலத்தைத் தகர்த்து இவர்களை அக்கிரமத்தினின்று திருப்பிக் கொண்டு வர ஒரு தீர்க்கதரிசிக்காக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
278. இப்பொழுது காலந்தோறும் அதே போக்கு இருந்து வந்துள்ளதென்றால், தேவன் இக்காலத்தில் தம் போக்கை மாற்றிக்கொள்வாரா என்ன-? (சபையார் “இல்லை,'' என் கின்றனர்-ஆசி) அவர் அதை மாற்றமுடியாது. அவர் அந்த வழக்கமான நடையையே கடைபிடித்தாக வேண்டும். 
279. ஆகவே நினைவில் கொள்ளுங்கள், இந்த செய்தியாளன் தான் ஏழாம் தூதன். அவர் எல்லா இரகசியங்களையும் எடுத்து ஒன்று சேர்க்க வேண்டியராய் இருக்கின்றார். கவனியுங்கள், ஏழாம் தூதன் ஐசுவரியமிக்க சபையாகிய லலோதிக்-கேயாவை தகர்க்க வேண்டியவராய் இருகின்றார். “நான் ஐசுவரியவான்; திரவிய சம்பன்னன்; எனக்கு ஒரு குறைவுமில்லை என்று லவோதிக்கேயா சபை கூறுகின்றது. “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்தி ரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல் இருக்கிறாய்.” அது தான் அவருடைய செய்தியாகும். 
280. ஓ தேவனே, அஞ்சா நெஞ்சுடைய ஒரு தீர்க்கதரிசியை, ''கர்த்தர் உரைக்கிறதாவது' என்பதுடன் எங்களுக்கு அனுப்பும். அந்த தேவனுடைய உறுதிபடுத்தப்பட்ட வார்த்தையானது அதனூடாக அசைந்து அவர் தேவன் இடத்திலிருந்து அனுப்பப்பட்டவர் என்பதை நிரூபிக்கட்டும். ஆகவே அவர் வரும் போது, அவர்கள் காலங்களைத் தகர்ப்பார். நிச்சயமாக அவர் செய்வார். லவோதிக்கேயா சபையை அவர் தமக்கு விரோதமாக்கிக் கொள்வார். அவர் நிச்சயமாக அதைச் செய்வார். ஒவ்வொரு சபை காலத்தின் தூதரும் அதையே செய்தனர். இக்காலத்திலும், அது மாறாது. அதே விதமாகத் தான் அது இருக்க வேண்டும்.
281. கவனியுங்கள், இப்பொழுது அந்த லவோதிக்கேயா சபை. அந்தச் செய்தியாளன் (முடித்து வைப்பான்) லவோதிக்கேயாவின், அந்த ஏழாம் தூதன், முன்பு சத்தியத்திற்கான யுத்தங்களில் இழந்து போன எல்லா இரகசியங்களையும் முடித்து வைப்பார்.
282. லூத்தர் தோன்றினார். ஆனால் அவர் எல்லா சத்தியத்தையும் பெற்று இருக்கவில்லை. நீதிமானாக்கப்படுதல் என்பதை மாத்திரமே அவர் கொண்டிருந்தார். சரி.
283. அதற்குப் பிறகு ஜான் வெஸ்லி என்னும் பெயரைக் கொண்டிருந்த மற்றுமொரு செய்தியாளன் பரிசுத்தமாக்கப்படுதல் என்பதுடன் வந்தார். அவர் எல்லாவற்றையும் கொண்டிருக்கவில்லை என்று வேதாகமம் கூறுகிறது. பிலதெல்பியா சபை-! 
284. பிறகு ஆவியின் ஞானஸ்நானம் என்பதுடன் லவோதிக்கேயா சபைக் காலம் வருகின்றது. ஆனால் அவர்களோ அதை முற்றிலும் சீர்குலைத்து, முன் காலத்தவர் செய்தது போன்று சடங்காச்சாரத்துக்குச் சென்றுவிட்டனர், 
285. “அவர், அல்பாவும் ஓமேகாவுமாய் பார்க்கப்படவேண்டும்,'' “முந்தினவரும் பிந்தினவருமான,'' அவருடைய கரம் ஒரு புறமாகவும், ஒரு புறமாகவும் நீட்டப்பட்டு இருக்கின்றது,
அவருடைய ஆவி பெந்தெகொஸ்தே நாளில் விழுந்து, அந்தக் குழுவை நிரப்பினது. 
286. அவள் படிப்படியாக ஆற்றலை இழந்து போய், முடிவாக இருளின் காலங்களிற்கு வந்தாள். அந்த ஏழு பொன் குத்து விளக்குகளும் ஏழு சபை காலங்களாம். கடைசி குத்து விளக்கு அவரிடமிருந்து வெகுதூரம் அகன்றிருந்தது. இருளின் காலங்களும், அது ஆயி...  கத்தோலிக்க சபையின் இருண்ட காலம் ஆயிரம் ஆண்டுகள். 
287 லூத்தர் அடுத்தபடியாக வெளிச்சத்தைக் கொண்டு வந்தார். அது தேவனுடைய வார்த்தைக்கு சற்று அருகாமையில் இருந்தது.
அதற்கு அடுத்ததாக வந்த வெளிச்சம் இன்னும் அரு காமையில் வந்தது.
288 அதற்கு அடுத்த வெளிச்சம் லவோதிக்கேயா சபைக்குரியது. அப்பொழுது அது முதலில் இருந்த இடத்திற்கு வந்து, முதலில் அது செய்த அதே குழப்பத்திற்கே சரியாகச் சென்று விட்டது. நான் என்ன கூற விழைகின்றேன் என்பதை உங்களால் காண முடிகின்றதா-? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி) 
289 இப்பொழுது கவனியுங்கள், பெரும்பாலான சத்தியம் இக்காலத்தில் இழக்கப்பட்டு விட்டது. (ஏன்-?) ஏனெனில் மற்றவர்கள் சத்தியத்தின் பேரில் சமரசம் செய்து விட்டு விட்டனர். விட்டுக் கொடுத்து விட்டனர். ஆனால் ஏழாம் தூதன் எதன் பேரிலும் சமரசம் செய்ய மாட்டார். அவர், தளர்ந்துள்ள முனைகள் அத்தனையும் ஒன்று சேர்ப்பார். ஆகவே அவருடைய முழக்கத்தின் போது தேவனுடைய இரகசியங்கள் யாவும் நிறைவேறியாக வேண்டும்'' ஓ-! தேவனே, அவரை அனுப்பும். அது அவருக்கு வெளிப்படுத்தப்பட்ட போது மறைக்கப்பட்டிருந்த இரகசியங்கள் எல்லாம் முடிவு பெற்றன. எதனால்-? இவைகள் மறைக்கப்பட்டிருக்கின்ற இரகசியங்கள் என்றால், அந்த மனிதன் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். இந்த கடைசி காலத்தில் வரவிருக்கின்ற அந்த தீர்க்கதரிசியைத் தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த மகத்தான எலியாவாக இருக்க போகின்றார் என்று நாம் முன்னமே சிந்தித்து இருக்கிறோம் அல்லவா-? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி) ஏனெனில் இந்த இரகசியங்கள் வேத பண்டிதருக்கு மறைவாயிருக்கிறபடியால், அவை தேவனாலே வெளிப்படுத்தப்பட வேண்டும். வார்த்தை தீர்க்கதரிசிக்கு மாத்திரமே வரும் (“ஆமென்'') ஆகவே நாம் அதை அறிந்திருக்கின்றோம். வாக்குத்தத்தம் செய்யப்பட்ட இரண்டாம் எலியாவாக இருப்பார். ஓ, என்னே-! அவர்- அவர் கொண்டு வருகின்ற செய்தி தான் அந்த இரகசியங்கள்,  இந்த எல்லா, எல்லா காரியங்களாக இருக்கும். 
290. நம்மிடையே காணப்படும் தண்ணீர் ஞானஸ்நானம் குழப்பமடைந்து உள்ளது. அது சரி. ஒருவர் தெளித்து ஞானஸ்நானம் கொடுக்கிறார். மற்றொருவர் தண்ணீர் ஊற்றி ஞானஸ்நானம் கொடுக்கிறார். ஒருவர் இதை எடுக்கிறார். ஒருவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பதை ஞானஸ்நானத்தில் உபயோகிக்கிறார். ஒருவர் பிதா என்னும் தேவனுக்கு ஒன்று குமாரன் என்னும் தேவனுக்கு ஒன்று, பரிசுத்த ஆவி என்னும் தேவனுக்கு ஒன்று; ஆக மூன்று முறை முகத்தை முன்வாட்டில் முழுக்கி ஞானஸ்நானம் கொடுக்கிறார். வேறொருவர் அவரிடம், "அது தவறு. முழுக்கும் போது, முகம் மேல் பாகம் இருக்க வேண்டும்,” என்கின்றார். ஓ, என்னே ஒரு குழப்பம்-! 
291. ஆனால் அவையனைத்தும் சரிபடுத்தப்பட்டு விட்டன. ஒரே தேவன் தான் இருக்கிறார். அவருடைய நாமம் இயேசு கிறிஸ்து. மனுஷர் இரட்சிக்கப்படும்படிக்கு அந்த நாமத்தைத் தவிர வேறெந்த நாமமும் வானத்தின் கீழ் கொடுக்கப்படவில்லை''. மனிதர்  இரட்சிக்கப்படத்தக்கதாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தைத் தவிர, வெறெந்த முறையிலும் ஞானஸ்நானம் கொடுத்ததாக வேதத்தில் எங்கும் எழுதப்படவில்லை. புதிய சபை (Church) எந்த ஒன்றிலும் அல்லது இயேசு கிறிஸ்துவின் சபை ஒரு முறையாகிலும் தெளித்தல், ஊற்றல் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்,'' என்று சொல்லி, “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே நான் உனக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்,'' என்று நடத்தப்பட்ட ஞானஸ்நான ஆராதனை எதுவும் கிடையாது. அவை அனைத்தும் ஸ்தாபனங்களின் பிராமணங்கள். 
292. சத்தியத்திற்கான போராட்டத்தில் அந்த நூலின் முனைகள் காணாமற்போய் விட்டன. ஆனால் அவை அனைத்தும் கடைசி நாளில் திரும்பவும் அளிக்கப்படும் என்று தேவன் கூறியுள்ளார். ''நான் திரும்பவும் அளிப்பேன்,'' என்று கர்த்தர் கூறினார். “மணவாட்டி மரம்” என்னும் செய்தியில் நாம் அதைக்குறித்து சமீபத்தில் பார்த்தோம். அதற்கு ஒரு தீர்க்கதரிசி அவசியம். அவர் இங்கே இருப்பார் என்று வேதாகமம் கூறுகின்றது. அது சரி. அவர் இங்கிருப்பார் என்று மல்கியா 4 கூறுகின்றது. அவர் தோன்றுவார் என்று நாமும் விசுவாசிக்கின்றோம். அவரை எதிர் நோக்கி இருக்கிறோம். ஆகவே அவருடைய வெளிப்படுத்தப்படுதலிற்காக நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம், ஆகவே உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையை நாம் காண்போம். 
293. இதை சிலர் மாத்திரமே புரிந்து கொள்வார்கள், “நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷ குமாரனுடைய வருகையிலும் நடக்கும்,'' இரட்சிக்கப் பட்டவர்கள் எத்தனை-? ஐந்து ஆத்துமாக்கள்.... லோத்தின் நாட்களில் உண்மையில் மூன்று பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டனர். அவன் மனைவி புறப்பட்டுச் சென்றாள்; ஆனால் அவள் உயிரிழந்தாள். “மனுஷ குமாரனின் வருகையிலும் இவ்விதமே நடக்கும்'. அந்த சமயத்தில் ஒரு சிலர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டு மறுரூபம் அடைவார்கள். சபை (Church) ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவது என்பது, இரகசியங்களில் ஒன்றாகும். லோத்தைப் போல, லோத்து வெளியே எடுக்கப் பட்டான். நோவா, மேலே எடுக்கப்பட்டான். சபையும் (Church) அவ்வாறே மேலே எடுக்கப்படும். ஒருவன் உள்ளே சென்றான். ஒருவன் வெளியே சென்றான். ஒருவன் மேலே சென்றான். அது எவ்வளவு பரிபூரணமான எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கிறது பாருங்கள்-! 
294. வார்த்தை வருகின்றது. “உள்ளாக எழுதப்பட்டுள்ள அந்தப் புஸ்தகம்'' இந்த இரகசியங்கள் முடிவு பெற்று முழங்கப்படுகையில் அப்பொழுது இது நிறை வடைகிறது. இப்பொழுது நீங்கள் நிச்சயமாக இருக்க இப்பொழுது மறுபடியுமாக அதை நான் படிக்கட்டும். இப்பொழுது கவனியுங்கள்.
'..... ஏழாம் தூதனுடைய (கடைசி தூதன்) சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப் போகிற போது, தேவரகசியம் நிறைவேறும்.''
295. இப்பொழுது, “தேவனுடைய இரகசியம்' என்றால் என்ன, அவைகளில் ஒன்றா-? 1-தீமோத்தேயு 3-ல் பவுல் கூறி யுள்ளான், அவ்வாறு நான் நம்புகிறேன். 
“அன்றியும் தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளு கிறபடியே மகா மேன்மையுள்ளது....” தேவன் மாம்சத்தில் வெளிப் பட்டார். (அவரை எங்கள் கைகளினால் தொட்டிருக்கின்றோம், அவரை நாங்கள் பார்த்த் இருக்கிறோம்) அவர் மகிமையிலே ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார், தேவ தூதர்களால் காணப்பட்டார், இங்கே பூமியின் மேல் நிரூபிக்கப்பட்டார்.” 
தேவன் தான்-! நிச்சயமாக, அது மகத்தான ஒன்று ஆனால் அவை எல்லாம் தெளிவாகி விட்டது. “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி,” மூன்று தெய்வங்கள் அல்ல-ஒரே தேவன் மூன்று உத்தியோகங்களைக் கொண்டவராய் இருக்கிறார். மோசேயின் கீழ் பிதாத்துவம், கிறிஸ்துவின் கீழ் குமாரத்துவம், இந்த யுகத்தில் பரிசுத்த ஆவி. அதே தேவனின் மூன்று யுகங்கள்; மூன்று தேவர்கள் அல்ல. அந்த இரகசியம் இப்பொழுது முடிந்து விட்டது. அவ்விதம் நிறைவேறும் என்று வேதம் உரைக்கின்றது.
296. முன்னொரு நாளில் “ஏவாள் ஆப்பிள் பழத்தைத் தின்றாள் என்று யாராகிலும் நினைத்திருந்தால், அது தவறு,'' என்று நான் கூறினதின் பேரில் விஞ்ஞானம் என்னை முரண்பாடாக்க முயற்சிப்பதை நான் கண்டேன். இப்பொழுது அவர்களுடைய விஞ்ஞானம் கூறுகின்றது, முன்னொரு நாளில் செய்தித்தாளில் பெரிய கொட்டை எழுத்துக்களில் "அவள் ஒரு வாதுமை போன்ற கொட்டைப் பழவகையான ஏப்ரிகாட் பழத்தைச் சாப்பிட்டாள்'' என்று பிரசுரிக்கப்பட்டது. முட்டாள்தனம். அது அது அவளை தீட்டுப்படுத்துமா-? (சபையார் “இல்லை,'' என்கின்றனர்-ஆசி) நிச்சயமாக இல்லை. பாருங்கள்-? அவர்கள்..... அதை- அதைத் தான் காயீன் எண்ணினான், உங்களுக்குத் தெரியுமா, ஆகவே அவன் அதே காரியத்தைத் தான் திரும்பவுமாக கொண்டு வந்தான், ஆனால் தேவன் அவனுடைய பலியை ஏற்கவில்லை. ஆகவே நீதிமானாகிய ஆபேலிற்கு “அது இரத்தம்,'' என்று வெளிப்படுத்தப்பட்டது,  ஆகவே அவன் இரத்தத்தைக் கொண்டு வந்தான்.
ஓ தேவனே, நாங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கின்ற இந்தக் காலமும் சபையும் (Church)-! .....
297. ''உள்ளில் எழுதப்பட்டிருக்கின்ற அந்த புஸ்தகம்” இந்த தூதன் நிறுத்துகையில் நிறைவு பெறுகின்றது, இப்பொழுது தயவு செய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள், ஏழாம் தூதனின் செய்தியானது நிறைவு பெறும் போது: தேவத்துவத்தின் இரகசியம், சர்ப்பத்தின் வித்தின் இரகசியம், இன்னும் இந்த காரியங்களைக் குறித்த மற்ற எல்லா இரகசியங்களும்... 
298. ஜனங்கள் ‘நித்திய குமாரத்துவம்' என்று பேசுகின்றனர். நித்தியம் என்பதற்கு தொடக்கமும் முடிவும் கிடையாது என்னும் போது, நித்திய குமாரன் எவ்வாறு இருக்க முடியும்-? குமாரன் என்பவர் பெற்றெடுக்கப்பட்ட ஒருவர். அப்படி ஆனால் ‘நித்திய குமாரன்' என்று அவர்கள் கூறுவது எவ்விதம் அர்த்தம் உள்ளதாகும்-?
299. நரகம் உண்டாக்கப்பட்ட ஒன்றாக இருக்கும் போது, ‘நித்திய நரகம்' என்பது எவ்வாறு இருக்கமுடியும்-? எரிகின்ற நரகம் ஒன்று உண்டு என்பதை நான் நம்புகிறேன். நிச்சயமாக வேதம் நரகத்தைக் குறித்து உரைக்கின்றது. அது அழிப்பதற்காக சிருஷ்டிக்கப்பட்டது. “இரண்டாம் மரணத்தினால் சேதம் அடையாதவன் பாக்கியவான்,'' என்று வேதம் கூறுகின்றது. பாருங்கள்-? பாருங்கள், நீங்கள் இரண்டாம் மரணத்தினால் அழிந்து போவதில்லை. முதலாம் மரணம் சரீரப் பிரகாரமானது. இரண்டாம் மரணம் என்பது, எல்லாம் முடிந்த பின்பு ஆவிக்குரிய மரணம் சம்பவித்தல். “பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்.'' உங்கள் பாவங்களுக்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் ஒருக்கால் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் நித்திய நரகம் என்று ஒன்று இருக்க முடியாது. ஏனெனில் நரகம் சிருஷ்டிக்கப்பட்டதாக வேதம் கூறுகின்றது. அது சிருஷ்டிக்கப்பட்டு இருந்தால், அது எங்ஙனம் நித்தியமாக இருக்க முடியும்-? ஏதாவது... “நரகம் என்பது பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக் காகவும் சிருஷ்டிக்கப்பட்டது,'' என்பதாக வேதம் உரைக்கின்றது. அது சிருஷ்டிக்கப் பட்டதானால் அது நித்தியமாக இருக்க முடியாது. ஏனெனில் நித்தியமான எதற்கும் தொடக்கமோ முடிவோ கிடையாது.
300. ஆகவே நாம் மரிக்க முடியாது. நாம் எப்பொழுதும் இருக்கிறோம். நாம் தேவனுடைய பாகமாய் இருக்கிறோம். நாம் தேவனுடைய வழி மரபாய் இருக்கின்றோம், இருப்பதிலே அவர் ஒருவர் மாத்திரமே நித்தியமானவர். (சகோ.பிரான்ஹாம் பிரசங்க பீடத்தின் மீது மூன்று முறை தட்டுகிறார்-ஆசி) ஆமென். தேவன் எவ்வாறு மரிக்க முடியாதோ, அவ்வாறே நீங்களும் மரிக்க முடியாது. ஏனெனில் நீங்கள் அவருடன்கூட நித்தியமானவர்களாய் இருக்கின்றீர்கள். ஆமென்-! அந்த நிலை வரப் போகின்றது. அல்லேலூயா-! புழுக்களின் வீடாகிய இந்த சரீரத்தைக் குறித்து எனக்கு சலிப்பு உண்டாகின்றது. 
301. “எழுதப்பட்ட புஸ்தகத்தின்'' மீது கவனம் செலுத்துங்கள். தளர்ந்த முனைகளாய் இருந்த இந்த இரகசியங்கள் அனைத்தையும் ஏழாம் தூதன் வெளிப்படுத்தி முடிப்பார். அதற்காக ஜனங்கள் இதுவரை போராடி வந்தனர். லூத்தர் போராடினார், வெஸ்லி போராடினார், பெந்தெகொஸ்தேயினர் போராடினார். "ஆனால் வரவிருக்கின்ற ஒருவர் இருக்கின்றார்,'' என்று வேதாகமம் கூறுகின்றது, “அவர் முழங்கும் நாட்களில், இந்த எல்லா இரகசியங்களும்.'' ஒருத்துவக் கொள்கைக்காரர்கள், இயேசுவின் நாமத்தின் வியாக்கியானத்தில் பாதை தவறினர். திரித்துவக்காரர், நிசாயா ஆலோசனை சங்கத்தில் நிகழ்ந்தவாறு, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் தத்துவத்தைக் கடை பிடித்து, பாதை தவறினர். அவர்கள் இருவருமே தவறு. ஆனால் இப்பொழுது பாதையின் நடுவில் - வேத வாக்கியங்களில், சத்தியம் இருக்கின்றது. நாம் இப்பொழுது எங்கு வந்துள்ளோம் என்பதைக் காண முடிகின்றதா-? கர்த்தருடைய தூதனானவர்-! 
302. வெளிப்படுத்தல் 5:1ஐக் கவனியுங்கள்: இப்பொழுது இதைக் கவனியுங்கள்.
“அன்றியும், உள்ளே ஒரு புஸ்தகம் எழுதப்பட்டு  (உள்ளுக்குள்ளாக எழுதப்பட்டு இருந்த) பின்புறமாக ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்திலே கண்டேன்'' (ஆங்கில வேதாகமத்தில், இந்த வசனம் இவ்வாறு இருக்கின்றது-தமிழாக்கியோன்)
303. இப்பொழுது புஸ்தகத்தின் உள்ளே எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால், பின்புறமோ ஏழு முத்திரைளைக் கொண்டிருந்தது, அதன் பின் பாகத்தில், அது புஸ்தகத்தில் எழுதப்படவில்லை. இப்பொழுது, இது வெளிப்படுத்துபவனாகிய யோவான் பேசுவது ஆகும். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அது புஸ்தகத்தில் எழுதப்பட வில்லை. “ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களில், உள்ளே எழுதப்பட்டு இருக்கின்ற இந்த எல்லா இரகசியமும் நிறைவேறும்.'' அந்த நாளில் அது பார்த்துக் கொள்ளப்படும். நான் கூறுவதைப் புரிந்து கொண்டீர்களா-? (சபையார் “ஆமென்” என்கின்றனர்-ஆசி) தொடர்ந்து கவனிக்கிறீர்களா-? ('ஆமென்'') அதன் பின் வெளிப்படுத்தல் 10-ல் கூறப்பட்டுள்ள ஏழு சத்தங்கள் வெளிப்படவேண்டிய சமயம் வரும். அந்த புஸ்தகம் நிறைவடைந்தவுடன் ஒன்றே ஒன்று மீதியிருக்கும். அது தான் யோவான் எழுதுவதற்கு தடை செய்யப்பட்ட, புஸ்தகத்தின் பின்புறத்தில் எழுதப்பட்டிருந்த அந்த ஏழு இரகசிய இடியின் சத்தங்கள். இதை நான் படிக்கட்டும்.
“பின்பு, பலமுள்ள ஒரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது. அவனுடைய சிரசின்மேல் வானவில் இருந்தது, அவனுடைய முகம் சூரியனைப் போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப் போலவும் இருந்தது.
திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; ... (பாருங்கள், இப்பொழுது இதைக் கவனியுங்கள்)... தன் வலது பாதத்தைச் சமுத்திரத்தின் மேலும் ...... தன் இடது .. பூமியின் மேலும் வைத்து,
சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்த போது ஏழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கின (கவனியுங்கள்)
அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கின போது, நான் எழுத வேண்டும் என்று இருந்தேன்....'' 
304. அங்கே ஏதோ ஒன்று கூறப்பட்டது. அது வெறும் ஒரு சத்தம் மாத்திரமே அல்ல. ஏதோ ஒன்று கூறப்பட்டது. அவன் அதை எழுதப் புறப்பட்டான்.
"..அப்பொழுது.. வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.''(என்னிடம் கூறக் கேட்டேன்... saying unto me)
305. கவனியுங்கள், அந்த சத்தங்கள், அந்த இடி முழக்கங்கள் எங்கே இருந்தன. பரலோகத்தில் அல்ல; பூமியின் மேல்-! அந்த இடி முழக்கங்கள் வானங்களிலிருந்து ஒரு போதும் சத்தமிடவில்லை. அவை பூமியில் இருந்து சத்தமிட்டன.
.... நான் எழுதவேண்டுமென்றிருந்தேன்; “அப்பொழுது : ஏழு இடி முழக்கங்கள் சொன்னவைகளை எழுதாமல் முத்திரை (கொட்டை எழுத்து மு-த்-தி-ரை) முத்திரை போடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம்  உண்டாகக் கேட்டேன்.'' (என்னிடம் கூறக் கேட்டேன்... saying unto me)
306. ஒரு புஸ்தகம் முடிக்கப்படும் போது, அது பின்புறத்தில் இருக்கின்றது. “முன்பு றத்தில்'' என்று அவன் கூறவில்லை. அவன் “பின்புறத்தில்'' என்று கூறினான். அது எல்லாம் நிறை வேறி, முடிக்கப்படும்போது. பிறகு, இந்த ஏழு இடி முழக்கங்களின் சத்தங்கள் ஒன்று மாத்திரமே, புஸ்தகத்துடன் ஒட்டிக் கொண்டு, வெளிப்படுத்தப் படாமல் உள்ளது. அவை அந்த புஸ்தகத்தில் எழுதப்படவுமில்லை.
307. ஓ, என்னே ஜனங்களுக்கு நான் அதைப் புரிய வைத்தால் நலமாயிருக்கும்... காணத் தவறாதீர்கள், காணத் தவறாதீர்கள். இந்தமுறை அவ்விதம் செய்யாதீர். நான் உங்களை விட்டுச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன். இதைக் காணத் தவற வேண்டாம். நன்கு கவனம் செலுத்துங்கள். 
308. இந்த முத்திரைகள் புஸ்தகத்தின் பின்புறத்தில் இருக்கின்றன. “ஏழாம் தூதன் எக்காளம் முழங்கும்போது, புஸ்தகத்தில் எழுதி வைக்கப்பட்டு உள்ள இரகசியங்கள் அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டு நிறைவடைகின்றன''. உடனே, உள்ளே எழுதப்பட்டுள்ள திறக்கப்பட்ட புஸ்தகம் மூடப்படும். தேவனுடைய இரகசியங்கள் முடிவடைகின்றன,'' ஆகவே இது தான் தேவனுடைய இரகசியங்கள்: சபை (Church) செல்லுதல், மற்ற இந்த எல்லா காரியங்கள். “இரகசியங்கள் முடிவு பெற்றன,'' ஏழாம் தூதன் ஒவ்வொரு இரகசியத்தையும் முழங்கும் போது, அது முடிவு பெறுகின்றது. எவர் எப்படிப்பட்டவராய் இருந்தாலும், அது எதுவாய் இருந்தாலும் சரி. தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தவறாது. அவர் இவ்விதம் கூறி உள்ளார் :
''ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப் போகிற போது தேவரகசியம் நிறைவேறும்,''
309. அதைப் போன்ற எல்லா காரியங்களும், ஓ, ரோம சபை, மகா வேசியென்றும், பிராடஸ்டண்டு சபைகள் அவளைப் பின்பற்றி ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்டு, அவளுடைய புத்திரி வேசிகளாய் இருப்பார்களென்றும் போன்றவை. பாருங்கள்-? தீர்க்கதரிசிகள் உரைத்த இரகசியம் அனைத்தும் இந்தக் கடைசி மணி நேரத்தில் வெளிப்படும்.
310. ஆகவே இந்த லவோதிக்கேயா சபையில் இந்த ஏழாம் தூதன் எழும்பி, உண்மையான எக்காளத்தை முழங்கும் போது, அவர்களுடைய கருத்துக்களுக்கு அது முரணாயிருப்பதால், அதை நம்பமாட்டார்கள். அவர்கள் நிச்சயமாக அதை நம்பமாட்டார்கள். ஆனால், அது ஒரு ஊக்குவிக்கப்பட்ட தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும், ஏனெனில் அதை விளக்கமாக அறிந்து கொள்ள வேறு வழி கிடையாது. 
311. திரித்துவம் என்னவென்பதை மனிதர் அறிந்து கொள்ள விழைந்து, அவர்கள் யோசனையின் காரணமாக தலைமயிர் நரைத்து, அவர்களுக்குப் பயித்திமே பிடித்து விடும் போலாகின்றது. அதை யாருமே புரிந்துகொள்ள முடியாது. ஏவாள் ஆப்பிள் பழத்தைப் புசித்தாள் என்றும், இன்னும் எத்தனையோ காரியங்களை அவர்கள் இன்னமும் விசுவாசிக்கின்றனர்.
ஏனெனில் இயேசு பார்த்த சபையைப் (Church) போலவே. அது மனிதன் பிடித்துக் கொண்டே வந்து இருக்கின்ற பாரம்பரியமாகும், 
312. ஆனால் அது ஒரு தெய்வீக நடத்துதலையுடைய தீர்க்கதரிசியைக் கொண்டு தான் இருக்க வேண்டும், ஏனெனில் இயேசு கிறிஸ்துவைப் பற்றின வெளிப்பாட்டின் உண்மையான வியாக்கியானத்துடன், தேவனுடைய வார்த்தை அவனிடம் வர வேண்டியதாக இருக்கின்றது. ஆதலால், அப்படியானால் அது- அது அவ்விதமாகத் தான் இருக்க வேண்டும். தேவனே எங்களுக்கு உதவி செய்யும்-!
313. இப்பொழுது அவனுடைய முழக்கத்தின் போது,” இப்பொழுது, அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதே. நாம் அதை தெளிவாக அறிந்திருக்கிறோம். அவன் தன்னுடைய செய்தியை முழங்குகையில், யுத்தத்தை அறிவிக்கின்றான், பவுல் வைதீக சபையின் மீது செய்த விதமாக, மற்ற எல்லாரும் செய்ததைப் போல, ஸ்தாபனத்திற்கெதிராக லூத்தர் வெஸ்லி செய்ததைப் போல. அவன் யுத்தத்தை அறிவித்து, அவர்களிடம், 'அவர்கள் பொய் சொல்கின்றனர், அது சத்ததியம் அல்ல-! ஆகவே அவர்கள் வஞ்சிக்கின்ற மனிதர்-!'' என்று கூறுவான். அவன் அதை முழங்குகையில், உங்களால் அதைத் தவறவிட முடியாது. அது ஒரு போதும் தவறாது. ஏனெனில் அவன் தேவனுடைய வார்த்தையினால் உறுதிப்படுத்தப்பட்ட ஒருவனாக இருப்பான். அவன் என்ன கூறுகிறான் என்பதை நீங்கள் தெளிவாய் அறிந்து கொள்வீர்கள். அவன் முழங்கும் போது, பாபிலோனை விட்டு வெளிவர வேண்டுமெனும் எச்சரிக்கையையும் விடுப்பான். ''அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமல் அவளை விட்டு வெளியே வாருங்கள்.” தேவனே, அவனை அனுப்பும்-! அதை நீங்கள் இழந்து போக வேண்டாம். 
314. இப்பொழுது, “அவன் முழங்க ஆரம்பிக்கையில், அந்த இரகசியம் நிறைவேறும்,” இப்பொழுது, குறித்துக் கொள்ளுங்கள் அப்பொழுது தான் வெளிப்படுத்தல் 10-ல் உள்ள ஏழு முத்திரை சத்தங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டிய சமயம் ஆகும். உங்களுக்கு புரிகின்றதா-? (சபையார் “ஆமென்,” என்கின்றனர்-ஆசி) புஸ்தகத்தின் எல்லா இரகசியங்களும் நிறைவேறும் போது-! ஆகவே அவன் இரகசியங்களை நிறைவேற்றுவான் என்று இங்கே வேதாகமம் கூறுகின்றது. 
315. முந்தின காலங்களில் இருந்தவர் சத்தியத்திற்காகப் போராடினர். அவர்கள் நீதிமானாக்கப்படுதலுக்காக போராடினர். அவர்கள் சிறிது சென்றனர். பரிசுத்தமாக்கப் படுதல்-! அவர்கள் இதற்காக போராடினர், மேலும் அவர்கள் அதற்காக போராடினர். அவர்கள் இதற்காக போரடினர். அவர்கள் என்ன செய்தனர்-? சரியாக திரும்பவுமாக வந்து அதே காரியத்திற்குள் ஸ்தாபித்துக் கொண்டனர். பெந்தெகொஸ்தேயினர், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் ஒவ்வொருவரும், அதே காரியத்தைச் செய்தனர், சரியாக திரும்பவும் அதே காரியத்தைச் செய்தனர். 
316. ஆகவே வேதாகமம், வெளிப்படுத்தல் 17-ல், அந்த வயதான தாய் வேசியும் அவளுடைய குமாரத்திகளும், மகா பாபிலோன் இரகசியம். அவர்கள் என்ன செய்வார்கள் என்று கூறுகின்றது. வெளிப்படுத்தப்பட வேண்டிய இரகசியங்களில் இது ஒன்றாயிருக்கும் என்று வேதம் உரைக்கின்றது. அதாவது, வேசிகளாகிய பிராடெஸ்டண்டுகள் ஆவிக்குரிய விபச்சாரங்கள் செய்து, மனிதனால் ஏற்படுத்தப் பட்ட போதகங்கள் என்னும் ''உக்கிரமான மதுவை'' கொடுத்து ஸ்தாபனங்களால் ஜனங்களை வழி நடத்தி, இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்த தாராளமாக பாயும் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வல்லமை இருக்கின்ற இரத்தத்தால் நிறைந்த ஊற்றண்டையிலிருந்து, அவர்களை இழுத்துச் செல்கின்றனர். அது உண்மையாகும். தேவன் அதை ஆதரிப்பார். அவர் அவ்விதம் செய்திருக்கிறார்; அதைத் தொடர்ந்து செய்வார். அது நிறைவேறும் போது, தேவனுடைய வார்த்தையின் இரகசியம் வெளிப்பட்டு முடிந்து விடும். 
317. இப்பொழுது ஒன்றே ஒன்று தான் விடப்பட்டிருக்கின்றது, அது நாம் அறியாத் இருக்கின்ற, ஏழு இடிமுழக்கங்கள் ஆகும். ஆகவே அது வீணாக முழங்கியிருக்காது. 
318. விளையாட்டிற்காக தேவன் ஒரு காரியத்தைச் செய்ய மாட்டார். நாம் மடத்தனமான ஆர்வச் செயல்களை, காரியங்களைச் செய்வோம், ஆனால் தேவன் அவ்வாறு அல்ல. தேவனிடம் இருக்கிறதெல்லாம், “ஆம்” மற்றும் “இல்லை” என்பதே. அவர் கோமாளித்தனம் செய்வதில்லை. அவர் குழந்தைத்தனம் செய்வது இல்லை. கருத்தோடு தான் அவர் எதையும் கூறுவார். கருத்தில்லாமல் அவர் எதையும் கூறுவது கிடையாது. 
319. ஆகவே இங்கே இயேசு கிறிஸ்துவைக் குறித்த வெளி-விசேஷத்தில் இருக்கின்ற ஏழு இடிமுழக்கங்கள், அது ஏதோ ஒரு இரகசியம். இது தான் “இயேசு கிறிஸ்துவைக் குறித்த வெளிப்படுத்தல்' என்று வேதாகமம் கூறுகின்றதா-? (சபையார் “ஆமென்,'' என்கின்றனர்-ஆசி) என்ன, அதைக் குறித்த ஏதோ ஒரு மறைக்கப்பட்ட இரகசியம் அங்கே இருக்கின்றது. ஹும்-! அது என்ன-? அந்த ஏழு இடி முழக்கங்கள் அதை வைத்திருக்கின்றது. யோவான் அதை எழுத வேண்டும் இருந்தான். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு சத்தம் கீழே வந்து, “அதை எழுதாதே. ஆனால், அதை முத்திரையிடு, அதற்கு முத்திரை போடு. புஸ்தகத்தின் பின்புறத்தில் அதை வைத்து விடு.” என்று கூறினது. அது வெளிப்படுத்தப்பட  வேண்டும்.  அது  இரகசியங்கள். 
320. இப்பொழுது நாம் பரிசுத்த ஆவியினால் தான் இந்த காரியங்களைத் தெளிவாக்கி இருக்கிருக்கின்றோம் "ஆப்பிள் பழங்கள் அல்ல. அது இனச்சேர்க்கை,'' என்று அவர் நமக்கு அறிவித்தார். யாரும் அதை எதிர்த்து நிற்க முடியவில்லை. அதை ஒப்புக் கொண்ட எந்த ஒரு பிரசங்கியையும் என் ஜீவியத்தில் நான் கண்டதில்லை. ஆனால், நான் அவர்களை கேட்டிருக்கின்றேன். 
321. சிக்காகோவில் நாங்கள்  350 போதகர்களுக்கு முன்பாக இருந்த போது, சிக்காகோவில் இருந்து வந்துள்ள பெண்மணிகளே, நீங்கள் அதைக் குறித்து அறிந்து இருப்பீர்கள். 
322. அங்கு என்ன நிகழப்போகின்றது என்பதை மூன்று நாட்களுக்கு முன்பே கர்த்தர் என்னிடம் தெரிவித்து விட்டார்.
''அவர்கள் உனக்கு ஒரு கண்ணியை வைக்கப்போகின்றார்கள். அந்த ஜன்னலின் அருகே நில். நான் உனக்குக் காண்பிப்பேன்,'' என்றார். அவர், “நாளை திரு. கார்ல்ஸ னும், டாமி ஹிக்ஸும் உன்னைச் சந்தித்து, காலை உணவிற்கு அழைப்பார்கள். டாமி யிடம் இருந்து போகச் சொல். அது இவ்வழியில் காணப்படுகின்றது. அவர்கள் நினைத்து இருக்கும் இடத்தில் கூட்டம் நடை பெறாது. அது வேறொரு இடத்தில் நடைபெறும் என்று அவர்களிடம் சொல். பயப்படாதே, நான் உன்னுடன் கூட இருக்கிறேன்,'' என்றார். அது எனக்குப் போதுமானதாயிருந்தது. 
323. அடுத்த நாள் காலை, முழு சுவிசேஷ வர்த்தகர் குழுவின் தலைவரான திரு. கார்ல்ஸன் என் இல்லத்திற்கு வந்து, “சகோ.பிரான்ஹாம், நீங்கள் எங்களுடன் காலை உணவில் கலந்து கொள்ள வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
324. நான், “சரி”யென்று கூறிவிட்டு, “டாமி ஹிக்ஸும் அங்கு வரட்டும்,” என்றேன். 
325. நாங்கள், “டவுன் அண்டு கன்ட்ரீ (Town and Country) என்னும் இடத்தை அடைந்தோம். அவர்,  “இந்த இடம் மிகவும் ....'' என்றார்.
நான் டாமியிடம், “டாமி, எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா-?” என்று கேட்டேன்.
“நிச்சயமாக,  சகோ.பிரான்ஹாம்  ''எனக்குப் பதிலாக நீங்கள் பிரசங்கம் செய்வீர்களா-?'' என்றேன்.
அவர், “ஐயோ, என்னால் முடியாது,'' என்றார். 
326. நான், “ஏன்-? நான் ஏழாம் வகுப்பு வரையில்தான் படித்திருக்கிறேன். நான்-நான் பேசுவது... நான் அம்பயர் (Umpire) என்பதற்குப் பதிலாக எம்பயர் (Empire) என்று கூறுபவன் நான். பாருங்கள்-? அவர்களுக்கு முன்பாக எப்படிப் பேசப் போகிறேன் என்று தெரியவில்லை. சிக்காகோவின் பெரிய போதகர் சங்கம் அங்கு வரப் போகின்றது. ஏழாம் வகுப்பு கல்வியை வைத்துக் கொண்டு நான் எப்படி அவர்களுக்கு முன்பாக பிரசங்கம் செய்யப் போகிறேன் டாமி-? நீங்களோ வேதத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். எப்படி பேசுவதென்று உங்களுக்குத் தெரியும். எனக்கோ தெரியாது,” என்றேன்.
அவர், “சகோ. பிரான்ஹாம், என்னால் முடியாது,'' என்று பதிலளித்தார்.
327. நான், 'ஏன்-? எத்தனையோ முறை உங்களுக்கு நான் உதவி செய்ததில்லையா-?'' என்று கேட்டேன். வெளிப்படையாக  நான்  பேசினேன். 
328. அப்பொழுது சகோ.கார்ல்ஸன் குறுக்கிட்டு, “இல்லை, சகோ. பிரான்ஹாம், அவரால் முடியாது,” என்றார்.
நான்,  “ஏன்.'' என்று கேட்க, அவர், ''அதாவது, அவர், அந்த-அந்த-அந்த...'' என்றார். 
329. அதற்கு நான், “ஏன்-? என்னும் காரணம் உமக்குத் தெரியும், என்னிடம் அதைக்கூற உமக்கு விருப்பமில்லை. எனக்கு ஒரு கண்ணியை அவர்கள் வைத்திருக்கின்றனர்,'' என்று கூறினேன்.
330. “சகோ.கார்ல்ஸன், அன்று நாம் விருந்துண்ட அதே ஓட்டல் அறையில் தான் நீங்கள் இப்பொழுது ஒழுங்கு செய்திருக்கிறீர்கள் அல்லவா-?" என்று கேட்டேன்.
அவர், “ஆம்,” என்றார்.
“உங்களுக்கு அது கிடைக்கப் போவதில்லை” என்றேன். 
331. அவரோ, ''இல்லை, சகோ.பிரான்ஹாம், ஏற்கனவே நாங்கள் அதற்கு முன் தொகை செலுத்திவிட்டோம்,” என்றார். 
332. “நீங்கள் என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை. அது கிடைக்கப் போவதில்லை. அது பச்சை நிறமுள்ள அறை. நாமோ பழுப்பு நிறமுள்ள அறையில் அதை நடத்தப் போகின்றோம். நான் ஒரு மூலையில் இருப்பேன். டாக்டர் மீட் என் வலது பக்கத்தில் அமர்ந்திருப்பார். அந்த கறுப்பு மனிதனும் அவர் மனைவியும் இந்த இடத்தில் அமர்ந்திருப்பார்கள். எனக்கு வலது புற கடைசியில் ஒரு புத்த மத குருவும் அமர்ந்திருப்பார். அவர்கள்  இன்னின்ன உடை அணிந்திருப்பார்கள்,'' என்றேன். 
333. மேலும் நான், “டாமி, அது என்ன தெரியுமா-? நீங்கள்... சிக்காகோ பெரிய போதக சங்கம் நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கும் ஞான ஸ்நானத்தின் பேரிலும், சிக்காகோ பெரிய போதகர் சங்கம் நான் பிரசங்கிக்கின்ற அந்நியபாஷை பேசுதல் பரிசுத்த ஆவியைப் பெற்ற தன் அடை யாளம் அல்ல என்பதின் பேரிலும், சர்ப்பத்தின் வித்து உபதேசத்தின் பேரிலும், கிருபையைக் குறித்த என் பிரசங்கத்தின் பேரிலும் எனக்கு சவால் விடப்போகின்றது,” என்றேன். 
334. டாமி திகைத்து அங்கும் இங்கும் பார்த்து விட்டு, "இரக்கம்-! நல்லது-! ஐயோ, நான் அங்கு போகப் போவதில்லை,'' என்றார்.
“இல்லை, நீங்கள் வரவேண்டும்,” என்றேன். 
335. ஆகவே அடுத்தநாள், முன்தொகை பெற்றுக் கொண்ட மனிதன் அதைத் திரும்பக் கொடுத்து விட்டு, “ஏற்கனவே அந்த ஓட்டல் அறையை ஒரு வாத்தியக் கோஷ்டிக்காக பதிவு செய்திருந்தோம் என்பதை மறந்து விட்டோம். அதை தொலைத்து விட்டோம். ஆகவே அதை வாத்திய கோஷ்டிக்கு அளித்தாக வேண்டும், ஆகவே அந்த அறையை உங்களுக்குக் கொடுக்க இயலாது,” என்று கூறி விட்டார். ஆகவே நாங்கள் டவுன் அண்டு கண்ட்ரிக்கு சென்று விட்டோம். 
336. அன்று காலை நான் உள்ளே நுழைந்தேன். எல்லாரும் எழுந்து நின்றனர். அவர்களை காலை உணவு அருந்திய பின், நான் அங்கிருந்த சாய்வு மேசையில் அமர்ந்து, காத்துக் கொண்டு, அவர்களை நான் சுற்றிலும் பார்த்தேன். நாங்கள் காலை உணவு அருந்தி விட்டு ஓர் அறையில், வெளியே வந்து உட்கார்ந்து கொண்டோம், நான் சுற்றிலும் பார்த்த போது, சிக்காகோவின் பெரிய போதகர் குழு அங்கத்தினர்கள் அங்கு வந்திருப்பதைக் கண்டேன். ஒவ்வொரு வரும் தங்களை டாக்டர் Ph.D., L.L., Q.U.S.T., இன்னும் அதைப் போன்ற, தங்கள் பட்டங்களை அறிவித்து, தாங்கள் பெரிய பட்டதாரிகள் என்று அறிமுகம் செய்து அவர்கள் முடிக்கும் வரையிலும் நான் அமர்ந்து இருந்து கவனித்துக் கொண்டே வந்தேன். அவர்கள் அறிமுகத்தை முடித்துக் கொண்டவுடன், சகோதரன்-சகோதரன் கார்ல்ஸன் எழுந்து நின்றார். அவர் கூறினார்  “பெருந்தகையோர்களே...'' 
337. ஆகவே எல்லாரும் சகோதரன் ஹாங்க் கார்ல்ஸனை அறிவீர்கள். ஆகவே, அங்கே அவரைக் கேளுங்கள். நல்லது, அந்த ஒலிநாடாக்களை இங்கே வைத்து இருக்கிறீர்களா-? ஒலிநாடாவை நீங்கள் வாங்க விரும்பினால், இங்கே இருக்கின்றது. பையன்கள் அதை வைத்திருக்கின்றனர். 
338. அவர் கூறினார், “பெருந்தகையோர்களே,”
''அடுத்தபடியாக சகோ. பிரான்ஹாமை உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகிறேன். அவருடைய உபதேசங்களை நீங்கள் ஒப்புக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். மூன்று நாட்களுக்கு முன்பு நாங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருந்தோம். இன்று காலை நடந்த எல்லாவற்றையும் அவர் அன்று என்னிடம் கூறாதிருந்தால், நான் இன்று இங்கே நின்றிருக்க முடியாது. நீங்கள் எல்லாரும் அவருடைய உபதேசத்தின் பேரில் கேள்வி கேட்க திட்டமிட்டு இருப்பதாக அவர் என்னிடம் கூறினார். நான் மற்ற இடத்தை ரத்து செய்து விட்டு இங்கு வரவேண்டிய நிலை ஏற்படுமென்றும், டாக்டர் மீட், இன்னும் மற்றவர் எங்கெங்கே அமர்ந்திருப்பார்கள் என்றும் அவர் முன்னறிவித்தார். அது அப்படியே நிறைவேறினது. நீங்கள் அவருடன் இணங்காமல் இருக்கலாம். ஆனால் ஒன்று மாத்திரம் கூற விரும்புகிறேன். அவர் சரியென்று கருதுவதை பயமின்றி எடுத்து உரைப்பவர்,'' என்று கூறினார்.
அவர் “இப்பொழுது 'சகோ. பிரான்ஹாம், தரை உம்முடையது,'' (அதாவது: நீங்கள் இப்பொழுது பேசத் தொடங்கலாம் என்று அர்த்தம் - மொழிபெயர்ப்பாளர்) என்றார். 
339. நான், “நாம் தொடங்கும் முன்பு... ‘நான் அந்த பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாய் இருக்கவில்லை,' என்று நான் இன்று காலையில் செய்ததை, நான் படித்தேன். இதனைச் சரிசெய்து விடுவோம். இப்பொழுது, நீங்களெல்லாரும் வேதத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளதாக கூறிக் கொள்கிறீர்கள். இங்கு நான் தனியே நிற்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞான ஸ்நானத்தைக் குறித்து நீங்கள் என்னிடம் கேள்வி கேட்க விரும்புகிறீர்கள். அதில் இருந்து நாம் தொடங்குவோம். உங்களில் யாராவது ஒருவர் உங்கள் வேதாகமத்துடன் என் அருகில் நின்று, நான் போதித்து வந்துள்ள எதன் பேரிலும் கேள்வி கேட்கலாம். என் பக்கத்தில் நின்று, தேவனுடைய வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு அது தவறு என்று நிரூபியுங்கள் பார்க்கலாம்,'' என்றேன். நான் சற்று நேரம் காத்திருந்தும், யாரும் ஒன்றும் கூறவில்லை. நான் மறுபடியும், ''உங்களில் சிலர் என் பக்கத்தில் வந்து நில்லுங்கள்,'' உங்களுக்கு என்ன ஆயிற்று-? அப்படியானால், என் பக்கத்தில் நிற்க உங்களுக்கு பயமாக இருந்தால் என்னை பிடிக்கத் தொடர்வதை விட்டு அப்பாலே போங்கள் என்கிறேன்-! என்றேன். 
340. அவர்களுக்கு என்னைக் குறித்து பயமில்லை. அவர்கள் பயப்படுவது, சர்வ வல்லமையுள்ள தேவனுடைய தேவ தூதனையே. இங்கு நான் வரவேண்டுமென்று அந்த தேவதூதன் முன்னறிவித்திருக்கக் கூடுமானால்.... அவர்களுக்குத் தெரியும். நான் நினைத்ததைக் காட்டிலும் அவர்கள் புத்திசாலிகள். அங்கு நிற்கக் கூடாது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஹும் ஹும் அதெல்லாம் உங்களுக்குத் தெரியும். அங்கு வந்து அவர்கள் தர்க்கம் செய்ய வில்லை. அவர்களின் கருத்து சரியென்று அவர்கள் உறுதியாக அறிந்திருந்தால், அங்கு வந்து கேள்வி கேட்கக் கூடாதபடி அவர்களுக்கு என்ன நேர்ந்தது-? 
341. இதை நான் ஒலிநாடாவில் பதிவு செய்கிறேன். எங்கு வேண்டுமானாலும் நான் கிறிஸ்தவ முறைப்படி, எந்த சகோதரனிடத்திலும் இதைக் குறித்து பேச ஆயத்தமாய் இருக்கிறேன். நான் யாரிடத்திலும் தர்க்கம் செய்ய மாட்டேன். ஆனால் நான் கூறினவைகளில் ஏதாகிலும் ஒன்று; வார்த்தை தவறென்று நீங்கள் நிரூபிக்க விரும்புகிறேன். உங்கள் பாடப் புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டல்ல, அல்லது டாக்டர் இன்னார் இன்னார் அல்லது பரிசுத்தவான் இன்னார் இன்னார் கூறியுள்ளதை அடிப்படையாகக் கொண்டல்ல, தேவன் அதைக் குறித்து என்ன கூறி உள்ளார் என்பதை நான் அறிய விரும்புகிறேன். அது தான் சரியான ஆதாரம். அது என்ன என்று எனக்குத் தெரியவேண்டும். ஆனால் அவர்களோ அப்படி செய்வதில்லை.
342. இப்பொழுது கவனியுங்கள், வெளிப்-10-ல் கூறப்பட்டுள்ள ஏழு சத்தங்கள் கூறினவை என்னவென்று வெளிப்படும் சமயம் வந்து விட்டது. அந்த புத்தகம் வெளியாகி முடிந்தவுடன், அது தான் ஏழு சத்தங்கள் வெளிப்படும் சமயமாகும். கவனியுங்கள், 
343. கேளுங்கள். இன்னும் அதிக நேரம் உங்களை நிறுத்தி வைக்கமாட்டேன். உங்களைக் களைப்புறச் செய்கிறேன் என்று எனக்குத் தெரியும். இப்பொழுது 10 மணிக்கு 20 நிமிடங்கள் உள்ளன. (சபையார், “தொடர்ந்து பேசுங்கள்'' என்கின்றனர். ஆசி) கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் நின்று கொண்டு, இடம் மாறிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். இந்தக் கூடாரம் விரிவுபடுத்தப்பட்ட பின்பு, நான் மகிழ்ச்சி கொள்வேன். இப்படி நெருக்கமாக அடைக்கப்பட வேண்டிய அவசி யம் அப்பொழுது இராது. நாம் நாள் முழுவதும் வேண்டுமானாலும், அப்பொழுது பிரசங்கம் செய்து கொண்டு இருக்கலாம். 
344. இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது பாருங்கள். அந்த ஏழு சத்தங்கள், இடிகள், முழக்கங்கள்.
தேவன் நமக்கு உதவி செய்வாராக-! நான் தவறாகக் கூறினால், ஆண்டவரே, என்னை மன்னியும். 
345. இந்த கேள்வியை இப்பொழுது நான் கேட்கிறேன். இந்த சத்தம் தொனிக்க ஆரம்பித்த போது, இடியுடன் முழங்கினது. நீங்கள் அதைக் கவனித்தீர்களா, ஏழு சபை காலங்களுக்குப் பின்பு தொடர்ந்த ஏழு முத்திரைகளில், முதலாம் முத்திரை திறக்கப்பட்ட போது, இடி முழங்கினது என்பதைக் கவனித்தீர்களா-? அந்த புஸ்தகத்தின் முதலாம் முத்திரைகள் திறக்கப்பட்டது; அப்பொழுது இடி முழக்கம் உண்டானது. புஸ்தகத்தின் வெளிப்புறத்தில் உள்ள முதலாம் முத்திரையும் அதே விதமாக திறக்கப்படவேண்டும் அல்லவா-? (சபையார் 'ஆமென்,'' என்கின்றனர்- ஆசி) தேவன் தமது திட்டத்தை ஒரு போதும் மாற்றுவதில்லை. இப்பொழுது வெளி-6-ம் அதிகாரத்திற்குத் திருப்புவோம்:
''ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம் போன்ற சத்தமாய்ச் சொல்லக் கேட்டேன்,''
346. இதற்கு பின்பு வேறொரு இடி முழங்கவில்லை. கடைசி முத்திரை திறக்கப்பட்ட போது, பரலோகத்தில் அரைமணி நேரம் அமைதல் உண்டாயிற்று. ஆனால் முதலாம் முத்திரை திறக்கப்பட்ட போது  இடி முழக்கம்  உண்டானது. 
347. ஓ சபையே, இது தான் அந்த நேரமாயிருக்குமா-? நாம் அவ்வளவு தூரம் வந்து விட்டோமா-? நண்பர்களே, யோசித்துப் பாருங்கள். ஒருக்கால் இருக்கலாம். அது இராது என்று நான் நம்புகிறேன். ஆனால் ஒருக்கால் அதுவாக இருந்தால்-? அன்று நேர்ந்த அந்த முழக்கம் என்ன-? கர்த்தருக்கு முன்பாகவும், இந்த திறந்த வேதாகமத்தின் சாட்சியாகவும் கூறுகிறேன். நான் பொய் சொல்லமாட்டேன். அன்று உண்டான அந்த சத்தம் பூமியையே அசைத்தது.
348. அந்த ஏழில் முதலாம் முத்திரை திறக்கப்பட்ட போது - ஒன்றே ஒன்று - எல்லாவற்றையும் குலுக்கும் அளவிற்கு இடி முழக்கம் உண்டானது என்று வேதம் உரைக்கின்றது. அப்படியிருக்க, பின்புறத்திலுள்ள முத்திரைகள் திறக்கப்படும்போது, அது ஒரு இடி முழக்கமாக இருக்கக்கூடும் அல்லவா-? எனக்குத் தெரியாது. என்னால் கூற இயலாது.
349. அங்கு இடிமுழக்கம் உண்டானது. முதலாம் முத்திரை. முத்திரை என்பது இடி முழக்கம். எக்காளமும் அந்நேரத்தில் முழங்கினது. பெந்தெகொஸ்தே காலத்தில் எக்காளம் ஊதப்பட்டது (Blown). அதைக்குறித்து இப்பொழுது நான் பேசப் போவதில்லை. 
350. அந்த தரிசனம் வேதப்பிரகாரமாக இருக்குமானால் ஒரு வாரத்திற்கு முன்பு, கடந்த சனிக்கிழமை அன்று காலை நான் கண்ட தரிசனத்தைக் குறிப்பிடுகிறேன். ஒரு வாரத்திற்கு முன்பு. இங்கே நினைவு கூர்வீர்களானால், தரிசனம் வேதப் பிரகாரமாக இருக்குமானால், அது வேதவாக்கியங்களின் மூலமாகவே நிரூபிக்கப் படவேண்டும். அல்லது அந்த வேதவாக்கியத்தின் தொடர்ச்சியாகவே இருக்க வேண்டும். (சகோதரன் பிரான்ஹாம் சற்று பேசுவதை நிறுத்துகிறார்-ஆசி). உங்கள் மனதில் பதியவேண்டுமென்று சற்று நிறுத்தினேன். 
351. நான் பார்த்தது என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் அது என்னை மரண பயத்துக்குள் ஆழ்த்தியது. நாம் சமயத்தை வீணாக்கிவிட்டோமா-? நாம் முடிவில் இருக்கிறோமா-? இது நிகழும்போது, “இனிகாலம் செல்லாது'' என்று அந்த தூதன் கூறினதை நினைவில் கொள்ளவும். இதன் முக்கியத்துவத்தை நாம் உண்மை யாகவே கிரகித்துக் கொண்டிருக்கிறோமா-? என்று வியப்புறுகிறேன். 
352. “நாடு பூராவும் இடிமுழக்கம் உண்டாக வேண்டுமே,'' என்று நீங்கள் கூறலாம். சகோதரனே, நீங்கள் நினையாத நாழிகையிலே அவர் வருவார். கடைசி நேரத்தில் நீங்கள் அதை கேட்பீர்கள்.
353. இப்பொழுது அது உங்களுக்கு வெளிப்படையாய் இருக்கின்றதா-? புஸ்தகத்தின் உள்ளில் இருந்த அந்த முத்திரைகளில் முதலாம் முத்திரை திறக்கப்பட்டபோது, அப்பொழுது முழங்கின இரகசியங்களான நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தம் ஆக்கப்படுதல், ரோமன் கத்தோலிக்க சபை, பிராடெஸ்டண்டுகள் அவர்களுடைய சிறு சிறு யுத்தங்கள் தேவனுடைய வார்த்தையில் தளர்ந்த முனைகளை விட்டுச் சென்றன. பின்பு ஏழாம் தூதன் தோன்றி இவையனைத்தையும் ஒருங்கே சேர்த்து, அவைகளை விவரிக்கின்றார். பாருங்கள்-? அவர் விவரித்து முடித்தவுடன், ஏழு இடிமுழக்கங்கள் பேசுகின்றன. 
354. யோவான் அதை எழுதத் தொடங்கின போது, 'அதை எழுதாதே. ஆனால், அதை முத்திரையிடு,” என்னும் கட்டளை எழுந்தது. 
355. புஸ்தகத்தின் உள்ளிலிருந்த முத்திரைகளில் “முதலாம் முத்திரை திறக்கப்பட்டது,'' அது ஒரு இடிமுழக்கத்துடன் திறக்கப்பட்டது. ஹு-! 
356. இது வேத வசனமானால், இது.... எந்த ஒரு வேத வசனமும்.. வேதாகமத்தில் இருக்கின்ற எந்த ஒன்றாவது... 
357. பாவ விமோசன ஸ்தலம் (purgatory) ஒன்றுண்டு என்று நீங்கள் என்னிடம் கூற முடியாது. அது போன்றவை. ஏனெனில் அதை ஆதரிக்கும் வேதவாக்கியம் எதுவுமில்லை. மக்காபிகள் புஸ்தகம் (Book of the Maccabees) போன்றவைகளைக் குறித்து நீங்கள் என்னை நம்பச் செய்ய முடியாது. அது ஒருக்கால் சரியாக இருக்கலாம். அவ்வாறே தானியேலின் நான்காம் புஸ்தகமும் கூட. தேவதூதன் ஒருவன் தானியேலின் தலைமயிரைப் பிடித்து அவனை உட்காரவைத்ததாக அதில் எழுதப்பட்டு உள்ளது. அவ்விதம் எதுவும் நிகழ்ந்ததாக வேதாகமத்தில் எழுதப்பட வில்லை. நசரேயனாகிய இயேசு ஒரு சிறு பறவையை களிமண்ணில் செய்து, அதற்கு கால்களை வைத்து, “வியூ-! சிறு பறவையே, பறந்து போ,'' என்று கட்டளை இட்டதாக பாரம் பரியம் கூறுகின்றது, அது முட்டாள்தனம். அதை ஆதரிக்க வேதத்தில் எதுவுமே இல்லை. ஆகையால் அவ்வித முட்டாள்... மொழிப் பெயர்ப்பாளர்கள் இத்தகைய அர்த்தமற்ற கோட்பாடுகளை வேதத்தில் கூட்டி சேர்க்கா வண்ணம் தேவன் கவனித்துக் கொண்டார். மக்காபி சகோதரர்கள் நல்லவராய் இருந்திருக்கலாம். அவர்கள் நல்லவரல்ல என்று நான் கூறவில்லை. ஆனால் அது வேதரீதியாய் அமைந்திருக்கவில்லை. 
358. இந்த வேதாகமம் இயேசுகிறிஸ்துவை பரிபூரணமாக வெளிப்படுத்தும் புஸ்தகம். அதனுடன் ஒன்றையும் கூட்ட முடியாது, ஒன்றையும் எடுத்து விடமுடியாது.'' எதையாகிலும் அதனுடன் சேர்க்க முற்பட்டால், அது வேதாகமத்தின் மற்றைய பாகங்களுடன் ஒத்துப் போகாது. வேதாகமத்தில் ஆக மொத்தம் 66 புஸ்தகங்கள் உள்ளன. அவைகளில் ஒரு வார்த்தை மற்றொரு வார்த்தையுடன் முரணாக இருப்பது இல்லை.
359. அப்படியானால், இந்த கடைசி எக்காளங்களின் முழக்கத்தின் அல்லது வர விருக்கின்ற இந்த கடைசி ஏழு இடி முழக்கங்களின், அந்த இரகசியங்களின், அந்த கடைசி முத்திரைகளின் தொடர்ச்சியாக இது அமைந்து இருக்குமானால், இது மற்ற வேத வாக்கியங்களுடன் பங்கு கொள்ள வேண்டும், அல்லது ஒத்துப் போக வேண்டும். ஆகவே அங்கே உள்ளே இருக்கின்ற முதலாவது இடி முழக்கத்துடனே திறக்கப்படுமானால் பின் புறத்தில் இருக்கின்ற இரண்டாவதும்கூட அவ்விதமாகத் திறக்கப்படும். என்ன சம்பவிக்கிறது என்பதைக் கவனியுங்கள். அந்த தரிசனமானது வேத வசனமாக இருந்தால், அப்படியானால் அது வேத வசனத்தினால் வியாக்கியானப் படுத்தப்பட வேண்டும், அல்லது அதே வேத வசனத்தின் தொடர்ச்சி ஆக இருக்க வேண்டும்.
360. கவனியுங்கள், வெளிப்படுத்தல் 3 மற்றும் 4, “ஏழு இடி முழக்கங்கள்.'' ஏழு இடிமுழக்கங்கள், ஆகவே பிறகு கவனியுங்கள், 3 மற்றும் 4, ஆகவே பிறகு (என்ன-?) ‘காலம் முடிவடைந்து விட்டது,'' என்று பலமுள்ள தூதனிடமிருந்து ஒரு ஆணை. இந்த இடி முழக்கங்கள், நீங்கள் பாருங்கள், தங்கள் சத்தங்களைக் கொண்டு வந்த போது, அப்பொழுது அந்த தூதன்... 
361. அதைக் குறித்து சற்று சிந்தியுங்கள்-! ''ஒரு தூதன், மேகத்தை உடுத்தினவனாய் (ஆங்கிலத்தில் உள்ளவாறே-தமிழாக்கியோன்), ''அவன் சிரசின் மேல் வானவில் கொண்டவனாய்.” என்ன, அது யார் என்பது உங்களுக்கு தெரியும். ஒரு பாதத்தை பூமியின் மேலும், மற்றொரு பாதத்தை சமுத்திரத்தின் மேலும் வைத்து, தன் கையை உயர்த்தி, ''ஏழு இடி முழக்கங்கள் தங்கள் சத்தங்களை முழங்கின போது,  இனி காலம் செல்லாது,'' என்று ஆணையிட்டான்.
362. ஆகவே தேவனுடைய இரகசியங்களின் ஊழியமானது முடிவுற்றிருக்குமானால், வருகின்ற அந்த ஏழு இரகசியங்கள் அது தான் என்பதைக் குறித்து என்ன-? ஆகவே ஒரு தாழ்மையான, சிறிய நம்முடைய சபைக்கு, சர்வ வல்லவர் வந்து தம்முடைய ஜனங்களின் தாழ்வான நிலையை நோக்கிப் பார்த்திருக்கின்றாரே-! நீங்கள், "ஓ அப்படியே, அப்படியல்ல என்று நினைக்கிறேன்,'' என்று கூறுவீர்களானால். அதுவாக இருக்காது. ஆனால் அதுவாக இருந்தால் என்ன அது-? அப்படியானால் காலம் கடந்து விட்டது என்பதே. அதைக் குறித்து நீங்கள் சிந்தித்தீர்களா-? அசட்டையாய் இராமல் பொறுப்பு உணர்ச்சியுடன் இருங்கள். நாம் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதம் ஆகியிருக்கக் கூடும். 
363. இந்த நட்சத்திரங்கள் திரும்பவுமாக தங்கள் கிரஹ நிலைக்கு திரும்புதல்-! அந்த தூதன் வந்து, “யோவான் பழைய ஏற்பாட்டை முடித்து இயேசு கிறிஸ்துவின் அறிமுகத்தை கொண்டு வரத்தக்கதாக அனுப்பபட்டது போல, ஒரு செய்தி அந்த தளர்ந்த முனைகளை முடிவிற்கு கொண்டு வந்து, கடைசி நாட்களின் செய்தி அந்த மேசியாவை அவருடைய வருகைக்கு சற்று முன்னதாக அறிமுகப்படுத்தும்,” என்றான். 
364. கவனியுங்கள், அந்த பலமுள்ள தூதன், “இனி காலம் செல்லாது,'' என்னும் உறுதி பிரமாணத்துடன், ஆணையிட்டான். 
365. இப்பொழுது, நான் உங்களை அதிக நேரம் நிறுத்தி வைக்க விரும்பவில்லை. இப்பொழுது ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.
366. இப்பொழுது, கவனியுங்கள், இந்த தூதன் வானத்தில் இருந்து இறங்கி வந்தான். பாருங்கள்-? ஏழு சபைகளின் அந்த மற்ற ஏழு தூதர்களும் பூமிக்குரிய செய்தியாளர்கள். ஆனால் இந்த தூதன்... எல்லா செய்தியும் முடிவு பெறுகிறது;  அந்த ஏழாம் தூதன் முழு காரியத்தையும் முடித்து வைக்கிறான். ஆனால் இந்த தூதனோ பூமிக்கு வரவில்லை; சபைக் காலங்களிற்குரிய செய்தியாளர்களைப் போல் அவன் பூமியிலிருந்து வருகின்ற ஒரு மனிதன் அல்ல; அது முடிவு பெற்றது. ஆனால் இந்த தூதன் அடுத்த அறிவிப்பைக் கொண்டு வருகின்றான். ஆகவே ஒரு தூதன் என்றால் “செய்தியாளன்'' என்று அர்த்தம். ஆகவே அவன் வானத்திலிருந்து, அக்கினி ஸ்தம்பம், மேகத்தை உடுத்தினவனாய் தலையின் மேல் வான வில்லைக் கொண்டவனாய் இருக்கிறான். (வானவில் உடன்படிக்கைக்கு அடையாளம்.) அவ்விதம் ஒரு பாதத்தை பூமியின் மேலும் ஒரு பாதத்தை சமுத் திரத்தின் மேலும் வைத்து, “இனி காலம் செல்லாது,'' என்று ஆணையிடுபவர் கிறிஸ்துவே.
ஐயன்மீர், நாம் எங்கு வந்திருக்கிறோம்-? இதைக் குறித்தெல்லாம் என்ன-? உங்களைத் தான் நான் கேட்கின்றேன்.
367. அந்த மற்ற தூதர்கள் செய்தியாளர்கள் ஆவர், பூமிக்குரிய மனிதர். ஆனால் இந்த தூதன்... இந்த, கூறினான் “லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு,'' “எபேசு சபையின் சபையின் தூதனுக்கு," சபைக்கான பூமியைச் சார்ந்த செய்தியாளர்கள்; பாருங்கள், மனிதர், செய்தியாளர்கள், தீர்க்கதரிசிகள், இன்னு...
368. ஆனால், இந்த ஒருவனோ பூமியிலிருந்து வந்தவரல்ல. அவன் வானத்திலிருந்து இறங்கி வந்தான், ஏனெனில் இரகசியம் எல்லாம் முடிவு பெற்றது. ஆகவே, இரகசியம் முடிவு பெற்ற பிறகு, அந்த தூதன் “இனி காலம் செல்லாது'' என்று கூறினான், ஆகவே ஏழு இடி முழக்கங்கள் தங்கள் சத்தங்களை முழங்கின. 
369. எடுத்துக் கொள்ளப்படுவதற்கேற்ற விசுவாசத்திற்குள் எப்படி பிரவேசிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ளத்தக்கதாக ஏதோ ஒன்று நமக்கு காண்பிக்குமானால் அது என்ன-? அப்படியா-? நாம் ஓடி மதில்களைத் தாண்டப் போகிறோமா-? பழைய அழிவுள்ள சரீரம் மறுரூபப்படுவதற்காக ஏதாவதொன்று நிகழ இருக்கின்றதா-? ஓ-! ஆண்டவரே, அதைக் காண நான் உயிரோடிருப்பேனா-? நான் காண்பதற்கு அது அவ்வளவு அருகாமையில் உள்ளதா-? இந்த சந்ததியில் தான் அது நிகழ இருக்கின்றதா-? ஐயன்மீர், என் சகோதரரே-! இது என்ன சமயம்-? நாம் எங்கு வந்து உள்ளோம்-?
370. நாம் எந்த தேதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பார்க்க, கடிகாரத்தை, நாள் காட்டியை நாம் பார்ப்போமாக. தன்னுடைய சொந்த தேசமாகிய பாலஸ்தீனாவில், இஸ்ரவேல் இருக்கின்றாள். (2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒன்று, ஆமாம், ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒன்று. ஆறு முனையுள்ள தாவீதின் நட்சத்திரம் கொண்ட கொடி-மிகவும் பழமையான அந்தக் கொடி - மறுபடியும் இஸ்ரவேல் நாட்டில் பறக்கின்றது. அது முடிவு காலத்தின் அடையாளம். இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பி விட்டனர். அத்திமரம் தன்னுடைய மொட்டுக்களை துளிர்விடச் செய்யும் போது, இந்த சந்ததி மரித்துப் போகாது. இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே, இந்த சந்ததி ஒழிந்து போகாது''. 
நாடுகள் உடைகின்றன 
இஸ்ரவேல் விழித்தெழும்பினாள் 
இவை தீர்க்கதரிசிகள் 
முன்னறிவித்த அடையாளங்களாம் 
புறஜாதிகளின் நாட்கள் எ
ண்ணப்பட்டுள்ளன 
திகில் எங்கும் சூழ்ந்துள்ளது. 
சிதறப்பட்டோரே, 
உங்கள் மந்தைக்குத் திரும்புங்கள் 
மீட்பின் நாள் சமீபித்துள்ளது 
மனிதரின் இதயங்கள் 
பயத்தினால் சோர்ந்துள்ளன 
பரிசுத்த ஆவியால் நிறைந்து 
உங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தி 
மேல் நோக்குங்கள், 
உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது 
கள்ளத் தீர்க்கதரிசிகள் பொய்யுரைக்கின்றனர் 
கிறிஸ்துவாகிய இயேசுவே தேவன் 
என்னும் தேவனுடைய சத்தியத்தை மறுதலிக்கின்றனர்
(உங்களுக்கு அது உண்மையென்று தெரியும்) 
நாமோ அப்போஸ்தலர் நடந்த பாதையில் நடப்போம்-! 
ஏனெனில் மீட்பின் நாட்கள் சமீபித்திருக்கின்றன.
மனிதரின் இதயங்கள் பயத்தினால் சோர்ந்துள்ளன 
பரிசுத்த ஆவியினால் நிறைந்து 
உங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தி 
மேல் நோக்குங்கள், உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது. 
371. நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் அது அருகாமையில் இருக்கக்கூடும். அது என்னை மரணத்திற்கேதுவான பயத்தில் ஆழ்த்தினது. ஓ, நான் போதுமான அளவுக்குப் பணி செய்யவில்லை-! நாம் எந்த இடத்தில் வந்திருக்கிறோம்-? 
372. 'இனி காலம் செல்லாது'. காலம் முடிவடைந்துவிட்டதாக அவன் அறிவிக்கிறான். என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது-? என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது-? சகோதரரே, ஒருக்கால் அது இப்பொழுது இருக்குமா-? தீவிரமாய்ச் சிந்தியுங்கள். அப்படி இருக்குமானால், அப்படியென்றால் அந்த கூர்நுனிக் கோபுரம் ஏழு இடிமுழக்கங் களால் பொருத்தப்பட்டு இருக்கின்றது. 
373. கூர்நுனிக் கோபுரத்தின் செய்தி உங்களுக்கு ஞாபகமிருக்கின்றதா-? அது தலைக்கல். அது என்ன செய்தது-? பரிசுத்த ஆவியானவர் தனிப்பட்ட நபரின் மேல் பொருத்தப்பட்டு அதை முத்தரித்தல். எப்பொழுது-? நாம் விசுவாசம் என்பதுடன் நீதியையும், தேவபக்தியையும் கூட்டிக்கொண்டே வந்தபோது ஏழு காரியங்களை பெற்றுக் கொள்ளும் வரை, நாம் கூட்டிக் கொண்டே வந்தோம். ஆகவே ஏழாவது தேவனாகிய அன்பு ஆகும். அவ்விதமாகத்தான் அவர் ஒரு தனிப்பட்ட நபரை உருவாக்கி, அவனை பொருத்தி, பரிசுத்த ஆவியினால் அவனை முத்தரிக்கின்றார். 
374. ஆகவே, அப்படியானால், அவருக்கு ஏழு சபையின் காலங்கள் இருந்தன. ஏழு இரகசியங்கள் வெளிப்பட்டு விட்டன. இதைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று முந்தைய சபை காலத்தவர் போராடி வந்தனர். ஆகவே இப்பொழுது, சபையின் மேல் பொருந்தத்தக்கதாக தலைக் கல்லானது வருகின்றது. சகோதரரே, இடி முழக்கங்கள் அதைத்தான் குறிக்கின்றனவா-? ஐயன்மீர், அந்த கட்டத்திற்கு நாம் வந்து விட்டோமா-?
375. ஜுனி, உங்கள் சொப்பனத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். கவனியுங்கள். கூர்நுனிக் கோபுரத்தின் செய்தி, பிரசங்கம் செய்யப்படுவதற்கு அநேக மாதங்கள் முன்பே, ஜுனியர் ஜாக்சன் இந்த சொப்பனத்தைக் கண்டார்.
“அந்த சொப்பனத்தைக் குறித்தென்ன-?'' என்று நீங்கள் கேட்கலாம். 
376. நேபுகாத்நேச்சார் ஒரு சொப்பனம் கண்டான். தானியேல் அதன் அர்த்தத்தை விவரித்தான். அந்த சொப்பனம் புறஜாதியாரின் காலத்தின் தொடக்கத்தையும், அது எப்பொழுது முடியும் என்பதையும் எடுத்துரைத்தது. அது போன்றே இதுவும். அதில் ஒரு பாகமும்கூட தவறாகவில்லை. 
377. அந்த உச்சிப் பாறையில் எழுதியிருந்த எழுத்துக்களின் அர்த்தத்தை நான் அவர்களுக்கு விவரித்துக் கொடுத்தேன் என்பதை கவனியுங்கள். அவர்கள் மகிழ்ச்சியுற்றனர். ஆண்டாண்டுகளாக புரிந்து கொள்ளப்படாது இருக்கின்ற “தேவனுடைய இரகசியம்,” அதுவாகும். அப்படியிருக்குமா-? 
378. அதன் பின்பு கவனியுங்கள், ஏதோ ஒரு விசித்திரமான விதத்தில், வெறும் காற்றிலிருந்து கூர்மையான ஒரு கடப்பாறையைப் பெற்றுக் கொண்டேன். அது மலையின் மேல் பாகத்தை நீக்கிவிடுகின்றது. அதனடியில் ஒரு வெள்ளைப் பாறை இருந்தது. அதை நான் விரித்து உரைக்கவில்லை. அதில் எழுத்துக்கள் காணப்படவில்லை. ஜுனியர், அதை நான் விளக்கவில்லை. அதை நான் உற்றுப் பார்த்தேன். பின்பு சகோதரரிடம், “அதை பாருங்கள்,'' என்றேன். அது இன்றிரவு நிறைவேறி விட்டது. 
379. ஆகவே அவர்கள் ஆராய்ந்து கொண்டே இருக்கையில் நான் மெல்ல மேற்கு திசையை நோக்கி நழுவி விட்டேன். எதற்காக-? ஒருக்கால் அதன் உச்சியில் எழுதப்பட்ட எழுத்துக்களை அறிந்து கொள்வதற்காக, அப்படியிருக்குமா-? 
380. ஆகவே அன்று காலை ஏற்பட்ட பலத்த சத்தம், என்னை மரத்துப் போகச் செய்து, இந்த கட்டிடத்தின் உயரம் அளவிற்கு என்னைத் தூக்கிச் சென்றது. அந்த தேவ தூதர்களின் கூட்டம், கூர்நுனிக் கோபுர வடிவில் ஏழு தூதர்கள், இனி வர இருக்கும் இடி முழக்கங்களை அது குறிக்கின்றதா-? அப்படியிருக்குமா-? 
381. ஜுனியர் ஜாக்சன் கண்ட சொப்பனத்தின்படி, அவை விவரிக்கப்பட்டு முடிந்து விட்டன. தேவனுடைய வார்த்தைப்படி, ஏழாம் செய்தியாளன் முடிப்பான், ஏழாம் செய்தி முடிவு பெறும், அதன் பிறகு அந்த ஏழு இடிமுழக்கங்கள். ஆகவே, அந்தத் தலைக் கல்லானது உருட்டி... 
382. வெளிப்படுத்தப்பட வேண்டிய ஏழு முத்திரைகள் இருக்கின்றன என்பதை அநேக ஜனங்கள் அறியாமல் இருக்கின்றனர். வெளிப்படுத்தல் புஸ்தகத்தின் பேரில் அநேகர் எழுதிய புஸ்தகங்களை நான் படித்தது உண்டு. ஆனால் அதைக் குறித்துப் பேசப்படுவதை நான் கேட்டதே இல்லை. அவர்கள் அதைத் தாண்டிச் சென்று விடுகின்றனர். ஆனால் அது அங்கே இருக்கின்றது என்று உங்களிடம் கூறப்பட்டுள்ளது. 
383. அது என்னவென்பது எனக்குத் தெரியாது. அது அதுவாக இருக்குமா-? தேவன் நம் மீது இரக்கமாயிருப்பாராக-! அது தான் என்றால் நாம் ஒரு முக்கியமான மணி நேரத்திற்கு வந்து இருக்கிறோம். இப்பொழுது, ஒரு நிமிடம் கவனியுங்கள், அது அதைத் தான் குறிக்குமென்றால், அந்தப் பாறைகளில் எழுதப்பட்டிருந்த இரகசியம் வெளிப்பட்டு விட்டது என்றால்.... 
384. தேவன் சொப்பனங்களை அளிக்கும் தேவனுடைய மக்கள் கொண்ட சபையில் நான் அமர்ந்து கொண்டிருப்பதற்காக மகிழ்ச்சியுறுகிறேன். ஜுனியர் சபைக்கும், சகோ. நெவிலின் இந்த சபைக்கும், செல்லும் இந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேதாகமம், “கடைசி நாட்களில் அவர்கள் சொப்பனங்களைக் காண்பார்கள்'' என்று உரைக்கின்றபடி. இந்த ஜனக்கூட்டத்தில் ஜனங்கள் உட்கார்ந்துக் கொண்டு இருக்கின்றனர் என்பதை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். ஆகவே அது இங்கே இருக்கின்றது. ஆகவே அதைக் கவனியுங்கள், அது வார்த்தையுடன் ஒத்துப் போகின்றது. 
385. அதைக் குறித்து நான் ஒன்றும் அறியாதிருக்கும் போதே, ஒரு முழக்கம் உண்டாகி, நித்தியத்தில் இருந்து ஏழு தூதர்கள் இறங்கி வந்தனர். “ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்-?'' என்று கேட்டேன். அதற்கு எந்தவித பதிலும் இல்லை. ஒருக்கால் நான் அங்கு சென்று, முதலில் நான் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ள வேண்டியதாய் இருக்கும். எனக்குத் தெரியவில்லை. “அது அப்படி இருந்தால்-?" என்று மாத்திரமே நான் கூறுகிறேன். அது வேதபூர்வமாக இருக்குமானால், அதற்கு மிக அருகாமையில் தொனிப்பதைப் போல இருக்கிறது. அப்படித் தான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா-? (சபையார் “ஆமென்,'' என்கின்றனர்-ஆசி) 
386. கவனியுங்கள், பிறகு, கவனியுங்கள், தலைக்கல் வியாக்கியானிக்கப் படவில்லை. பாருங்கள்-? மேற்கில் சென்று திரும்பவும் வா''. அல்லது இப்படி இருக்குமா-? இந்த குழுவில் என்னிடம் வந்த இந்த ஏழு தூதர்களின் கூட்டமா-? 
387. ஆகவே உயிர்த்தெழுதலின் நாளில் நான் உங்களை சந்திக்கும் போது, நான் பொய் உரைக்கவில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள்; தேவனே எனது நியாயாதிபதி. 
388. அல்லது, நான் அன்று உங்களிடம் கூறினது போன்று, இது இரண்டாம் உச்சகட்டமாக (Climax) இருக்குமா-? சபைக்காக வரவிருக்கின்ற ஏதோ ஒன்றாக அது இருக்குமா-? எனக்குத் தெரியாது. அதன் பேரில் சற்று நேரம் பேசலாம். ஆனால் நான் கடந்து சென்று விடுகிறேன். 
389. அது, அந்த வல்லமையான இடி முழக்கமாக, அல்லது அந்த ஏழில் ஏழாவது தூதனாக, அந்த கூட்டத்தல், ஏழாவது காலப்பகுதி கூட்டம், அவர்களுடைய கூர்நுனி கோபுரம் (ஒரு பக்கத்தில் மூன்று, மேலே ஒன்று) என்னும் விதத்தில் வடிவமைக்கப் பட்ட, நித்தியத்திலிருந்து வந்த தூதர் கூட்டமாக இருக்கக்கூடுமா-? அவ்விதமாக இருக்குமா-? 
390. தலைக்கல்லை திரும்பவுமாக கொண்டு வருகின்ற அந்த இடிமுழக்கங்களைக் குறித்த இரகசியமாக இருக்குமா-? அந்த கூர்நுனி கோபுரத்தின் மேல் எதுவும் பொருத்தப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். அந்தத் தலைக்கல் இன்னும் வரவில்லை. அது புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றது. சகோதரரே, சகோதரிகளே, அதுவாக இருக்குமா-? 
391. அல்லது, 3, 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர் என்னிடம் கூறின மூன்றாம் இழுப்பா (Third pull)... இது-? 
392. முதலாம் இழுப்பு-என்ன நேர்ந்தது என்று உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா-? அதை விவரிக்க நான் முயன்றேன். அவர், "அப்படிச் செய்யாதே,'' என்றார்.
393. இரண்டாம் இழுப்பு-“முயற்சி செய்ய வேண்டாம்,'' என்றார், ஆனால் நானோ அதை இழுத்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா-? (சபையார் “ஆமென்,'' என்கின்றனர்-ஆசி)  நீங்கள் எல்லாரும் நினைவில் கொண்டிருக்கிறீர்கள். இவை ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
394. ஆகவே பிறகு அவர், ''மூன்றாம் இழுப்பு வரப் போகின்றது. அதை விவரிக்க முயலவேண்டாம்,'' என்றார். இன்றிரவு அதை நான் எவ்விதம் அணுகினேன் என்று பார்த்தீர்களா-? எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதைக் குறித்து என் சபைக்குச் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். அது என்ன வென்று நீங்களே தீர்மானம் செய்து கொள்ளுங்கள். 
395. இப்பொழுது, கிறிஸ்துவை கொண்டு வருகின்ற, சபைக்கு வல்லமையைக் கொணர்கின்ற, திறக்கப்படப் போகின்ற அந்த இரகசியமாக இது இருக்குமா-? பாருங்கள்-? நாம் ஏற்கெனவே.... 
396. நாம் மனந்திரும்புதல், இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ளுதலில் விசுவாசம் கொண்டு இருக்கிறோம். அடையாளங்கள், அற்புதங்கள், அந்நியபாஷை பேசுதல்- ஆதி சபையில் காணப்பட்டவை- நம்மிடையேயும் காணப்படுகின்றன. வெளிப்படை யாய்க் கூறப்போனால், இந்த நமது சிறு ஊழியத்தில், இந்தச் சிறு கூட்டம் ஜனங்களின் மத்தியில், அப்போஸ்தலருடைய நடபடிகளில் எழுதப்பட்டவைகளைக் காட்டிலும் அதிகக் கிரியைகள் செய்யப்பட்டுள்ளன. அப்படியானால், உலகம் முழுவதும் நடந்துள்ள அற்புதங்களைக் கணக்கிடும் போது எவ்வளவாயிருக்கும்-? பாருங்கள்-? அதே விதமான, அப்போஸ்தலரின் நடபடிகளில் எழுதப்பட்டதைக் காட்டிலும் அதிகம்-! மரித்தோரை எழுப்புதல்-! நினைவில் கொள்ளுங்கள், அவ்வாறே மரித்தோரை உயிரோடெழுப்பின விஷயத்தைக் குறித்தும், இயேசு கிறிஸ்து தம் காலத்தில் மூன்று பேர்களை உயிரோடெழுப்பினார். ஆனால் ஐந்து பேர் உயிரோடு எழுப்பப்பட்டதாக நம்மிடம் வைத்தியர்களின் அத்தாட்சிகள் உண்டு .
397. “நான் செய்கிற கிரியைகளைப் பார்க்கிலும் அதிக கிரியைகளையும் நீங்கள் செய்வீர்கள்.'' ஜேம்ஸ் அரசனின் வேதாகமம், “பெரிய கிரியைகளையும் செய்வான்'' என்று உரைக்கின்றது என்பது எனக்குத் தெரியும். நாம் அவரைக் காட்டிலும் பெரிய கிரியைகளைச் செய்ய இயலாது. அதிக கிரியைகளையே செய்ய முடியும். இயேசுவின் காலத்தில் அவர், ஒரு நபருக்குள் இருந்தார். இப்பொழுதோ அவர் முழு சபையிலும் இருக்கின்றார். பாருங்கள்-? “நான் என் பிதாவினிடத்திற்குப் போகிற படியால், இவைகளைப் பார்க்கிலும் அதிக கிரியைகளை நீங்கள் செய்வீர்கள்.'' 
398. இது மூன்றாம் இழுப்பாக இருக்குமானால், ஒரு மகத்தான ஊழியம் காத்துக் கொண்டிருக்கிறது. எனக்குத் தெரியாது, என்னால் கூற இயலாது, எனக்கு... எனக்குத் தெரியாது. 
399. கவனியுங்கள், மூன்றாம் இழுப்பு, அதைப் பற்றி ஒரு நிமிடம் சிந்திப்போம். நான் கண்ட தரிசனத்தில், முதலில் பறந்து சென்றவை சிறு தூது பறவைகள். நான் முதலில் ஊழியம் ஆரம்பித்த போது, ஒரு நபரின் கையைப் பிடித்து அவருக்குள்ள வியாதியை எடுத்துக் கூறினதற்கு அது எடுத்துக் காட்டாயிருந்தது. அதிலிருந்து அது வளர ஆரம்பித்தது. 
400. அவர் என்னிடம் கூறினது ஞாபகமிருக்கிறதா-? “நீ மாத்திரம் உத்தமமாய் இருந்தால், அவர்களுடைய இருதயங்களிலுள்ள இரகசியங்களை அறிந்து கொள்ளும் சமயம் வரும்.'' இங்கிருந்து அது உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டது எத்தனை பேருக்கு ஞாபகமிருக்கிறது-? (சபையார் “ஆமென்” என்கின்றனர்-ஆசி) அது நிறைவேறினதா-? (“ஆமென்,'') பிழையின்றி, பின்பு அவர், “நீ பயப்படாதே நான் உன்னுடன்கூட இருக் கிறேன். இது தொடர்ந்து நடக்கும்,” என்றார். 
401. முதலாம் இழுப்பு, மிகச் சிறிய பறவைகள்; அவை பறந்து சென்றன. அவை காலத்தைச் சந்திக்கச் சென்றன; கர்த்தருடைய வருகையை சந்திக்க... முதலாம் செய்தி. 
402. இரண்டாவதாக,  இருதயத்தின் அந்தரங்கங்களை வெளிப்படுத்துதல். ஒரு நபரின் கையைப் பிடித்து, அங்கு நின்று கொண்டே அவருக்கு என்ன வியாதி என்று கூறுவதிலிருந்து, அடுத்த கட்டத்தில் அவர்களுடைய பாவங்களை வெளிப்படுத்தி, அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று கூறும் அளவிற்கு அது வளர்ந்தது. ஆகவே.... அது சரியா-? (சபையார் “ஆமென்,'' என்கின்றனர்-ஆசி) தேவன் முன் அறிவித்தபடியே யாவும்
நீங்கள் சாட்சிகள். உலகமும், சபையும் அதற்கு சாட்சி. 
403. “நான் ஒரு தூதனைக் கண்டேன், அது ஒரு எரிகின்ற மரகத அக்கினியாக இருந்தது' என்று நான் கூறின போது, ஜனங்கள் என்னைக் கேலி செய்தனர். அவர்கள், “பில்லி, உனக்குப் பயித்தியம் பிடித்துவிட்டது,'' என்றனர். ஆனால், புகைப்படக் கருவியின் விஞ்ஞானக் கண் அதைப் புகைப்படம் பிடித்தது. நான் பொய் சொல்லவில்லை. நான் சத்தியத்தைத் தான் கூறிக் கொண்டிருந்தேன். தேவன் உறுதிபடுத்தினார். 
404. நான்  “இருள் நிழலிட்டிருக்கின்றது; அது மரணம், கறுப்பு. ஆகவே இது வெள்ளை. ஒன்று ஜீவன்; அந்த மற்றொன்று மரணம்,'' என்று கூறினேன். அதோ அது பின்னால் அங்கே இருக்கின்ற புகைப்படத்தில் இருக்கின்றது. 
405. “புகைப்படக் கருவியின் இயந்திரக் கண், மனோதத்துவத்தைப் புகைப்படம் பிடிக்காது,'' என்று ஜார்ஜ். ஜே.லேசி என்னும் நிபுணர் கூறினார். நான் கூறுவதைக் கேட்டுக் கொண்டு வருகின்றீர்களா-? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி) 
406. கவனியுங்கள், முதலில் பறந்து சென்ற சிறு பறவைகள் கையை உபயோகித்து வியாதியை எடுத்துக் கூறும் அடையாளம். இரண்டாவதாக, பெரிய பறவைகள்-புறாக்கள்; பரிசுத்தாவியானவர் இருதயங்களின் அந்தரங்கங்களை வெளிப் படுத்துதல். மூன்றாவதாக, தூதர்கள் பறந்து வந்தனர்-(பறவைகள் அல்ல),  தூதர்கள். அது கடைசி காலம். அத்துடன் முடிவு பெறுகின்றது. சகோதரனே, அது இந்த சமயமாக இருக்குமா-?  இது தான் அந்த சமயமா-? 
407. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இதை தவறாக வியாக்கியானம் செய்ய வேண்டாம். உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். 
408. ஒரு நிமிடம் முன்பு நான் கூறினதை தியானிப்போம். இது உண்மையென்று சபைக்குத் தெரியும். இது உண்மை என்று விஞ்ஞான உலகிற்குத் தெரியும். “இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையைக் குறித்த செய்தியுடன் யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டது போல, இது அவருடைய இரண்டாம் வருகையைக் குறித்த இரண்டாம் செய்தி,” என்று அந்த ஆற்றங்கரையில் ஒரு சத்தம் உரைத்த போது, அங்கு நின்று கொண்டு இருந்தவர்களில் சிலர் இப்பொழுது இங்கு அமர்ந்து இருக்கின்றனர். அங்கிருந்த அநேகர் இன்னும் உயிரோடிருக்கின்றனர். உங்களுக்கு நினைவிருக்கிறதா-? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி).
409. அந்த ஊழியம் ஒருக்கால் முடிவு பெற்றிருந்தால்-? யோவான் என்ன செய்தான்-? “இதோ. உலகத்தின் பாவங்களைச் சுமர்ந்து தீர்க்கிற தேவாட்டுக் குட்டியே அங்கே உள்ளது'' என்று அறிவித்தவன் யோவான் ஆவான். என் சகோதரரே, இது தான் அந்த மணி நேரமா, அது வந்துவிட்டதா-? அது வந்து விட்டதென்று நான் கூறவில்லை. எனக்குத் தெரியாது. ஆனால் நான் உங்களைக் கேட்கிறேன். நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன். அல்லது, “இதோ, தேவாட்டுக் குட்டி” என்று மறுபடியும் கூறவேண்டிய நேரமா இது-? 
410. அல்லது, மல்கியா 4-ல் கூறப்பட்டுள்ளது போன்று, “பிள்ளைகளின் இருதயங்கள் நம்முடைய பிதாக்களுடைய விசுவாசத்திற்கு திருப்பப்பட வேண்டிய நேரமா இது-? இது வரை தேவனுடைய இரகசியங்களைப் புரிந்து கொள்ளாமல் சாய்வான நிலையில் இருக்கும் சபையை பழைய நிலைமைக்குக் கொண்டு வரும் மகத்தான செயலை இந்த முழக்கம் புரியுமா-? அந்த மகத்தான முழக்கம் எல்லா இடங்களிலும் முழங்குவதை அவர்கள் பார்க்கும் போது, வேதம் கூறினவாறு, அது அவர்களுடைய இருதயங்களைப் பிதாக்களுடைய இருதயங்களுக்குத் திருப்புமா-? அல்லது இதற்கேற்ற செய்தி ஏற்கனவே அளிக்கப்பட்டு விட்டதா-? எனக்குத் தெரியாது. 
411. ஐயன்மீர், இது தான் முடிவின் அடையாளம். அல்லது, அது முடிந்து விட்டது என்பதன் அடையாளமா இது-? அது வேதப்பிரகாரமாக அமைந்து உள்ளதாக எனக்குத்தென்படுகிறது. எனக்குத் தெரியாது. அங்கு தேவ தூதர்கள் வந்தார்கள். ஒரு முழக்கம், இடி முழக்கம் போன்ற ஒன்று, முழு பூமியையும் குலுக்கியது. நான் உண்மையைக் கூறுகிறேன் என்பதை தேவனறிவார்.
412. ஏதோ ஒன்று நிகழவிருக்கின்றது என்பது ஞாபகமிருக்கட்டும். அது என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் இதுவாக அது இருக்குமா-? இதை நான் கூறும் காரணம்: உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்-! ஜெபம் செய்வோம்: (நாம் எப்படி ஜெபம் செய்ய வேண்டும்-?) அவருடைய விசுவாசிகளின் சேனையில் நமக்குரிய ஸ்தானத்தை வகித்துக் கொண்டு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் நினைத்துக் கொண்டு இருப்பதைவிட காலதாமதம் ஆகியிருக்கக் கூடும்.
413. நீங்கள் என்னை அறிந்திருக்கிறீர்கள். என்னைப் பொறுத்த வரையில், நான் இதுவரை உங்களிடம் ஒரு பொய்கூட சொன்னது கிடையாது. “நான் கர்த்தருடைய நாமத்தில் உரைத்தது ஏதாவது நிறைவேறாமல் இருந்ததுண்டா-?'' என்று அன்று சாமுவேல் கேட்ட விதமாகவே நான் இன்று உங்களைக் கேட்கிறேன். இப்பொழுது, நான் உங்களிடம் கூறுகிறேன். இது என்ன என்று எனக்கு தெரியாது. இது என்ன என்று என்னால் கூறமுடியவில்லை. எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் உங்களிடம் சத்தியத்தைக் கூறப் போகிறேன். நான் பயங்கொண்டு இருக்கின்றேன். உங்கள் சகோதரன் என்னும் நிலையில் கூறுகிறேன். நான் சென்ற சனிக்கிழமை முதற்கொண்டு பயந்து கொண்டே இருக்கிறேன்.
414. இது முடிவு காலமாக இருக்கலாம். அல்லது, வானவில்கள் ஆகாயம் முழுவதிலும் வேகமாய்ப் பரந்து, “இனி காலம் செல்லாது'' என்னும் அறிவிப்பு வானங்களில் இருந்து உண்ட கலாம். அப்படியானால், நண்பர்களே, நம் தேவனைச் சந்திப்பதற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வோம். இங்கு நிறைய ஆகாரம் சேமித்து வைக்கப்பட்டு உள்ளது. அதை இப்பொழுது நாம் பயன்படுத்திக் கொள்வோமாக-! இப்பொழுது அதை நாம் பயன்படுத்திக் கொள்ளட்டும். இந்தப் பீடத்தின் மீது நின்ற வண்ணம், “ஆண்டவராகிய இயேசுவே, என்மீது கிருபை யாயிரும்'' என்று நான் தேவனிடம் முறையிடுகிறேன். என்னால் இயன்றவரை நான் உத்தமமாக வாழ முயன்று வந்திருக்கிறேன். மிகச்சிறந்த முறையில் தேவனுடைய வார்த்தையிலிருந்து செய்திகளை அளிக்க நான் பிரயாசப்பட்டு வந்திருக்கிறேன். தேவன் என் இருதயத்தை அறிவார். 
415. ஆனால் அந்த தூதர்களின் கூட்டம் இறங்கி வந்த போது, நான் ஸ்தம்பித்துப் போனேன். நீண்ட நேரமாக எனக்கு உணர்வு நிலையே இல்லாமலிருந்தது. அதிக நேரம் கடந்த பிறகு, நான் அறையில் நடமாட முயன்றேன். ஆனால் என் கழுத்துத் தொடங்கி கீழ்வரையிலும், முதுகெலும்பு முழுவதிலும் உணர்ச்சி இன்மை உண்டானது. என் கையும் மரத்துப்போனது. நாள் முழுவதும் நான் பிரமை பிடித்தவன் போல் இருந்தேன். நான்- நான் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டேன். 
416. ஞாயிறன்று பிரசங்கம் செய்ய நான் இங்கு வந்திருந்தேன். பிரசங்கம் செய்வதின் மூலம், அதனின்று விடுபட முயன்றேன். ஆனால் திங்கட்கிழமை அன்றும் அது என்னை வாட்டியது. அந்த பிரமை இப்பொழுதும் உள்ளது. 
417. எனக்குத் தெரியவில்லை. ஐயன்மீர், எனக்குத் தெரியவில்லை. என் சகோதரர் என்ற முறையில் நான் உண்மையை உங்களிடம் கூறுகின்றேன். எனக்குத் தெரியாது. இது தான் இதுதான் சமயமா-?  ஊழி... அந்த இரகசியம் எல்லாம் முடிந்து விட்டதா-? முழங்குதல் அனைத்தும் முடிந்து விட்டதா-? அவர் வரும் போது, எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்வதற்கென இங்கு குழுமியுள்ள இந்த சிறு குழு, எடுக்கப்படுதலுக்கேற்ற விசுவாசத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அந்த ஏழு இடி முழக்கங்களும் ஏதோ ஒன்றைக் கூற ஆயத்தமாயிருக்கின்றனவா-? அந்த தூதர்கள் எவ்வளவு விரைவில் பூமிக்கு வந்தனரோ, அவ்வளவு விரையில் நாம் “மறுரூபப்படுவோம், ஒரு நொடியில், ஒரு இமைப்பொழுதில், நித்திரை அடைந்தவர்களுடன் கூட நாமும் ஒருமித்து எடுத்துக் கொள்ளப்பட்டு, கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்போம்.''
என்னுடைய ஜெபம் : 
418. தேவனே, அப்படியிருக்குமானால்... ஆண்டவரே, எனக்குத் தெரியாது ஆண்டவரே, நான் சபைக்கு இதை எடுத்துக் கூறினேன். அப்படியிருக்குமானால், எங்கள் இருதயத்தை ஆயத்தப்படுத்தும்,'' என்பதே என் விண்ணப்பமாயுள்ளது. ஆண்டவரே, அந்த மகத்தான மணி நேரத்திற்காக எங்களை ஆயத்தப்படுத்தும். காலம் முழுவதும் தீர்க்கதரிசிகளும் ஞானிகளும் இந்த நேரத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தனர். ஆண்டவரே, என்ன கூறுவதென்றே எனக்குத் தெரியவில்லை. “இப்பொழுது வர வேண்டாம் ஆண்டவரே,'' என்று சொல்வதற்கு பயமாயுள்ளது. இச்சீர்கேடான நிலையில் உலகத்தைக் காணும்போது, எனக்கு அவமானமாயுள்ளது. அதைக் குறித்து நான் ஒன்றுமே செய்யவில்லையே என்று வெட்கப்படுகிறேன். என்னைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். ஆண்டவரே, நாளை என்று ஒன்று இருக்குமானால், என் இருதயத்தை அபிஷேகித்து, என்னை இன்னும் அதிகமான வல்லமையினால் நிரப்பி, என்னால் இயன்ற வரை மற்றவர்களை உம்மிடத்தில் கொண்டு வர உதவி புரியும். நான் உம்முடையவன். 
419. ஆலயத்தில் தேவ தூதர்கள் இங்கும் அங்கும் பறந்து, சிறகுகளால் தங்கள் முகங்களையும் கால்களையும் மூடிக் கொண்டு, மீதியுள்ள சிறகுகளால் பறந்து, “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்'' என்று துதிக்கும் காட்சியை ஏசாயா கண்ட போது எத்தகைய உணர்வை அடைந்தானோ, அது போன்ற உணர்வை நான் பெற்றுள்ளேன். அந்த வாலிப தீர்க்கதரிசி அக்காட்சியைக் கண்டு எவ்வளவாக நடுக்கம் கொண்டான்-! அவன் அதைக் கண்ட போது, இதற்கு முன்பு அவன் தரிசனங்களைக் கண்டிருந்த போதிலும், “ஐயோ அதமானேன்,'' என்று கதறினான். 
420. பிதாவே, அன்றிரவு - இல்லை, அன்று காலை - அந்த தூதர்களை நான் கண்ட போது, நானும் அத்தகைய உணர்வு பெற்றேன் என்று நினைக்கிறேன். ஐயோ-! நான் அதமானேன். நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்; அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன். பிதாவே, என்னை சுத்திகரியும். 
421. இதோ, அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும், ஆண்டவரே. அது என்னவாய் இருந்தாலும், கடந்த 30 ஆண்டுகளாக நான் நின்று கொண்டு வந்திருக்கும் இந்த பிரசங்க பீடத்தின் மேல் இப்பொழுது நிற்கும் போது, நான் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டுமென்று நீர் விருப்பம் கொண்டு இருந்தால், இதோ, அடியேன் இருக்கிறேன். நான் ஆயத்தமாயிருக்கிறேன். உமது கண்களில் எனக்கு தயை கிடைக்கட்டும். நான் தாழ்மையுடன் ஜெபிக்கிறேன். 
422. இந்த சிறு மந்தைக்காக நான் ஜெபிக்கிறேன். அவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் என்னைக் கண்காணியாக வைத்து, அவர்களைப் போஷிக்கச் செய்தார். அவர்களை ஜீவ அப்பத்தினால் போஷிக்க, எனக்குத் தெரிந்த மட்டும், நான் எல்லாவற்றையும் செய்து வந்திருக்கிறேன். அநேக ஆண்டுகளுக்கு முன்பு நான் கண்ட தரிசனத்தில், மேற்கு திசையில் ஒரு பெரிய திரை தொங்கிக் கொண்டு இருப்பதையும், ஜீவ அப்பம் என்னும் மலை அங்கு உள்ளதையும் கண்டேன். இது, “நான் அந்த பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாய் இருக்கவில்லை' என்னும் சிறு புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அவை யாவும் இப்பொழுதும் நிறைவேறி, எங்கள் கண்களுக்கு முன்பாக வெளியரங்கமாகின்றது. 
423. நீரே தேவன், உம்மைத் தவிர வேறு தேவனில்லை. ஆண்டவரே, எங்களை ஏற்றுக் கொள்ளும். எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். என் எல்லா அவிசுவாசத்திற்காகவும், என் எல்லா அக்கிரமத்திற்காகவும் நான் மனஸ்தாபப் படுகிறேன். தேவனுடைய பலிபீடத்திற்கு முன்பாக நான் கெஞ்சுகிறேன். 
424. என் முன்னால் இருக்கின்ற இந்த சிறிய சபையுடன், இன்றிரவு நான் வருகின்றேன், விசுவாசத்தால் எடுத்துக்கொள்ளப்படுதலில், இந்த கட்டிடத்தில் இருந்து அசைந்து “உன்னதங்களில் நாங்கள் அமர்ந்து,'' தேவனுடைய சிங்காசனத்தை சுற்றிலும் வருகின்றோம். நீர் எங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்தி, அநேக கிரியைகளை, நீர் செய்ததை நாங்கள் கண்டு, எங்கள் இருதயங்கள் அநேக முறை கொழுந்து விட்டு எரிந்துள்ளன. ஆனால் ஆண்டவரே, இன்றிரவு நான் சோர்ந்து போயிருக்கிறேன். ஐயோ-! நான் அதமானேன். 
425. தேவ தூதர்கள் ஏணியின் மேல் ஏறுவதையும் இறங்குவதையும் யாக்கோபு கண்ட போது, “இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது-! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல,'' என்றான். ஆகவே அங்கே பெத்தேல் ஸ்தாபிக்கப்பட்டது. 
426. தேவனே, ஜனங்கள் அதைப் புரிந்துகொள்ளுவதில்லை. அது மிக்க மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், கர்த்தாவே, ஒரு மகத்தானவருடைய பிரசன்னத்திற்குள், வானத்தின் வல்லமையுள்ள ஒருவரிடம் வருவதென்பது ஒரு மானிடப்பிறவிக்கு எவ்வளவு பயங்கரமான, பீதியான ஒன்றாகும். 
427. சிறு சபையை நான் வழிகாட்டி, வழி நடத்த நீர் அனுப்பினீர். இந்த சிறு சபையின் மன்னிப்பிற்காக நான் ஜெபிக்கின்றேன். கர்த்தாவே, இவர்களை ஆசீர்வதியும். எனக்கு தெரிந்த வரையில், தரிசனங்களும் சொப்பனங்களும், மற்ற காரியங்களும் கூறின விதமாகவே நான் செய்திருக்கின்றேன். கர்த்தாவே, எனக்கு தெரிந்த வரையில் தேவைக்கேற்ப எல்லா ஆகாரத்தையும் நான் இவர்களுக்கு வைத்து இருக்கின்றேன். என்னவாயிருந்தாலும், கர்த்தாவே, நாங்கள் உம்முடையவர்கள். ஆண்டவரே, உம்முடைய கரங்களில் எங்களை சமர்ப்பிக்கின்றோம். எங்களிடம் இரக்கமாயிரும். எங்களை மன்னியும். நாங்கள் பூமியில் இருக்கும் வரை உம்முடைய சாட்சிகளாக இருக்க அருள் புரி யும். பிறகு, வாழ்க்கை முடிவுற்ற பிறகு, உம்முடைய இராஜ்ஜியத்திற்குள் எங்களை அழைத்துக் கொள்ளும். இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கின்றோம். ஆமென். 
428. நீங்கள் ஒவ்வொருவரும், உங்கள் இருதயம் அனைத்தும் சுத்தப்படுத்துங்கள். ஒவ்வொரு காரியத்தையும், ஒவ்வொரு பாரத்தையும் அப்புறமாக வையுங்கள், உங்கள் வழியிலிருந்து அதை எடுத்துப் போடுங்கள். உங்களை எதுவும் அலட்டாத படிக்கு பார்த்துக் கொள்ளுங்கள். பயந்து போகாதீர்கள். பயங்கொள்வதற்கு எதுவுமே இல்லை. இயேசு வருகிறார் என்றால், அது ஒரு மிக... முழு உலகமும் எதற்காக முணகி அழுததோ அது அந்த பொழுதாகும். இப்பொழுது ஏதோ ஒன்று வெளிப் பட்டுக் கொண்டிருக்கிறது என்றால், ஒரு- ஒரு புதிய வருகைக்கு, ஒரு புதிய வரத்தின் புதிய வருகை அல்லது ஏதோ ஒன்று, அது மிகவும் அற்புதமானதாக இருக்கும். எப்படி செல்ல வேண்டுமென்று, சபைக்கு, ஏழு இடி முழக்கங்களின் வெளிப்பாடு, வெளிப்படுத்தப்பட, வருகின்ற சமயமாக அது இருக்குமானால், எனக்கு தெரியாது. நான் எதைப் பார்த்தேனோ அதை கூறி விட்டேன். ஓ, என்னே , என்ன ஒரு சமயம்-! அது ஆழமான மற்றும் பயப்பக்தியான சிந்தனை ஆகும். 
429. ஆகவே நான் செல்ல வேண்டிய நேரமாக அது இருக்குமானால், நான் உம்முடைய... கர்த்தாவே, நான் உம்முடையவன். உம்முடையது முடிவு பெற்றால், வாரும், கர்த்தராகிய இயேசுவே. 
430. அது எங்கிருந்தாலும், அல்லது இது என்ன சமயமாயிருந்தாலும், நான் அவருடையவன். இவ்வுலகை விட்டுப்போக எனக்கு ஆசையுண்டு என்று நான் கூறவில்லை; எனக்கு விருப்பமில்லை. ஒரு குடும்பத்தை நான் பேணிக்காப்பாற்ற வேண்டியவனாய் இருக்கிறேன். பிரசங்கிக்க சுவிசேஷத்தை கொண்டவனாக இருக்கிறேன். ஆனால் அது என் சித்தமல்ல. அது அவருடைய சித்தம். எனக்குத் தெரியாது. 
431. அது என்ன என்பதை மாத்திரம் உங்களிடம் கூறிக் கொண்டிருக்கிறேன், அது என்னவாய் இருந்தாலும், தேவன் அதை நிறைவேற்றுவார். அது என்ன கூற விழைகின்றதோ, எனக்கு தெரிய தது. ஆனால், ஐயன்மீர், இது முடிவாக இருக்குமா-? ஹு-! 
432. சொப்பனங்கள் கண்ட ஆறு பேரும் இப்பொழுது நம்மிடையே உள்ளனர். அவை ஏழு சொப்பனங்களாக இருக்கவில்லை என்பது அதிசயமாயிருக்கிறதல்லவா-? இந்த ஆறு சொப்பனங்களும் ஏதோ ஒன்றிற்கு வழி நடத்தினது என்பது மிகவும் அற்புதமானது. பின்பு அந்த தரிசனம் உடனடியாகத் தொடர்ந்தது. அவர்கள் இங்கு இருக்கின்றனர். ஒருவர் சகோ.ஜுனியர்-ஜாக்ஸன், சகோ.பார்னல் இன்னொருவர் சகோதரி.காலின்ஸ் மற்றொருவர்; சகோதரி.ஸ்டெஃப்பி மற்றொருவர்; சகோ. ராபர்சன் மற்றொருவர்; சகோ.பீலர் மற்றொருவர். அதைக் குறித்து இன்னுமொரு சொப்பனம் உண்டாகவில்லை என்பது பரம பிதாவுக்குத் தெரியும். கடைசி சொப்பனத்தின் முடிவில், ஏழாவது... சகோதரி ஸ்டெஃப்பி சொப்பனம் கண்ட பின் உடனடியாக தரிசனம் உண்டானது. நீங்கள் பாருங்கள்-? நான் எதற்கு இவ்விடம் விட்டுசெல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தெரிகிறதா-? நான் ஏன் போகவேண்டும் என்று உங்களுக்குத் தெரிகிறதா-? நான் கண்டிப்பாக போக வேண்டும். 
433. நண்பர்களே, என்னை நோக்கிப் பார்க்கவேண்டாம். நான் உங்கள் சகோதரன். என் பேரில் கவனம் செலுத்த வேண்டாம். நான் இறக்க வேண்டிய ஒரு மனிதன். எல்லாரையும் போல் நானும் இறக்க வேண்டியவன். எனக்கு செவிக்கொடுக்கச் செய்யாதீர்கள்; ஆனால் நான் உரைத்தவைகளுக்கு மாத்திரம் செவி கொடுங்கள். நான் உரைத்தது செய்தியாகும். செய்தியாளன் பேரில் கவனம் செலுத்தாதீர்-! ஆனால் செய்தியை நன்கு கவனியுங்கள். உங்கள் பார்வை செய்தியாளன் பேரில் அல்ல, செய்தியில் இருக்க வேண்டும். அது என்ன கூறிற்றோ அதன் பேரில் மாத்திரமே நாம் கவனம் செலுத்த வேண்டும். 
434. அதற்கு தேவன் நமக்கு உதவி செய்வாராக என்பதே என் ஜெபமாகும். உங்களிடம் இதை எடுத்துக் கூறவேண்டுமென்று நான் விரும்பவில்லை. ஆனால் எதையும் நான் உங்களிடம் மறைத்து வைக்கமாட்டேன். 
435. இப்பொழுது, எனக்குத் தெரிந்த வரையில், உங்களிடம் நான் கூறட்டும். எனக்குத் தெரிந்த வரையில் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் நான் இவ்விடம் விட்டு டுஸ்ஸானுக்குச் செல்லவேண்டும் (புதன் காலை). நான் பிரசங்கம் செய்வதற்காக அங்கு செல்லவில்லை. நான் அங்கு பிரசங்கம் செய்யப் போவதில்லை. என் குடும்பத்தை அங்கு வைத்து விட்டு, பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்து விட்டு, நான் இங்கும் அங்கும் சென்று கொண்டிருப்பேன். 
436. அந்தச் சிறு கூட்டங்களை நடத்த நான் பீனிக்ஸுக்கு செல்கிறேன். அங்கு சிறிய சிறிய செய்திகளை நான் பிரசங்கிப்பேன். ஆகவே- ஆகவே பிறகு, ஒருக்கால், எனக்கு தெரியவில்லை ... 
437. அங்கு நடக்கவிருக்கும் கன்வென்ஷன் கூட்டங்களில், ஒரு இரவு நான் பிரசங்கம் செய்ய வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர் என்று நினைக்கிறேன். அதைக் குறித்து அவர்கள் ஒன்றுமே கூறவில்லை. நான் அங்கு அழைக்கப்படுவேன் என்று மாத்திரம் கூறினர். அது சரியென்று எனக்குத் தென்படவில்லை. 
438. சகோ.ஷெக்கரியானுக்கும் ‘கர்த்தர் உரைக்கிறதாவது' என்னும் வார்த்தையைக் கொண்டு இருக்கிறேன். ஹு-! ஹு அதைக் குறித்து அவர் என்ன செய்யப்போகிறார் என்று எனக்குத் தெரியாது. அவரிடம் கூறுவதற்கு என்னிடம் ஒரு வார்த்தை உள்ளது. அவர் என்ன செய்யப் போகிறார் என்று எனக்குத் தெரியாது. அதை ஏற்றுக் கொள்வது அல்லது நிராகரிப்பது அவருடைய பொறுப்பு. சென்ற 'சத்தம்,' (Voice) வெளியீட்டை நீங்கள் படித்தீர்களா-? அது ஸ்தாபனமல்ல என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அந்த வெளியீட்டில், தங்கள் பிரமாணத்தை (creed) அவர்கள் பிரகடனம் செய்து உள்ளனர். ஏதாவது ஒன்று ஸ்தாபனமாக மாறினால், அதனின்று நான் விலகி விடுவேன். 
439. சகோ. ஆர்கன்பிரைட்டும், ஏழு ஜனாதிபதிகளின் கீழ் வாஷிங்டனில் அரசியல் நிபுணனாக (diplomat) பணியாற்றிய சகோ.ரோல் என்பவரும் இந்நேரம் ஆப்பிரிக்காவில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நானும் அவர்களும் சகோ. போஸ் (Bro.Boze) என்பவருடன் கூட தென் ஆப்பிரிக்காவிலும் டாங்கனிகாவிலும் கூட்டங்கள் நடத்த உடனே செல்ல வேண்டியவர்களாய் இருக்கிறோம். கர்த்தர் வேறு ஏதாவதை செய்யவில்லை என்றால், அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்குச் சென்று திரும்பி வருவேன். நான் புறப்படும் முன்பு, இங்கு வந்துவிட்டு செல்வேன்.
440. பிறகு, அங்கிருந்து நான் திரும்பி வந்த பிறகு, தேவன் வேறு விதத்தில் என்னுடன் பேசவில்லை என்றால், நான் என் குடும்பத்தை அலாஸ்காவிலுள்ள ஆங்கரேஜ் என்னும் இடத்தில் கொண்டு செல்லவிருக்கிறேன். இது தென்மேற்கு, அது வட மேற்கு. கோடைகாலத்தில் அவர்கள் அங்கு தங்கி இருக்கட்டும். அச்சமயம் டுஸ்ஸானில் சருமம் எரிந்து போகும் அளவிற்கு கடுமையான வெப்பம் உண்டாகி இருக்கும். அவ்வெப்பத்தை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. மேலும் அவர்கள் வீட்டு நினைவால் சோர்வுற்றிருப்பார்கள். நாங்கள் எங்கள் வீட்டை விற்கப் போவதில்லை. அது வீட்டிலுள்ள மரச்சாமான்களுடன் அப்படியே இருக்கும். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
441. கோடை காலம் முடிந்தவுடன், கர்த்தருக்கு சித்தமானால், நான் அலாஸ்காவை விட்டு மத்திய மேற்கிலுள்ள டென்வர் என்னும் இடத்திற்கு செல்ல எத்தனித்து உள்ளேன். தென்மேற்கு, வடமேற்கு, மத்திய மேற்கு எதுவாய் இருந்தாலும், நான், “ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்-?” என்று கேட்டுக் கொண்டு இருப்பேன். 
442. இதற்கிடையில், ஒவ்வொரு செய்தியும் நான் அறிந்த வரை இந்தக் கூடாரத்தில் பிரசங்கிக்கப்படும், இங்கு தான் ஒலிநாடாக்களும் இருக்கும். இது தான் என் தலைமை இருப்பிடம். (Headquarters). 
443. என் குடும்பத்துடன் நான் மேற்கில் தங்க வேண்டும் என்னும் எண்ணம் எனக்கில்லை. நான் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் என்பதை அறிந்து கொள்ளும் வரை, அவர் சமூகத்தை நாடிக் கொண்டே இருப்பேன். 
444. இந்த ஆண்டு எனக்கு உத்தரவு கிடைக்காவிட்டால், அடுத்த ஆண்டு தண்ணீர் குடியாமலும் உணவு உண்ணாமலும் நான் பாலைவனத்துக்குச் சென்று, அவர் எனக்கு உத்தரவு அருளும் வரை அவருக்காக காத்திருப்பேன். நாம், பதறல் கொண்டாக வேண்டும். இது போல் நான் சென்று கொண்டே இருக்க முடியாது. அவர் சித்தம் என்னவென்று நாம் அறிந்து கொள்ள அதில் மாத்திரம் கவனம் செலுத்த வேண்டும். அவருடைய சித்தத்தை அறியாமலிருந்தால், அதை எப்படி நிறைவேற்ற முடியும்-? 
445. அந்த தரிசனம் எனக்கு உண்டானதால், அதை நான் ஆராய்ந்து கொண்டே இருக்கிறேன். பாருங்கள்-? அந்த அழைப்பு வரும் வரை, நான் சுவிசேஷ ஊழியம் செய்து கொண்டு சுற்றி வருவேன். அந்த மூலைக்கல்லை நாம் நாட்டின போது, “சுவிசேஷகனுடைய வேலையைச் செய்'' என்னும் கட்டளை நான் பெற்றது உங்களுக்கு நினைவிருக்கிறதா-? நான் சுவிசேஷகன் என்று அவர் கூறவில்லை; சுவிசேஷகனுடைய ஊழியத்தை நான் செய்ய வேண்டும் என்று தான் அவர் கூறினார். அந்த ஊழியத்தில் மாறுதல் ஏற்படும் வரை, ஒருக்கால் நான் இந்த ஊழியத்தில் நிலை கொண்டிருக்க வேண்டும். வரப் போகும் அந்த ஊழியம் வித்தியாசப்பட்ட ஒன்றாக இருக்கக்கூடும். எனக்குத் தெரியாது.
446. நீங்கள் அவரை நேசிக்கின்றீர்களா-? (சபையார் “ஆமென்,'' என்கின்றனர்-ஆசி) அதைக் குறித்து மிக நிச்சயமாக இருங்கள். நிச்சயமாக இருங்கள், கர்த்தரை உண்மையாக நேசிக்கக் கவனமாயிருங்கள்.
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுபெலன் அடைந்து கழுகைப்போல செட்டையடித்து எழும்பி சென்றிடுவர் ஓடினாலும் இளைப்படையார் நடந்தாலும் சோர்ந்து போகார் ஆண்டவரே, உமக்குக் காத்திருக்க எங்களுக்குப் போதியும்
நான் அவரை நேசிக்கிறேன். நீங்களும் அவரை நேசிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். இப்பொழுது நாளை இரவு.... 
447. நான் எல்லாவற்றையும் வெளிப்படையாகக் கூறி விட்டேன் என்று நினைக்கிறேன். இல்லையா-? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி) எனக்குத் தெரிந்த வரை நான் விளக்கி விட்டேன். இவ்வளவு தான் எனக்குச் சொல்லத் தெரியும். வேறு ஏதாவது எனக்கு வெளிப்பட்டால், உடனே நான் அதை உங்களுக்கு அறிவிப்பேன். அதை அறிய வேண்டுமெனும் ஆவல் உங்களுக்கு உண்டு என்று எனக்குத் தெரியும். நானும் அறிய ஆவல் கொண்டிருக்கிறேன். அதன் அர்த்தம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. நான் எங்கே போகிறேன் என்றும் அறியேன்... என்ன நேரிடப்போகிறது என்றும் எனக்குத் தெரியாது. நான்- நான் மா... தேவனுடைய கிருபையால் நான் புறப்பட்டு செல்லப் போகிறேன் என்று மாத்திரம் எனக்குத் தெரியும். அங்கு சென்ற பின்பு, ஒருக்கால் அவர் என்னிடம் இதைப்பற்றி கூறலாம். ஆனால் இப்பொழுது நான் செய்ய வேண்டிய பணி புறப்பட்டுச் செல்லுதலாகும். ஒருக்கால் அங்கு இரண்டு வாரங்கள் மாத்திரமே தங்கியிருந்து, பிறகு வேறொரு இடத்திற்குச் செல்லலாம். நான் மீண்டும் இங்கு வரலாம். எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான்... 
448. அந்த தரிசனத்தில் என் மனைவியும் பிள்ளைகளும் இருந்தனர். நான் மூடப்பட்ட ஒரு வாகனத்தில் இருந்தேன். நான் அங்கு நடந்து சென்ற அந்த நிமிடமே அங்கிருந்த அந்த வாகனத்தில் இருந்தேன். இன்னும் இரண்டு நாட்களில் நாங்கள் அவ்வித மாகவே என் மூடப்பட்ட வாகனத்தில் செல்லப் போகின்றோம். எங்கு செல்ல வேண்டும் என்றோ, அங்கு சென்றால் என்ன செய்ய வேண்டும் என்றோ எங்களுக்குத் தெரியாது. நாங்கள் ஒன்றும் அறியாமலே செல்லப் போகிறோம். 
449. கர்த்தர் நமக்கு அதிசயமானவராய் இருக்கிறார். அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள். அவர் கீழ்ப்படிதல் வேண்டும் என்கிறார்.
''எங்கே செல்ல வேண்டும்-?'' "அது உன் வேலையல்ல, போய்க்கொண்டேயிரு.''
“ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்-?'' 
450. “அதைப் பற்றி உனக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. என்னைப் பின்பற்று.'' ஹு-ஹூம்-ஹும் “நடந்து கொண்டேயிரு.'
“நான் எங்கு நிறுத்த வேண்டும்-?” “அதைப்பற்றி உனக்கென்ன-? நடந்து கொண்டே இரு.''
எனவே, இதோ இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் செல்கிறேன். ஹு-ஹும். ஆமென்.
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் 
முந்தி அவர் நேசித்ததால் 
சம்பாதித்தார் என் இரட்சிப்பை 
கல்வாரி மரத்தில் 
நேசிக்கிறேன் (அவரே என் ஜீவன்) நேசிக்கிறேன் (நான் வாழ்ந்த யாவற்றிற்கும்) 
முந்தி அவர் நேசித்ததால், 
சம்பாதித்தார் என் இரட்சிப்பை 
கல்வாரி மரத்தில்.
451. ஐயன்மீர், இது தான் அந்த சமயமா-? (சகோதரன் பிரான்ஹாம் மற்றும் சபையார், நேசிக்கிறேன் என்ற முழு பல்லவியை வாய் மூடி இசைக்கின்றனர்-ஆசி). ஆகவே மறுபடியுமாக அதை நாம் பாடுகையில், உங்கள் அருகில் உள்ளவரிடம் கைகளைக் குலுக்குங்கள். “சகோதரனே, சகோதரியே, எனக்காக ஜெபியுங்கள். நான் உங்களுக்காக ஜெபிக்கின்றேன்,” “நான்...,'' என்று கூறுங்கள். 
452. (சகோ.பிரான்ஹாம் பின்னால் திரும்புகின்றார்-ஆசி). சகோ.நெவில், எனக்காக ஜெபியுங்கள். (சகோ.நெவில், 'சகோதரனே, அதை நான் செய்வேன். எனக்காக நீங்கள் ஜெபம் செய்யுங்கள் சகோதரனே. உமக்கு நன்றி,” என்று கூறுகின்றார்) மிகவும் உண்மையாக-! தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரன்..-?... எனக்காக ஜெபியுங்கள்... எனக்காக ஜெபியுங்கள்.
(சகோதரன் பிரான்ஹாம் வாயை மூடி பாடலை இசைக்கின்றார்-ஆசி) சம்பா ...
453. எனக்காக ஜெபியுங்கள்...-?... எனக்காக ஜெபியுங்கள்...-?... எனக்காக ஜெபியுங்கள்...-?... எனக்காக ஜெபியுங்கள். எனக்காக ஜெபியுங்கள்........ எனக்காக ஜெபியுகள்.
... கல்வாரி மரத்தில், 
நம்முடைய கரங்களை அவரை நோக்கி இப்பொழுது உயர்த்துவோம்.
நேசிக்கிறேன்... (உண்மையான நேசம்-!) 
முந்தி அவர் நேசித்ததால் 
சம்பாதித்தார் என் இரட்சிப்பை 
கல்வாரி மரத்தில், 
ஆம், நேசிக்கிறேன் (என் முழு இருதயத்தோடும்). 
454. சகோ.நெவிலைப் பின்பற்றுங்கள். நான் திரும்பிச் செல்கின்றேன். கூட்டத்திற்கான நேரத்தை அறிவியுங்கள். 
(சகோ.நெவில் சபையாருடன் சேர்ந்து "நேசிக்கிறேன்,'' என்று தொடர்ந்து பாடி ஆராதனையை முடிக்கின்றார்-ஆசி).